TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
செல்பியில் நீங்கள் அழகாக இருக்க வேண்டுமா..?அதற்கு வழி அழகாக சிரிக்கும் வெண்மை பற்களே...!
இன்றைய ஸ்மார்ட் உலக வாழ்க்கையில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தாதவரே இல்லை என்ற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறோம்.அதிலும் ஸ்மார்ட் ஃபோன் வைத்து கொண்டு செல்பி எடுக்காதவர் யாரேனும் உண்டா..? அப்படியாக எடுக்கப்படும் புகைப்படம் மிக அழகாகவும்,நமது சிரிப்பு மிக நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்றே நம் அனைவரும் நினைப்போம்.அதற்கு மஞ்சள் நிற பற்கள் இருந்தால் எடுக்கின்ற புகைப்படமும் நன்றாக இருக்க வாய்ப்பில்லை. அழகிய புகைப்படத்தையும் இந்த மஞ்சள் நிற பற்கள் கெடுத்து விடுகின்றன.
எதனால் இந்த மஞ்சள் நிற பற்கள் ஏற்படுகின்றன..? எந்த மாதிரியான உணவு பழக்கம் நம் பற்களை மஞ்சள் நிறமாக மாற்றுகின்றன..? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
நமது பற்கலில் எனாமல் தான் முதல் அடுக்கில் இருக்கும்.இந்த எனாமல் வெள்ளை அல்லது சிறிது சாம்பல் கலந்த நீல நிறத்தில் இருக்கும்.இதற்கு கீழ் அடுக்கில் டென்டின் என்ற மூலபொருளும் இருக்கும்.இந்த டென்டின் தான் எனாமலை உறுதியாக வைக்க உதவுகிறது. இந்த எனாமல் நாம் உண்ணும் உணவால் கரைபடிந்து போனால் நமது பற்கள் கட்டாயம் மஞ்சளாக மாறி விடும்.
மவுத்வாஷ்:-
பற்கள் மஞ்சளாக மாற இந்த மவுத்வாஷ் ஒரு காரணம்.பொதுவாக வாயில் வறண்ட நிலை ஏற்பட்டால் பல்லானது மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.ஏனென்றால் நமது எச்சில் உள்ள தாது உப்புகள்,என்சய்ம்கள், மற்றும் ஆக்சிஜன் மூல பொருட்கள் நமது வாயின் அமில தன்மையை சீரான அளவில் வைக்க உதவுகிறது.இந்த pH அளவை அமிலங்கள் கலந்த மவுத்வாஷ் கெடுத்து விடுகிறது. ஏனென்றால் மவுத்வாஷில் அதிக அமில தன்மை உள்ளது. நமது உடலில் இயல்பாகவே சுரக்கும் எச்சில் பாக்டீரியாகளை நீக்கும் வல்லமை உள்ளது.மேலும் நமது எனாமலையும் உறுதியாக பாதுகாக்கிறது. சிலர் இந்த மவுத்வாஷை வாய் புத்துணர்வுக்காக பயன்படுத்துகின்றனர்.ஆனால் இது வாய் புத்துணர்வோடு சேர்த்து மஞ்சள் பற்களையும் தந்துவிடுகிறது.எனவே,மவுத்வாஷ் போன்றவற்றை தவிர்த்தால் மஞ்சள் பற்கள் வராமல் இருக்கலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்:-
பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.ஆனால் அமில தன்மை அதிகம் உள்ள பழங்கள் சாப்பிட்டால் அஃது நமது பற்களை மஞ்சளாக மற்ற வல்லது. தக்காளி,எலுமிச்சை,ஆரஞ்ச்,அண்ணாச்சி,குளிர் பானங்கள் போன்றவற்றில் அதிகம் சிட்ரிக் அமிலம் உள்ளதால் இது வாயின் pH அளவை சீராக வைக்காது. எனவே, பல் மஞ்சளாக மாறி விடுகிறது.
டீ,காஃபி:-
நம்மில் பலர் டீ,காஃபி குடிப்பதையே மிக பெரிய பழக்கமாக வைத்திருப்பர்.உடல் புத்துணர்ச்சிக்காக அருந்தும் இந்த டீ,காஃபி போன்றவற்றில் எண்ணற்ற அமிலங்கள் இருக்கின்றன. அவை பல்லில் கரை போன்று படிந்து மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகிறது.சிலர் டீ,காஃபி போன்றவற்றை மெல்லமாக அருந்துவார்கள்.இப்படி மெல்லமாக அருந்துவதால் அதில் உள்ள அமில தன்மை பற்களில் தங்கி விடும்.ஆதலால் முடிந்தவரையில் டீ,காஃபி போன்றவற்றை விரைவாக குடிக்க பழகுங்கள்.
புகை பழக்கத்தால்:-
சிக்ரெட்டில் உள்ள நிகோடின் போன்ற நச்சு பொருட்கள் பற்களின் வெண்மை தன்மையை இழக்க செய்யும்.அத்துடன் பல உடல் சார்ந்த உபாதைகளையும் ஏற்படுத்தும்.புகை பிடிப்பதால் பசை நோய், பல் சிதைவு மற்றும் உலர்ந்த வாய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவர்.அத்துடன் பல்லின் எனாமல் சிதைவு அடைந்து பல் விழும் அளவிற்கும் போகலாம். ஆதலால்,புகை பழக்கத்தை கைவிடுவதே மஞ்சள் நிற பற்களற்ற வாயை பெறுவதற்கான வழி.
மது அருந்துதல்:-
"மது நாட்டிற்கும்,வீட்டிற்கும் கெடு " என்பது போன்றே மதுவானது பற்களுக்கும் கேடை தரும்.இதனால் விரைவிலே பற்கள் சிதைவடைந்து மஞ்சளாக காணப்படும்.எனவே முடிந்த வரையில் இந்த மது பழக்கத்தை விட்டுவிட்டால் வெண்மையான பற்களை பெறலாம்.தவிர்க்க முடியாத தருணங்களில் ஸ்ட்ரா போன்ற பொருட்களை கொண்டு இதனை அருந்தினால் சிறிது மஞ்சள் நிறம் உருவாவதை தடுக்கலாம்.
இனிப்பு மற்றும் சாக்லேட்கள் :-
மஞ்சள் நிற பற்கள் வர மிக முக்கிய காரணம் இந்த இனிப்பு மற்றும் சாக்லேட்கள் தான்.அதுவும் குழந்தைகள் இதனை விருப்பத்தோடு அதிகம் உண்பதால் அதில் உள்ள அமிலங்கள் எனாமலை சிதைவடைய செய்து அத்துடன் பற்களில் நிறத்தையும் மஞ்சள் நிறமாக மாற்றுகிறது.மேலும் இரவு நேரத்தில் இனிப்பு மற்றும் சாக்லேட்கள் சாப்பிட்டு தூங்கினால் அவை பல்லில் ஒட்டிக் கொண்டு துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.எனவே கூடிய வரையில் இரவில் இனிப்பு மற்றும் சாக்லேட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளித்தல் :-
நம்மில் பலருக்கு இந்த வாய் கொப்பளிக்கும் வழக்கமே இல்லை.சாப்பிட்ட பிறகு உணவு பொருட்கள் பாலின் இடுக்குகளில் சிக்கி கொள்ளும். அதனால்,பற்களிலே அந்த சிறு சிறு உணவு பொருட்கள் தங்கி கிருமிகளை உண்டாகும்.அதோடு சேர்த்து பல் சொத்தை,துர்நாற்றம்,மஞ்சள் நிற பற்களும் வந்துவிடும்.ஆதலால்,சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளித்தல் மிக நன்று.
அவசரமாக பல் துலக்குதல்:-
அவசர வாழ்க்கை முறையில் நாம் நமது பற்களை கூட சரியாக துலக்குவதில்லை.அதனால் நமது பற்களும் அவசர அவசரமாக விழுந்தும் விடுகின்றன.பற்கலின் எனாமல் சீக்கிரமாக கெடுவதற்கு இதுவும் ஒரு காரணமே...! மேலும் அழுத்தி பிடித்து பற்களை துலக்கினால் அதன் எனாமல் விரைவிலேயே தேந்து விடும்.ஆதலால் ,நன்கு பற்களை துலக்க பழக வேண்டும்.தினமும் 2 வேலை பல் துலக்கினால் நீண்ட நாட்கள் அழகான,வெண்மையான பற்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.