For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இளமைக்கான இரகசியம் இதுதான்..!

  By Haripriya
  |

  நம்ம எல்லோருக்குமே திரைப்படம் பார்ப்பது மிகவும் பிடித்தமான ஒன்றே. முன்பெல்லாம் ஓய்வு நேரங்களில் மட்டும் பல வகையான திரைப்படங்களை பார்த்து கொண்டிருந்த நாம், இன்று எல்லா நேரங்களிலும் படங்கள் பார்க்க தவறுவதில்லை. குறிப்பாக நமக்கு பிடித்த கதாநாயகன், கதாநாயகி படங்களை அதிகம் விரும்பி நாம் பார்ப்போம். அவர்களின் நடிப்பு திறமை ஒரு புறம் இருக்க, அவர்களின் அழகிற்காகவே அப்படங்களை மறக்காமல் பார்த்து மகிழ்வோம்.

  Natural Beauty Secrets of Nayanthara

  நம்மில் பலருக்கு அவர்களை போன்றே அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்புதான். அவர்கள் பயன்படுத்தும் சில அழகு குறிப்புகளே நம்மை அவர்களை போல அழகு படுத்தி கொள்ள உதவும். இந்த பதிவில் அதிக இளைஞர்களுக்கு பிடித்தமான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அழகிற்கான இரகசியத்தை தெரிந்து கொண்டு அதன்படி நாமும் அழகாக மாறலாம்...!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நயனின் இளமை இரகசியம்...!

  நயனின் இளமை இரகசியம்...!

  நயன்தாரா அவர்களின் இளமைக்கான இரகசியம் மிகவும் சுலபமானதே. நயன் எப்போதும் அதிக தண்ணீர் குடித்து கொண்டே இருப்பாராம். அதிக நீர் குடிப்பதால் மிகவும் இளமையாக இருக்க முடியும் என வல்லுநர்கள் கூட கூறுகின்றனர். அத்துடன் அதிக பழ ஜுஸ்களை அருந்துவார். பழங்களில் உள்ள இயற்கையான சத்துக்கள் நயன்தாராவின் உடலை அழகாக பராமரிக்க உதவும்.

  ஆயுர்வேதா...!

  ஆயுர்வேதா...!

  ஒருவர் நீண்ட நாட்கள் அழகாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்றால் இயற்கை முறையே சிறந்த வழியாகும். அதிலும் குறிப்பாக இந்த ஆயர்வேத மருத்துவம் அற்புதமான ஒன்று. நயனும் இதைத்தான் செய்து வருகிறார். இவர் எப்போதும் இயறக்கை சார்ந்த அழகியல் பொருட்களையே உபயோகிப்பாராம். இதுவே நயனின் அளவற்ற அழகிற்கு காரணம்.

  கட்டுக்கோப்பான உடல் அமைப்பு..!

  கட்டுக்கோப்பான உடல் அமைப்பு..!

  ஒருவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்பாக ரசிகர்கள் அழைக்கிறார்கள் என்றால் அதற்கு பல்வேறு முக்கிய காரணிகள் இருக்கும். குறிப்பாக நயனை அவ்வாறு அழைக்க அவரின் நடிப்பு திறனையும் தாண்டி, அவரின் ஆரோக்கியமான இளமையான உடலும், முகமும் ஒரு காரணம்தான். இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான உடலை அவர் சீராக வைக்க தினமும் உடற்பயிற்சி செய்வாராம். குறிப்பாக யோகாவை அதிகம் பின்பற்றும் பழக்கம் உடையவர்.

  கூந்தல் அழகுக்கு...

  கூந்தல் அழகுக்கு...

  நயன் தினமும் முடிக்கு அதிக எண்ணெய் தேய்த்து குளிப்பாராம். முடிக்கு தேவையான அளவு எண்ணெய் இருந்தாலே மிகவும் மென்மையாகவும், போஷாக்காகவும் இருக்கும். மேலும் "பேபி ஹேர் ஸ்டைல்" தான் நயன்தாராவிற்கு பிடித்தமான ஒன்றாம். அதனாலயே பல திரைப்படங்களில் குழந்தை போன்று ஹேர் ஸ்டைல் வைத்திருப்பார்.

  நயனின் முகம் மினுமினுக்க...

  நயனின் முகம் மினுமினுக்க...

  அதிகபட்சம் பிரௌன் டோன் மேக் அப்பையே விரும்புவாராம். மேலும் முகத்தை எப்போதும் சுத்தமாகவும், ஈரப்பத்தவுடனே வைத்திருப்பார். அதனால் எந்தவித மேக் அப் போட்டாலும் எளிதில் அவருக்கு ஒத்து போய்விடும். அத்துடன் ஆயர்வேத பொருட்களையே அழகை மேம்படுத்த பயன்படுத்துவாராம்.

  கவலைகளை கண்டு கொள்ளமாட்டார்..!

  கவலைகளை கண்டு கொள்ளமாட்டார்..!

  இவரின் அழகான புன்னகைக்கு காரணம் மிகவும் அற்புதமான ஒரு வழிதான். நயன், தனக்கு வரும் கஷ்டங்களை மனதிற்குள் போட்டு குழப்பி கொள்ள மாட்டாராம். யாராவது ஏதாவது தேவையற்றவற்றை கூறினால் அதனை காதில் கூட போட்டு கொள்ளமாட்டார். இதனாலயே நயன் மிகவும் அழகான சிரிப்புடனே இருக்கிறார்.

  8 மணி நேர தூக்கம்...

  8 மணி நேர தூக்கம்...

  ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கமே அவனை ஆரோக்கியமாக வைக்கும். இந்த வழி முறையைதான் நயனும் பின்பற்றுகிறார். தினமும் ஆழமான 8 மணி நேர தூக்கத்தையே இவர் கடைபிடிக்கிறாராம். ஆனால் இப்போதெல்லாம் அதிக பட வாய்ப்புகள் வருவதால் தூங்கும் நேரம் சற்றே சிரமமாக இருப்பதாக நயன் கூறுகிறார்.

  இவையே நயனின் இளமையான தோற்றத்துக்கும், அழகிற்கும் காரணம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Natural Beauty Secrets of Nayanthara

  Nayanthara is around for ages, but you will not know that by looking at her face, for some mysterious reason Nayan did not age at all in last 10 years.
  Story first published: Thursday, August 9, 2018, 17:50 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more