Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
பார்லர் போகாமலேயே அற்புத பலன் தரும் பாடி மசாஜ் பெறுவது எப்படி?
நீங்களாகவே பாடி மசாஜ் செய்ய வழி முறைகள் மற்றும் படிப்படியான செய்முறை விளக்கத்துடன் பாடி மசாஜ்யை வீட்டிலேயே செய்யலாம் என்பதற்கான தகவல்
நீங்கள் சலூனில் சென்று பாடி மசாஜ் செய்ய நினைத்தால் உங்கள் நேரமும் பணமும் தான் வீணாகும். சில பிரச்சினைகளுக்கு நாம் என்ன தான் தீர்வு காண முற்பட்டாலும் நம் உடல் அதற்கு ஒத்து போவதில்லை.
உங்கள் உடல் வலிக்கும் மற்றும் நிம்மதியான உறக்கத்திற்கும் பாடி மசாஜ் மிகவும் சிறந்தது. இதை உங்கள் வீட்டிலேயே செய்து பலன் பெறலாம். இந்த பாடி மசாஜ் கண்டிப்பாக உங்கள் பிஸி வாழ்க்கையை தொந்தரவு செய்யாது. அதற்கு பதிலாக நிறைய நன்மைகளை பரிசாக வழங்கும்.

எனவே தான் பாடி மசாஜ் செய்வதற்கான வழி முறைகளை தமிழ் போல்டு ஸ்கை இங்கே உங்களுக்காக சொல்லுகிறது.
சரியான செய்முறைகளையும் அறிந்து கொண்டால் வீட்டிலேயே நீங்களாகவே பாடி மசாஜ் செய்ய முடியும் என்பது சாத்தியமே. பாடி மசாஜ் என்பது எண்ணெய் மற்றும் மாய்ஸ்சரைசர் அப்ளே பண்ணுவதல்ல. அந்த பொருட்களை உடலின் எந்த பகுதியில் அப்ளே பண்ணி மசாஜ் செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இதனால் இறுதியில் ஒரு புத்துணர்ச்சி கண்டிப்பாக கிடைக்கும்.
சில தடவுதல், தட்டுதல், பிசைதல் போன்ற முறைகளை சரியாக செய்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை மிளிரச் செய்ய வேண்டும்.
வீட்டிலேயே இந்த பாடி மசாஜ் செய்வதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. சரி வாங்க பாடி மசாஜ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

முறை 1
முதலில் பாடி மசாஜ் செய்வதற்கு அதிக தண்ணீர் அடங்கியுள்ள எதாவது லோசனை எடுத்துக் கொள்ளவும். மேலும் கேரியர் ஆயிலையும் எடுத்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் (உங்களுக்கு இருமல் மற்றும் சளி இருந்தால்) அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தவும். இதை வெதுவெதுப்பான தன்மையில் வைத்து பயன்படுத்தவும்.

முறை 2
சூடான ஆயில் மசாஜ் மேற்கொண்டால் உங்களை சுத்தி யாரும் இல்லாமல் அல்லது தனிப்பட்ட அறையில் வைத்து செய்யவும். ஏனெனில் இது குறைவான உடையில் செய்ய வேண்டியது இருக்கும்.

முறை 3
முதலில் மசாஜ்யை உங்கள் பாதங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ஆயிலை உங்கள் கைவிரல்களால் எடுத்து பாத விரல்களை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும் பிறகு ஆயிலை உங்கள் உள்ளங் கைகளில் தடவிக் கொண்டு பாதங்களின் நடுப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜை நேரான முறையில் அதாவது கால்களிலிருந்து பாதம் என்ற முறையில் செய்ய வேண்டும். பாதத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை மெதுவாக குறைந்தது ஒரு பாதத்திற்கு 5 நிமிடங்கள் கணக்கில் மசாஜ் செய்ய வேண்டும்.
ஆயில் ஊறி விட்டு என்றால் மேலும் சிறிது ஆயில் எடுத்து கொள்ளவும்.

முறை 4
பாதங்களுக்கு 2 அல்லது 3 முறை செய்த பிறகு மூட்டுப் பகுதிக்கு வரவும். உங்களுக்கு இந்த பகுதியில் வலி இல்லாவிட்டாலும் ஒட்டு மொத்த உடலுக்கும் இரத்த ஓட்டத்திற்கான மையப் பகுதி ஆகும்.
உங்களது இரு கைகளிலும் ஆயிலை எடுத்து கொண்டு மூட்டுகளை வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பட்டும் படாமல் லேசாக மசாஜ் செய்தால் போதுமானது. அதற்காக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டாம்.

முறை 5
மூட்டுப் பகுதி முடிந்த பிறகு நேராக தொடையின் கீழ் பகுதிக்கு வரவும். இந்த பகுதிக்கு அதிகமான ஆயில் தேவைப்படும். தொடையின் கீழ் பகுதியை வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்து விட்டு மேல் பகுதிக்கு வரவும்.
தொடையின் உட்பகுதிக்கு மிகுந்த கவனம் எடுத்து கொள்ளவும். தொடை மசாஜ்யை நேரான முறையில் அதாவது மூட்டுகளிலிருந்து டம்மி வரை இழுத்து மசாஜ் செய்யவும்.

முறை 6
அடிவயிற்றுப் பகுதிக்கு கொஞ்சம் அதிகமான நேரம் செலவழிக்க வேண்டும். தேவையான அளவு ஆயிலை எடுத்துக் கொண்டு வட்ட வடிவ இயக்கத்தில் அடி வயிற்றுப் பகுதியை மசாஜ் செய்ய வேண்டும்.
ஆயிலை மார்பின் நடுப்பகுதியில் தடவி அப்படியே பரப்ப வேண்டும். அடிவயிற்றிப் பகுதியை முழுவதுமாக கவர் பண்ண கொஞ்சம் நேரம் எடுக்கும்.

முறை 7
கடைசியாக இப்பொழுது உங்கள் தோள்பட்டைக்கு செல்ல வேண்டும். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வலது தோள்பட்டையை இடது கைகளாலும் அதே மாதிரி மற்றதையும் செய்ய வேண்டும். கழுத்தின் நடுப்பகுதியில் இருந்து தோள்பட்டையின் விளிம்பு வரைக்கும் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
கைகளுக்கு வரும் போது நேரான மசாஜ் முறையை மேற்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளிலிருந்து தோள்பட்டை வரை மசாஜ் செய்ய வேண்டும். நீண்ட தடவுதலை மேற்கொள்ளாமல் சமமான நேரான முறையை மேற்கொள்ள வேண்டும்.

முறை 8
இறுதியாக உங்கள் உள்ளங்கைகளை மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் உள்ளங்கைகளை நீங்களே மசாஜ் செய்வதற்கு ஆயிலை அப்ளே செய்து ஒரு நேரத்தில் ஒன்னு என்கிற முறையில் மசாஜ் செய்யவும்.



Click it and Unblock the Notifications