Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க அற்புதமான வழிகள்!!!
ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டும் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது அவர்களை அழகாக காண்பிப்பதற்கு மாறாக அசிங்கமாக வெளிக்காட்டும். அதுமட்டுமின்றி, மஞ்சள் நிற பற்கள் ஒருவரின் மீது உள்ள மதிப்பையும் குறைக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் பற்களை வெள்ளையாகவும், வாயை துர்நாற்றமின்றியும் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
ஈறுகளில் இருந்து இரத்தம் கசிகிறதா? இத டெய்லி ஃபாலோ பண்ணுங்க...
அதற்கு தினமும் 2 முறை பற்களை துலக்குவதுடன், பற்களை வெண்மையாக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டும் பற்களைப் பராமரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காபி, டீ, சிகரெட் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அழகைக் கெடுக்குமாறு பற்களில் படியும் டீ கறைகளைப் போக்க சில டிப்ஸ்...
இங்கு பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சமையலறைப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன்படி தவறாமல் செய்து சந்தால், பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ளலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனைக் கொண்டு 2 நிமிடம் பற்களை துலக்கி கழுவ வேண்டும். இப்படி முதல் வாரம் இரண்டு முறையும், பின் 15 நாட்களுக்கு ஒருமுறையும் செய்ய வேண்டும். குறிப்பு: பேக்கிங் சோடாவை தினமும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை பற்களின் எனாமலை பாதிக்கும்.

ஆரஞ்சு தோல்
இரவில் படுக்கும் போது ஆரஞ்சு பழத்தின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, மறுநாள் காலையில் பற்களை கழுவ வேண்டும். இதனால் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் கால்சியம் பற்களில் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கி, பற்களின் வலிமையை அதிகரிக்கும்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது. இதனால் அவை பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கும். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு தினமும் இரண்டு முறை கற்களை தேய்த்து வந்தால், பற்கள் பளிச்சென்று மாறும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாயைக் கொப்பளித்தால், மஞ்சள் நிற கறைகளைப் போக்கலாம். முக்கியமாக அப்படி கொப்பளிக்கும் போது, அதை விழுங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அவை எத்தகைய கறையையும் எளிதில் நீக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவ வேண்டும். இப்படி 2 வாரங்களுக்கு தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாகும்.

உப்பு
தினமும் பற்களை துலக்கும் போது, பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி, பற்களை துலக்கினால், பற்களில் உள்ள கறைகள் நீங்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக அழுத்தி தேய்த்தால், பற்களில் உள்ள எனாமல் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும்.

துளசி
துளசி இலையை வெயிலில் சில மணிநேரம் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, அதனை தினமும் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களை துலக்கி வந்தால், மஞ்சள் கறைகள் அகலும்.

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, பற்களையும் வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம். அதேப்போன்று கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தாலும் பற்கள் வெள்ளையாகும்.

சாம்பல்
அக்காலத்தில் சாம்பல் கொண்டு பற்களை துலக்கி வந்ததால் தான் என்னவோ நமது பாட்டி, தாத்தாவின் பற்கள் ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் இன்று வரை உள்ளது. ஆகவே இத்தகைய சாம்பலை டூத் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களை தினமும் 2 முறை துலக்குங்கள்.



Click it and Unblock the Notifications











