Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க யோனியில் துர்நாற்றம் வீசுதா? அப்ப இந்த எண்ணெய்கள அந்த இடத்தில் யூஸ் பண்ணுங்க...சரியாகிடுமாம்!
உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான சில சிறந்த அத்தியாவசிய எண்ணெய்களை மருத்துவரின் ஆலோசனை பேரில் நீங்கள் பயன்படுத்தலாம்.
உடலில் துர்நாற்றம் வீசினால் யாருக்குதான் பிடிக்கும். அதுவும் உங்கள் அந்தரங்க பகுதியில் இருந்து வெளிவரும் வாசனை குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். யோனி நாற்றம் பெண்ணின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இது சாதாரணமானது என்று நாங்கள் அடிக்கடி கூறுகிறோம். ஆனால் சில வாசனைகள் உங்களுக்கு கவலையை அளிக்கலாம் மற்றும் அசெளகாரியத்தை ஏறப்டுத்தலாம். ஆரோக்கியமான யோனியில் வாசனை இருக்கும். இது அண்டவிடுப்பின் சுழற்சியில் கூட மாறக்கூடும். சில நேரங்களில் பெண்களின் யோனியில் துர்நாற்றம் மற்றும் மீன் துர்நாற்றம் போன்றவை வீசக்கூடும். இவை, உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி கூறுகின்றன.

மேலும், துர்நாற்றம் வீசும் யோனியை கவனிக்காமல் இருப்பது, உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். யோனி துர்நாற்த்தை போக்க அத்தியாவசிய எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தலாம். பிறப்புறுப்பு வாசனை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் யோனி வாசனையை எது பாதிக்கலாம்?
யோனி நாற்றம் மிகவும் பொதுவானது மற்றும் அது அவ்வப்போது மாறும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. உங்கள் யோனி வாசனை எப்படி இருக்கும் என்பதைப் பாதிக்கும் பின்வரும் உடல் மாற்றங்கள்:
- உங்கள் மாதவிடாய் சுழற்சி
- வழக்கமான சுகாதாரப் பழக்கம்
- பாலியல் செயல்பாடுகள்
- உடல் செயல்பாடுகள்
ஒவ்வொரு பெண்ணின் யோனியும் அங்கு வாழும் நுண்ணிய நுண்ணுயிரிகளால் ஒரு தனித்துவமான வாசனையைக் கொண்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் வாசனையை கூட கவனிக்க மாட்டீர்கள். ஆனால் பாக்டீரியாவின் சமநிலை சீர்குலைந்தால், உடலின் தனிப்பட்ட பாகங்களில் இருந்து வெளிப்படும் ஒரு வலுவான துர்நாற்றத்தை நீங்கள் உணரலாம். அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவது உங்கள் யோனி வாசனையை நல்ல முறையில் மாற்ற உதவும்.

பிறப்புறுப்பு சுகாதாரத்திற்கான அத்தியாவசிய எண்ணெய்கள்
பல நிபுணர்கள் உங்கள் யோனியை சுத்தமாகவும் நல்ல வாசனையாகவும் வைத்திருக்க அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான சில சிறந்த அத்தியாவசிய எண்ணெய்களை மருத்துவரின் ஆலோசனை பேரில் நீங்கள் பயன்படுத்தலாம்.

பக்கவிளைவுகள் இல்லாதவை
கடுமையான இரசாயனங்கள் அங்குள்ள மென்மையான தோலை சேதப்படுத்தும் மற்றும் அதன் இயல்பான pH சமநிலையை சீர்குலைக்கும். இருப்பினும், அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவது உங்கள் நெருக்கமான சுகாதாரத்தை பராமரிக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். அவை பயன்படுத்த எளிதானவை மற்றும் எந்த பக்க விளைவுகளும் இல்லை. எச்சரிக்கையின் ஒரே வார்த்தை என்னவென்றால், அத்தியாவசிய எண்ணெய்கள் எப்போதும் கேரியர் எண்ணெயுடன் நீர்த்த வடிவத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அது சிகிச்சையளிக்கப்பட்ட பகுதியில் எரியும் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

தேயிலை மர எண்ணெய்
இந்த அத்தியாவசிய எண்ணெயின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொதுவான நோய்களுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 3-4 துளிகள் தேயிலை மர எண்ணெயை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து, உங்கள் பிறப்புறுப்பின் வெளிப்புறத்தை துடைக்கவும். இது ஈஸ்ட் தொற்றுகளை கட்டுப்படுத்தவும் உதவும். உங்களுக்கு ஏதேனும் தொற்று இருந்தால் இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை யோனிப் பகுதியில் பயன்படுத்தவும்.

லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் இனிமையான மணம் கொண்ட எண்ணெய் பாக்டீரியா தொற்று மற்றும் பிறப்புறுப்பு டியோடரைசராக அற்புதங்களைச் செய்கிறது. குளித்த பிறகு 1 டேபிள் ஸ்பூன் விட்ச் ஹேசல் மற்றும் 200 மிலி தண்ணீருடன் 1-10 சொட்டுகளை சேர்த்து, யோனி பகுதியை கழுவ வேண்டும்.

ஆர்கனோ எண்ணெய்
ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் தொடர்ச்சியான துர்நாற்றங்கள் இரண்டையும் ஆர்கனோ எண்ணெயுடன் திறம்பட குணப்படுத்த முடியும். இந்த எண்ணெயில் இருந்து ஒரு ஸ்ப்ரேயை தயாரித்து, அதை மேற்பூச்சாகப் பயன்படுத்துவதே இதைப் பயன்படுத்த எளிதான முறையாகும். அல்லது தண்ணீரையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்
பழங்காலத்திலிருந்தே, அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வு. இது அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் நெருக்கமான பகுதியில் உள்ள ஈஸ்ட் மற்றும் மருந்து-எதிர்ப்பு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். நெருக்கமான பகுதியை சுற்றி துடைக்கவும்.

புதினாக்கீரை எண்ணெய்
புதினாக்கீரை எண்ணெய் இயற்கையான முறையில் பிறப்புறுப்பு துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு சிறந்தது. சுமார் 200 மில்லி தண்ணீரில் 2-5 சொட்டுகளை கலந்து, குளித்த பிறகு யோனி பகுதியின் வெளிப்புறத்தில் தடவவும்.

இறுதிக்குறிப்பு
இந்த அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், உடலுறவின் போது அரிப்பு, எரிதல், வலி போன்றவற்றை ஏற்படுத்தும் தொற்று இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications