நிறைய பேர்களுக்கு அக்குள் சருமம் கருப்பாக இருக்கும். இந்த மாதிரியான நிலை இருக்கும் போது நம்மால் எல்லா ஆடைகளையும் அணிய முடியாமல் அவதிப்படுவோம்.
இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதியில் இறந்த செல்கள் தேங்கி இந்த கறுப்பை உண்டாக்குகிறது. மேலும் அதிகமான சூரிய ஒளி அந்த பகுதியில் படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது.
காரணங்கள்
அடிக்கடி ஷேவ் செய்தல், முடிகளை நீக்கும் க்ரீம்களை பயன்படுத்துதல். ஆல்கஹால் டியோரெண்டுகளை பயன்படுத்துதல், காற்றோட்டமாக இல்லாத ஆடைகளை அணிதல், அதிக வியர்வை, ஆன்டிபெர்ஸ்பிரிண்ட்ஸ்களை பயன்படுத்துதல் இது போன்ற பிரச்சினைகளால் அக்குள் பகுதி கருப்பாகிறது.
இதர காரணங்கள்
சில சமயங்களில் இந்த அக்குள் கருப்பு உடல் பருமன், தோல் தடிப்பு, நைகிரின்ஸ், இன்சுலின் அதிகரிப்பு, மருந்துகள், புற்று நோய் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்த மாதிரியான சமயங்களில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. சரி வாங்க இந்த அக்குள் கருப்பை இயற்கை முறையில் எப்படி போக்கலாம் என்பதை இப்பொழுது காணலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கு இயற்கை யாகவே ஒரு ப்ளீச்சிங் ஏஜெண்ட் மாதிரி செயல்படுகிறது. இதிலுள்ள அசிட்டிக் தன்மை அப்பகுதியில் உள்ள கருப்பை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
நேரடியாக சில உருளைக்கிழங்கு துண்டுகளை கொண்டு அப்பகுதியில் தேய்க்கலாம். உருளைக் கிழங்கு துருவலையோ அல்லது ஜூஸையோ அப்ளே செய்து 15-20 நிமிடங்கள் காய வைத்து பின்னர் கழுவலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயும் இயற்கையாகவே ப்ளீச்சிங் ஏஜெண்ட் ஆகும். இது சருமத்தில் ஆழமாகப் படிந்திருக்கும் கருமையையும் நீக்கி, சருமத்தை வெளிரச் செய்யும்.
பயன்படுத்தும் முறை
துண்டுகளாகவோ அல்லது துருவலாகவோ அல்லது ஜூஸாகவோ வெள்ளரிக்காயை கொண்டு அநத பகுதியை தேய்க்கவும். பிறகு வெள்ளரிக்காயிலிருந்து ஜூஸ் தயாரித்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து அக்குள் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை
இது ஒரு இயற்கை ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதில் நிறைய ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இவை அக்குள் பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துணர்வு தருகிறது.
பயன்படுத்தும் முறை
லெமன் துண்டுகளை அக்குள் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். ஸ்க்ரப் மாதிரி செயல்பட இதனுடன் சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள். லெமன் ஜூஸில் கொஞ்சம் மஞ்சள் தூள், தேன் மற்றும் யோகார்ட் சேர்த்து கலந்து அக்குள் பகுதியில் தடவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இதை செய்ய வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்பட்டு அக்குள் பகுதியில் இருக்கும் இறந்த செல்களையும் சரும துளைகளையும் திறக்கிறது.
பயன்படுத்தும் முறை
போக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவி தேய்க்க வேண்டும்
நன்றாக உலர்ந்த பிறகு கழுவி விடுங்கள்.
வாரத்திற்கு சில முறை இதை செய்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.
அக்குள் துர்நாற்றத்தை போக்க இதனுடன் கார்ன் ஸ்டார்ச் சேர்த்து கொள்ளுங்கள்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோல் ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்பட்டு அக்குள் பகுதியில் உள்ள கருமை யை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
ஆரஞ்சு தோலை முதலில் வெயிலில் காய வைத்து உலர்த்தி வைத்து கொள்ளுங்கள்
பிறகு மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளுங்கள். இந்த பவுடருடன் ரோஸ் வாட்டர், பால் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை அக்குள் பகுதியில் தடவி 10 - 15 நிமிடங்கள் உலர வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவி விடுங்கள். வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை இதை செய்யுங்கள். அக்குள் கருமை நீங்கி விடும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யில் விட்டமின் ஈ இருப்பதால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதை அக்குள் பகுதியில் தடவும் போது கருமை சருமத்தை போக்குகிறது. மேலும் இயற்கை டியோரெண்ட்டாகவும் செயல்படுகிறது.
பயன்படுத்தும் முறை
அக்குள் பகுதியை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்
10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு மைல்டு சோப்பு கொண்டோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வந்தால் விரைவான மாற்றத்தை காணலாம்.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.