Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
கோடையில் ஏன் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்த சொல்றாங்க தெரியுமா...?
தற்போது வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. வெயிலின் தாக்கத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை சூரியக்கதிர்கள் உறிஞ்சி எடுத்துவிடும். இதனால் தான் கோடையில் சருமத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. ஆனால் அந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே ஒரு பொருளைக் கொண்டு தீர்வு காண நினைத்தால், அதற்கு வீட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் தான் சிறந்த ஒன்று.
பலரும் தேங்காய் எண்ணெய் வேஸ்ட் என்று நினைத்து, அதனை அதிகம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். ஆனால் அதில் நிறைந்துள்ள சத்துக்களால் முடி பிரச்சனைகள் மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் இதனை வெறும் தலைக்கு மட்டும் பயன்படுத்தாமல், சருமத்திற்கும் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
இங்கு கோடையில் ஏற்படும் சரும பிரச்சனைகளைப் போக்க தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும்
தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி பயன்படுத்தி வந்தால், அது மயிர்கால்களை வலிமையாக்கி, கோடையில் முடி உதிர்வதைத் தடுக்கும்.

மாய்ஸ்சுரைசர்
கோடையில் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை சூரியக்கதிர்கள் உறிஞ்சிவிடுவதால், சிலருக்கு சரும வறட்சி ஏற்படும். அதனைத் தடுக்க தினமும் குளித்து முடித்த பின், சருமத்திற்கு தேங்காய் எண்ணெயை தேய்க்க வேண்டும்.

சிறந்த ஐ க்ரீம்
கோடையில் கண்களுக்கு அடியில் வறட்சி ஏற்பட்டு, கருமையாகும். இதனைத் தடுக்க தினமும் இரவில் படுக்கும் முன், கண்களுக்கு அடியில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து தூங்கினால், இந்த பிரச்சனையைத் தடுக்கலாம்.

இறந்த செல்களை நீங்கும்
3 டேபிள் ஸ்பூன் சர்க்கரையில், தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவாகும்.

பளிச் பற்கள்
தினமும் பற்களை துலக்கும் போது, பேஸ்ட்டுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து துலக்கினால், பற்கள் வெள்ளையாகும்.

சிறந்த மேக்கப் ரிமூவர்
கடைகளில் எத்தனையோ மேக்கப் ரிமூவர் இருந்தாலும், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மேக்கப்பை ரிமூவ் செய்யலாம். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

சிறந்த ஷேவிங் ஆயில்
கோடை காலத்தில் ஷேவிங் செய்யும் போது, ஷேவிங் செய்த பின்னர் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், வறட்சியைத் தடுத்து, அரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

குதிகால் வெடிப்பு
குதிகால் வெடிப்பு இருந்தால், தினமும் தேங்காய் எண்ணெயை குதிகாலில் தடவி மசாஜ் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்கி, குதிகால் மென்மையாகும்.

மென்மையான சருமம்
தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், உடல் முழுவதும் மாய்ஸ்சுரைசர் தேய்த்தது போன்று வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

கருமையைப் போக்க...
வெயிலில் சென்று வீட்டிற்கு வந்ததும், தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி சருமம் கருமையாகும். ஆனால் தேங்காய் எண்ணெயோடு சிறிது தக்காளி ஜூஸ் சேர்த்து கொண்டு, சருமத்தில் தடவினால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம்.

உதடுகளுக்கு நல்லது
கோடையில் சிலருக்கு உதடு வெடிப்பு ஏற்படும். அத்தகையவர்கள் லிப் பாம் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால், உதடு வறட்சி நீங்குவதோடு, உதடுகளும் மென்மையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications