For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருமை மறைய சோப்பிற்கு பதிலாக முகத்திற்கு இதனை பயன்படுத்தி பாருங்கள்!

By Lakshmi
|

காலநிலை மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், வெயில் அடிக்காத மாதமே கிடையாது என்று கூறலாம். இந்த வெயிலினால் சருமம் கருமையாகிவிடுகிறது. இந்த கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்ணெய் :

வெண்ணெய் :

சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

நீர் தன்மை உள்ள பொருட்கள்:

நீர் தன்மை உள்ள பொருட்கள்:

தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். விட்டில் தக்காளி, வெள்ளாரிக்காய் ஆகியவற்றை நறுக்கும் போது எல்லாம், முகத்திற்கும் சிறிதளவு எடுத்து போட்டுக்கொள்வது எளிதாகவும் இருக்கும்.

சோப்பிற்கு பதிலாக..!:

சோப்பிற்கு பதிலாக..!:

சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பயன்படுத்தினால், முகத்திற்கு ஒரு தனி கவர்ச்சியே கிடைக்கும். உங்களது அழகு பல்லாண்டு காலம் நீடித்திருக்கும்.

தினமும் இரவு :

தினமும் இரவு :

தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு பாலில், மஞ்சளை கலந்து பேக் போட்டுக்கொண்டால், முகம் வசீகரமாக இருக்கும். தினமும் காலையில் உங்களது முகத்தில் ஒரு ஒளியை காணமுடியும்.

குளிப்பதற்கு முன்:

குளிப்பதற்கு முன்:

தினமும் குளிப்பதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சளை கலந்து மசாஜ் செய்து பின்னர் குளித்தால், முகப்பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for tanned skin

Here are the home remedies for tanned skin
Story first published: Friday, September 8, 2017, 15:51 [IST]
Desktop Bottom Promotion