இத தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்தா பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்!

Posted By:
Subscribe to Boldsky

எவ்வளவு தான் நல்ல தரமான டூத் பேஸ்ட்டுகளைக் கொண்டு தினமும் இருவேளை பற்களைத் துலக்கினாலும், பற்களின் இடுக்குகள் மற்றும் பின்புறத்தில் மஞ்சள் நிற கறைகள் சேர்வது மட்டும் தடுக்கப்படுவதில்லை. மேலும் அப்படி சேரும் மஞ்சள் கறைகள் எளிதில் நீங்கா வண்ணம் இருப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் அதிகரிக்கிறது.

Take One Tablespoon Every Day And Save Your Teeth – Remove Plaque In A Very Simple And Natural Way

வாயில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படும் இந்த கறைகளை அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் அது ஈறுகளைப் பாதித்து, வாயின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே ஒவ்வொருவரும் பற்களில் சேரும் மஞ்சள் கறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

இங்கு பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வர, நிச்சயம் பற்காறைகளை விரைவில் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஏராளமாக உள்ளது. எனவே இதனைக் கொண்டு வாயைப் பராமரிக்கும் போது, வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பற்காறைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

தினமும் காலையில் எழுந்ததும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் எண்ணெயை துப்பி, வெறும் டூத் பிரஷ் கொண் பற்களை சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின்பு டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும். இச்செயலை தொடர்ந்து செய்து வர, 10 நாட்களிலேயே ஓர் மாற்றத்தைக் காண்பீர்கள்.

கீழே வேறு சில இயற்கை வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பின்பற்றினால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை அகற்றலாம்.

எள்

எள்

பற்களில் உள்ள கறைகளை அகற்ற எள்ளும் உதவும். அதற்கு ஒரு கையளவு எள் விதைகளை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் துப்ப வேண்டும். பின்பு வெறும் பிரஷ் கொண்டு பற்களைத் துலக்க, பற்களில் உள்ள காறைகள் நீங்கும்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி உள்ளது. இது வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு தக்காளியின் ஒரு துண்டை பற்களில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ, பற்கள் வெண்மையாகும்.

கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல்

கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல்

1 கப் நீரில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 கப் பேக்கிங் சோடா, 10 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, தினமும் இக்கலவையைக் கொண்டு பற்களைத் துலக்க, பற்களில் இருக்கும் பற்காறைகள் விரைவில் நீங்கும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழம் ஈறுகளை வலிமையாக்கும். தினமும் 3-4 அத்திப்பழங்களை வாயில் போட்டு மெல்ல, உமிழ்நீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, வாயில் பாக்டீரியாக்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, பற்கள் சுத்தமாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

வினிகர்

வினிகர்

2 டேபிள் ஸ்ழுன் வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் நீர் சேர்த்து கலந்து, அக்கலவையைக் கொண்டு தினமும் வாயைக் கொப்பளித்து வர, பற்காறைகள் அகலும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஈரமான டூத் பிரஷ் கொண்டு பேக்கிங் சோடாவைத் தொட்டு, பற்களைத் துலக்க வேண்டும். இப்படி வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறை செய்து வர, பற்களில் படிந்துள்ள நீங்கா கறைகளும் நீங்கிவிடும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

தேங்காய் எண்ணெயைப் போன்றே நல்லெண்ணெயும், பற்காறைகள், ஈறு நோய்கள் போன்றவற்றைப் போக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10-15 நிமிடம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். இப்படி தினமும் காலை மற்றும் இரவில் செய்து வர, பற்காறைகள் வேகமாக நீங்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

இரவில் படுக்கும் முன், ஆரஞ்சு பழத்தின் தோலைக் கொண்டு நேரடியாகப் பற்களைத் தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வாயை நீரில் கழுவ வேண்டும். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Take One Tablespoon Every Day And Save Your Teeth – Remove Plaque In A Very Simple And Natural Way

Want to remove plaque in a very simple and natural way? Take this one tablespoon every day and save your teeth.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter