Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
மூக்கிலுள்ள முடிகளை எப்படி ட்ரிம் செய்ய வேண்டும் என்று தெரியுமா...?
உங்களுடைய மூக்கிலுள்ள முடிகளைப் பற்றி பெருமையாக பேசுதற்கு ஒன்றும் இல்லை. அது மன உளைச்சல் தருவதாகவும், எப்பொழுதும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கவும், பொது இடங்களில் அசௌகரியம் கொடுப்பதாகவுமே இருக்கும். இந்த முடிகளை எவ்வகையில் சரியாக டிரிம் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பெரும்பாலானவர்கள் நினைப்பது போல மொத்தமாக உள்ள அனைத்து முடிகளையும் நீக்குதல் என்பது நல்ல சாய்ஸ் கிடையாது. ஏனெனில், மூக்கு வழியாக உடலுக்குகள் அழுக்குகள் மற்றும் குப்பைகள் செல்வதை தவிர்க்கும் பணியை மூக்கிலுள்ள முடிகள் தான் செவ்வனே செய்து வருகின்றன. மூக்கில் முடிகள் இல்லாவிட்டால் சுற்றுப்புறத்திலுள்ள நச்சுப் பொருட்கள் உங்கள் மூக்கு துவாரங்களில் புகுந்து கொண்டு எரிச்சலை ஏற்படுத்தவோ அல்லது குடலுக்குள் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்தவோ செய்துவிடும்.

மேலும், கூர்மையான பொருளை மூக்கு துவாரத்திற்குள் விட்டு மூக்கிலுள்ள முடிகளை நீக்குவதும் அபாயகரமானது. எனவே, நீங்கள் முடியை நீக்குவதை மறந்து விட்டு, எப்படி டிரிம் செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குங்கள். உங்கள் தலையைத் திருப்பும் போதும், நேராக வைத்திருக்கும் போதும் கண்ணுக்கு புலப்படும் முடியை மட்டும் வெட்டுவேதே சிறந்த முறையில் மூக்கை சுத்தம் செய்யும் வழியாகும்.
இதன் மூலம், மூக்கிலுள்ள முடிகள் அதிகம் வெளியே தெரியாத வகையிலும், ஆனால் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஏற்றவாறு போதிய முடிகளை விட்டு வைக்கவும் முடியும். மூக்கிலுள்ள முடிகளை வலிந்து இழுத்த பிடுங்க வேண்டாம். ஏனெனில் அது கடுமையான எரிச்சலுக்கு வழிவகுக்கும்.
மூக்கிலுள்ள முடிகளை டிரிம் செய்யும் முன்னர் நீங்கள் விழிப்போடிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். படுக்கையில் இருந்து எழுந்தவுடன், அரைத் தூக்கத்தில் இந்த வேலையை செய்யத் தொடங்கினால் காயம் மட்டுமே முடிவாக இருக்கும். குளித்து முடித்தவுடன் மூக்கிலுள்ள முடிகளை சுத்தம் செய்வது மிகச்சிறந்த பலன் தரும். ஏனெனில், இந்நேரத்தில் தான் உங்கள் மூக்கு முடிகள் மிகவும் சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்கின்றன.
பாதுகாப்பு
மூக்கு மற்றும் காதிலுள்ள முடிகளை சுத்தம் செய்யும் வேளைகளில் பாதுகாப்பையே நீங்கள் முதன்மையான விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான சூழலில், கண்ணாடியில் நன்றாக தெரியும் படி வைத்துக் கொண்டு மூக்கு முடிகளை டிரிம் செய்யத் தொடங்குங்கள். கத்தரிக்கோல்களை முழுமையாக பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். சிறிதளவு நடுக்கம் இருந்தால் போதும், அவை மூக்கு மற்றும் காதுகளில் நிலையான தழும்புகளை உண்டாக்கிவிடும்.
விழித்திருங்கள் மற்றும் குளித்திருங்கள்
மூக்கிலுள்ள முடிகளை வெட்டும் முன்னர் நீங்கள் முழுமையாக விழித்தெழுந்திருப்பதையும் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இந்த செயலை செய்ய முயன்றால், போதிய கவனம் இல்லாமல் காயப்படுத்தி விடும். குளித்து முடித்தவுடன் மூக்கிலுள்ள முடிகளை சுத்தம் செய்வது மிகச்சிறந்த பலன் தரும். ஏனெனில், இந்நேரத்தில் தான் உங்கள் மூக்கு முடிகள் மிகவும் சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்கின்றன.
எவ்வளவு வெட்டலாம்?
உங்கள் தலையை நேராக வைத்திருக்கும் போதும், திருப்பும் போதும் தெரியக் கூடிய முடியை மட்டுமே வெட்ட வேண்டும். இதன் மூலம் உங்கள் மூக்கிலுள்ள முடி வெளியே தெரியாமலும், போதுமான அளவு விட்டு விட்டதால் அழுக்குகள் உள்ளே செல்லாமல் பாதுகாக்கவும் செய்யும்.
அதிகமாக வெட்ட வேண்டாம்
மூக்கிலுள்ள முடியை பிடுங்கினால் கடும் எரிச்சலை மட்டுமே பரிசாக பெறுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மேற்கண்ட பிரச்னை மட்டுமல்லாமல், மூக்கு முடியை அதிகமாக வெட்டுவதால் வேறு பிரச்னைகளும் வரும். மிகவும் ஆழகமாக முடியை வெட்டுவதால் மூக்கு தசைகள் சேதமடைந்து ஓட்டைகளாகவும், தழும்புகளாகவும் வெளிப்படத் துவங்குகின்றன. இவ்வாறு சேதமடைந்த திசுக்கள் பாக்டீரியாவின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயமும் தொடர்ந்து வருகிறது.
கூர்மையும், சுத்தமும்
உங்களுடைய டிரிம்மரை உங்கள் உடனிருப்பவர்களுடன் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். இவ்வாறு பகிர்ந்து கொண்டால் தொற்று ஏற்படும். நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்களுடைய டிரிம்மர் பிளேடு கூர்மையாக இருப்பதையும் மற்றும் சுத்தமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூர்மையில்லாத பிளேடுகள் நிறைய காயங்களை ஏற்படுத்தும். அதே போல, சுத்தம் செய்யப்படாத டிரிம்மர்கள் பாக்டீரியா தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
