மறைமுக பகுதியில் இருக்கும் பருக்களின் தழும்புகளை இப்படி தான் நீக்கனும்!

Written By:
Subscribe to Boldsky

பருக்கள் முகத்தில் மட்டும் தான் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவ்வாறு இல்லை. சிலருக்கு பருக்கள் முதுகு, மார்பு பகுதிகள் என்று பல்வேறு இடங்களில் வரக் கூடியது. இந்த பருக்களின் தழும்புகள் என்ன தான் முதுகுப்பகுதியில் இருந்தாலும் கூட அவற்றை எல்லாம் நாம் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. இந்த பகுதியில் முதுகு பகுதியில் இருக்கும் பருக்களை போக்குவதற்காக சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. எனவே சிறிது காட்டனை எடுத்து, நீரில் நனைத்து, பின் அதில் சிறிது டீ-ட்ரீ ஆயில் ஊற்றி, முதுகில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருமையான தழும்புகள் மறையும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சிறந்த மாய்ஸ்சுரைசர் மட்டுமின்றி, தழும்புகளைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு ஆலிவ் ஆயிலை முதுகில் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த செயலை தினமும் இரவில் செய்து வந்தால், விரைவில் தழும்புகள் மறைவதைக் காணலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்குவதோடு, கருமையையும் போக்கும். மேலும் இது பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிப்பதோடு, புதிய சரும செல்களையும் உற்பத்தி செய்யும்.

சந்தனப் பொடி மற்றும் ரோஸ் வாட்டர்

சந்தனப் பொடி மற்றும் ரோஸ் வாட்டர்

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவினால், சருமம் ஆரோக்கியமாகவும், தழும்புகளின்றி பொலிவோடும் இருக்கும்.

தக்காளி

தக்காளி

தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, முதுகில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, தழும்புகள் நீங்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டிற்கு தழும்புகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஒரு துண்டு பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முதுகு முழுவதும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் கருமையான தழும்புகள் நீங்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

தோல் ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து, அதனை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to cure the pimple in backside

How to cure the pimple in backside
Story first published: Wednesday, November 15, 2017, 18:41 [IST]
Subscribe Newsletter