Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கிராம்பு தண்ணீரை கூந்தலுக்கு யூஸ் பண்ணுனா... நீங்க என்னென்ன நன்மைகளை பெறுவீங்க தெரியுமா?
நம் கூந்தல் வளர்ச்சி சிறப்பாக இருக்க நாம் ஏராளமான முறைகளை பின்பற்றி வருகிறோம். இருப்பினும் இயற்கை வழிகள் என்றால் நமக்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அதில் ஒன்று தான் கிராம்பு தண்ணீர். இந்த கிராம்பு தண்ணீரில் உங்கள் கூந்தலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கிராம்பு தண்ணீரை உங்கள் கூந்தலில் ஸ்ப்ரே செய்து விட்டாலே போதும் கூந்தல் அடர்த்தியாகவும் நல்ல நீளமாகவும் வளரும். முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட இந்த கிராம்பு தண்ணீர் உதவுகிறது.

கிராம்பை உங்கள் உணவில் மட்டும் பயன்படுத்தாமல் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தி எளிதில் நீங்கள் பயனடைய முடியும். சரி வாங்க கிராம்பைக் கொண்டு உங்கள் கூந்தல் வளர்ச்சியை எப்படி மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
கிராம்பு தண்ணீர் என்றால் என்ன?
கிராம்பு தண்ணீர் என்பது சில கிராம்புகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து சூடாக்கி கொள்ள வேண்டும். பிறகு கிராம்பில் உள்ள சத்துக்கள் நன்றாக தண்ணீரில் இறங்கும் வரை காத்திருக்க வேண்டும்.
கிராம்பு நீரில் யூஜெனோல் என்ற பொருள் நிறைந்துள்ளது. இது ஆன்டி பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. இந்த கிராம்பில் உள்ள பினோலிக் அமிலம், ஃப்ளவனாய்டுகள் உங்கள் கூந்தலுக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
கிராம்பு தண்ணீர் கூந்தல் வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது?
உச்சந்தலையில் ஏற்படும் தொற்று, போதிய போஷாக்கு இல்லாமல் கூந்தல் வளர்ச்சி நிறைய பேருக்கு குறைந்து போகும். அதை தடுக்க கிராம்பு தண்ணீர் உதவுகிறது. கிராம்பு தண்ணீரில் யூஜெனால் போன்ற பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன.
அவை செயலற்ற கூந்தலுக்கு ஊட்டமளித்து கூந்தலை வலுவாக்குகிறது. கூந்தலுக்கு சிறந்த புத்துணர்ச்சியை அளிக்கிறது. புதியதாக முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடி உதிர்தலுக்கு காரணமான பொடுகு மற்றும் பூஞ்சை தொற்றுகளை போக்க உதவுகிறது.
கிராம்பு தண்ணீரின் பயன்கள்
முடி வளர்ச்சியை தூண்டுகிறது
கிராம்பு தண்ணீர் முடி வளர்ச்சியை தூண்டவும், முடி உதிர்தலை தடுக்கவும் உதவுகிறது. கிராம்புகளில் உள்ள பினாலிக் அமிலம் முடி வளர்ச்சியை கட்டுபடுத்தும் மரபணுக்களை செயல்படுத்துகிறது.
ஆக்ஸினேற்ற அழுத்தத்தை தடுக்கிறது
சிலருக்கு மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு, சூரிய ஒளி பாதிப்பு, தூக்கம் மற்றும் உணவுப் பழக்கம் இவற்றால் ப்ரீ ரேடிக்கல் பிரச்சினை ஏற்படலாம். அதாவது ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் உங்கள் கூந்தல் பிரச்சனை பாதிப்படையலாம்.
ஆக்ஸினேற்ற அழுத்தம் உங்களுக்கு அலோபீசியா போன்ற கூந்தல் உதிர்தல் பிரச்சினையை உண்டாக்குகிறது. கிராம்பில் பாலிபினால்கள் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தம் காரணமாக ஏற்படும் முடி உதிர்தலை குறைக்கிறது.
பொடுகுத் தொல்லையை போக்க உதவுகிறது
மலாசீசியா ஈஸ்டின் என்பது அதிகப்படியான உற்பத்தி பொடுகு உற்பத்தியை குறிக்கிறது. பொடுகுத் தொல்லைக்கு தீர்வாக கிராம்பு தண்ணீர் உதவுகிறது. கிராம்பில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்து போராட உதவுகிறது.
பொடுகில் அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் காணப்படுகிறது. இது உச்சந்தலையில் உள்ள எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது. உச்சந்தலையில் உள்ள அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை போக்க உதவுகிறது.
கூந்தலில் உண்டாகும் கெட்ட வாசனையை போக்குகிறது
உச்சந்தலையை சுத்தமாக வைக்காமல் இருப்பது, வியர்வை இவற்றால் உச்சந்தலையில் துர்நாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த துர்நாற்றத்தை போக்க கிராம்பு தண்ணீர் உதவுகிறது. கிராம்பு நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
ஃபோலிகுலிட்டிசி மற்றும் ரிங்வோர்ம் போன்ற உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கிராம்பு நீரின் நறுமணம் உங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும். உச்சந்தலையை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
பேன் தொல்லைக்கு சிகிச்சை அளிக்கிறது
கிராம்பு எண்ணெய் பல நூற்றாண்டுகளாக பேன் தொல்லைக்கு சிகிச்சை அளிக்கிறது. 51 பேர்கள் கலந்து கொண்ட ஆய்வில் சூரிய காந்தி எண்ணெயில் கிராம்பு எண்ணெயை கலந்து பயன்படுத்தி வந்தனர். 2 மணி நேரத்திற்குள் இந்த கலவையை 90% பேன்களை தலையில் இருந்து ஒழித்தது.
முடியின் வலிமையை அதிகரிக்கிறது
கிராம்பில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை காணப்படுகிறது. இது முடியின் தண்டை வலுப்படுத்தவும், முடி உடையாமல் காக்கவும் உதவுகிறது.
இள நரையை தடுக்க உதவுகிறது
ஆக்ஸினேற்ற அழுத்தம் உங்கள் கூந்தலை சீக்கிரமே வெள்ளையாக்கி விடும். தலைமுடியில் உள்ள மெலானின் பாதிப்பால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. கிராம்பு நீரில் ஆன்டி ஆக்ஸிடன்கள், பாலி பினால்கள், ஆக்ஸினேற்ற சேதத்தை எதிர்த்து உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க கிராம்பு தண்ணீர் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
