For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க அக்குள் பகுதி கருப்பா இல்லாமலும் துர்நாற்றம் இன்றியும் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!

|

நம் உடலின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள், அதன் வாசனை என எல்லாம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக இருக்கும். உடலில் பெரும்பலான மக்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை அக்குள் பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவது மற்றும் கருப்பாக இருப்பது. இது உங்களை அசெளகரியமாக உணர வைக்கும். நீங்கள் விரும்பும் ஆடை அணிவதில் இருந்து, அலுவலுகத்தில் நீங்கள் இயல்பாக இருக்க முடியாது. எந்த நேரமும் நீங்கள் உங்கள் அக்குளை நினைத்து கவலையடையலாம். உங்கள் அக்குள் பகுதி கருப்பாக இருப்பதற்கு மரபியல், உடல் பருமன், அலுமினியம் மற்றும் கடுமையான இரசாயனங்கள் கொண்ட டியோடரண்டுகளின் பயன்பாடு, ஷேவிங் செய்வதால் ஏற்படும் சிராய்ப்பு அல்லது இறந்த சரும செல்கள் குவிவதற்குக் காரணமான தோல் உரிதல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

அக்குள் கருமை என்பது பலருக்கு இருக்கும் பொதுவான கவலையாக உள்ளது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு தரும் சில வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் அக்குள் நிறமியை எதிர்ப்பதற்கு உதவும் சில எளிய குறிப்புகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள் மற்றும் கீரைகளைச் சேர்க்கவும்

பழங்கள் மற்றும் கீரைகளைச் சேர்க்கவும்

உங்கள் உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும். ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரோட்டீன்கள் உங்கள் அக்குள் பகுதியில் நிறமிகள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

ஹாட்-வாக்சிங் செய்வதைத் தவிர்க்கவும்

ஹாட்-வாக்சிங் செய்வதைத் தவிர்க்கவும்

சூடான மெழுகு, முடி அகற்றும் கிரீம்கள் மற்றும் அக்குள் பகுதியில் த்ரெடிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மெழுகு செயல்முறை தோலின் மெல்லிய அடுக்கை நீக்குகிறது. இது நோய்தொற்று மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம். நீண்ட காலமாக, அப்படியே இருப்பது உங்கள் தோல் அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து கருமையாக மாறும். சிறந்த முடிவுகளுக்கு ஷேவிங் அல்லது லேசர் முடி குறைப்பு போன்ற பயன்பாட்டை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.

இரசாயன எரிச்சலை தவிருங்கள்

இரசாயன எரிச்சலை தவிருங்கள்

அக்குள் துர்நாற்றம் நம்மை அசெளகரியமாக உணர வைக்கும். வெளியே செல்லும்போது அலுவலகத்தில் இருக்கும்போது அக்குள் துர்நாற்றம் நமக்கு கவலையளிக்கும். மேலும் டியோடரண்டுகள் வரும்போது நாம் அதை வாங்கி மனக்கிளர்ச்சியுடன் பயன்படுத்துகிறோம். இதனால் நம் அக்குள் பகுதியில் எரிச்சல் ஏற்படலாம்.

இயற்கை தயாரிப்புகள்

இயற்கை தயாரிப்புகள்

பராபென்ஸ், ட்ரைக்ளோசன், அலுமினியம் போன்ற பல்வேறு எரிச்சலூட்டும் பொருட்கள் டியோடரண்டுகளில் காணப்படுகின்றன. அவை தோல் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உங்கள் சருமம் கெட்டியாகவும் கருமையாகவும் இருக்கும். பாதுகாப்பான பொருட்கள் மற்றும் நச்சுகள் இல்லாத இயற்கையான பொருட்களை பயன்படுத்தவும். இது அக்குள்களுக்கு ஊட்டமளித்து ஈரப்பதமூட்டுவதுடன் வீக்கமடைந்த சருமத்தையும் ஆற்றும்.

கிளைகோலிக் அமிலம்

கிளைகோலிக் அமிலம்

கிளைகோலிக் அமிலம் அக்குள் நிறமிக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. சிறந்த உரித்தல் செயல்முறை மூலம், இது உங்களின் வியர்வையை உடைக்கும் பாக்டீரியாக்களை நீக்கி, துர்நாற்றத்தை நீக்குகிறது. உங்கள் அக்குள்களை சுத்தம் செய்த பிறகு, வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். ஒரு புதிய தயாரிப்பை முயற்சி செய்யும்போது எப்போதுமே பேட்ச் சோதனையுடன் தொடங்க வேண்டும். சிறிய அளவிலான தயாரிப்பை சருமத்தின் சுத்தமான பகுதியில் தடவவும். அதைத்தொடர்ந்து சிவத்தல், எரிச்சல், அரிப்பு அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

தொடர்ந்து சுத்தம் செய்யுங்கள்

தொடர்ந்து சுத்தம் செய்யுங்கள்

முகத்தைப் போலவே, அக்குள்களும் தோலின் உணர்திறன் மற்றும் எரிச்சலால் பாதிக்கப்படலாம். அக்குள் தோலின் மடிப்பு காரணமாக, காற்றோட்டம் இல்லாததால் ஈரப்பதமாக இருக்கும். இது பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகிறது. இந்த மென்மையான பகுதியில் கரடுமுரடான மற்றும் வறட்சியை நீக்க, வாரத்திற்கு இரண்டு முறை தோல் உரித்தல் செயல்முறையை செய்யுங்கள். இது இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இது அதிக வியர்வையை கட்டுப்படுத்தி நீண்ட கால புத்துணர்ச்சியை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How men can reduce underarm pigmentation in tamil

How men can reduce underarm pigmentation in tamil.
Story first published: Thursday, August 11, 2022, 15:20 [IST]
Desktop Bottom Promotion