For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..!

By Haripriya
|

நம்மில் பலருக்கு நீண்ட நாட்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. அழகு என்பது முகத்தை மட்டும் குறிக்கும் வார்த்தையாக இன்றளவும் நாம் எண்ணி கொள்கிறோம். அழகு எப்போதும் உடல் ஆரோக்கியத்தையும், உள்ளத்து ஆரோக்கியத்தையும் பொருத்தே கணிக்கப்படும். முக அழகு மிகவும் பொலிவாக மற்றவரை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று நம் அனைவருக்கும் இருக்கும் விருப்பம்தான்.

Beauty secrets Of Flowers For Grey Hair & Face Problems

அத்துடன் தலை முடிகளும் மிக அழகாக கருமையாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் ஆசையாகத்தான் இருக்கிறது. இதை அடைய பல வழிகள் இருந்தாலும், இயற்கையான வழிகளே நல்ல பலனை நீண்ட காலத்திற்கு தரும். இந்த பதிவில் சில வகையான பூக்களில் உள்ள அழகியல் ரகசியங்களை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீமை சாமந்தி :-

சீமை சாமந்தி :-

தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சீமை சாமந்தி ஒரு நல்ல மருந்தாகும். சீமை சாமந்தியை டீ போட்டு குடித்து வந்தால் பல தலை முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதில் உள்ள Apigenin என்ற நிறமி நரை முடிகளில் இருந்து உங்களை காக்கும். இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. தலையில் உள்ள அதிக பொடுகை இந்த டீ நீக்குகிறது.மேலும் கூந்தலை பொலிவாக இருக்கவும் செய்கிறது.

செம்பருத்தி :-

செம்பருத்தி :-

முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல மருந்தாக இது செயல்படும். செம்பருத்தியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் முடி உதிர்வை முழுமையாக தடுக்கிறது. அத்துடன் இளநரைகளை முற்றிலுமாக குணப்படுத்துகிறது. இதனை டீ போன்றும் எடுத்து கொள்ளலாம். முடியின் அடிவேரை உறுதி படுத்த இந்த டீ நல்ல தீர்வாகும்.

சங்கு பூ :-

சங்கு பூ :-

பல மருத்துவ பயன்களை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறது இந்த அற்புத பூ. நாம் அவ்வளவாக இந்த பூவை பயன்படுத்த மாட்டோம் என்றாலும் இதில் உள்ள அழகு குறிப்புகள் ஏராளம். தலையில் ஏதேனும் அரிப்பு ஏற்பட்டு புண் வந்தால், சங்கு பூவை கசக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விரைவிலே குணமடையும்.

சாமந்தி பூ :-

சாமந்தி பூ :-

முக அழகிற்கு இந்த பூ பெரிதும் பயன்படுகிறது. சருமம் அதிகம் பொலிவுடன் இருக்க இந்த பூக்களில் இருந்து தயாரித்த டீ ஒன்றே போதும். சாமந்தி பூவை டீ போன்று அருந்தினால் சரும வறட்சியை சரி செய்யும். மேலும் சூரியனின் வெயிலால் ஏற்பட்ட அரிப்புகள் குணமடையும்.

ரோஜா :-

ரோஜா :-

முக அழகை அழகுபடுத்த முதல் இடத்தில் இருப்பது இந்த ரோஜாதான். முகத்தின் அழகை இது பெரிதும் பாதுகாக்கிறது. ரோஜா இதழை நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை மட்டும் ஓட்ஸுடன் கலந்து முகத்தில் பூசினால் முகம் மிகவும் மென்மையாக காட்சியளிக்கும். அத்துடன் முக பருக்கள் வருவதையும் தடுக்கும்.

லாவெண்டர் :-

லாவெண்டர் :-

முகத்தை பொலிவாக மாற்ற லாவெண்டர் பெரிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள மூல பொருட்கள் சரும அழகிற்கு அதிகம் உதவுகிறது. இதனை 5 நிமிடம் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும். அதன்பின் ஓட்ஸுடன் இந்த நீரை கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 15 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முகம் பட்டுபோல மின்ன வழி செய்யும்.

மல்லிகை :-

மல்லிகை :-

இத்தனை நாள் நாம் மல்லிகையை தலையில் அழகு செய்ய மட்டுமே வைத்திருப்போம். ஆனால், இதற்குள் இருக்கும் அழகு ரகசியத்தை நாம் அறியாமல் இருந்திருப்போம். மல்லிகை பூவை நேரடியாக முகத்தில் அப்ளை செய்தால் முகம் சுருக்கம் அடையாமல் இருக்கும். மேலும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க உதவும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beauty secrets Of Flowers For Grey Hair & Face Problems

Flowers are beautiful, and they come in so many different types, colours and sizes that each seems to be a work of art. You can use them in so many ways; to make a soothing cup of tea, a refreshing face wash, an astringent, massage oil, lotion..etc
Story first published: Thursday, August 9, 2018, 9:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more