உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அனைத்து பெண்களும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் மேக்கப் செய்யும் போது தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். உதடுகளை அழகாக வெளிக்காட்ட லிப்ஸ்டிக் பயன்பட்டாலும், அதனைப் பயன்படுத்துவதால், அதில் உள்ள கெமிக்கல்களல் நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

அதிலும் சில பெண்கள் ஒரு நாளைக்கு பலமுறை தங்கள் உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைத் தீட்டுவார்கள். அதற்காக லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்று சொல்லவில்லை. லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது, அளவாக விஷேச நாட்களில் மட்டும், அதுவும் நல்ல தரமானதாக வாங்கிப் பயன்படுத்த வேண்டும். கடைகளில் விற்கப்படும் விலை குறைவில் கிடைக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்தினால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஆரம்பமாகும்.

அழகான மென்மையான உதடுகளைப் பெற சில டிப்ஸ்...

அதில் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். சரி, இப்போது உதடுகளுக்கு தரமில்லாத கண்ட கண்ட லிப்ஸ்டிக்குகளை வாங்கிப் போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகப்படியான மெட்டல்

அதிகப்படியான மெட்டல்

ஆய்வு ஒன்றில் லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால், அவை கடுமையான நோய்க்கு வழிவகுப்பதோடு, உறுப்புகள் பாதிப்படையவும் செய்யும் என்று சொல்கிறது. அதிலும் அதிகப்படியான காட்மியமானது சிறுநீரகத்தில் படிந்தால், அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும். மேலும் ஒரு நாளைக்கு பலமுறை லிப்ஸ்டிக் போட்டு வந்தால், வயிற்றில் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.

ஈயம் (Lead)

ஈயம் (Lead)

பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் ஈயம் அதிகமாக உள்ளது. ஈயம் நரம்புகளை அழிக்கக்கூடியவை. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், அதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்பிற்குள்ளாகும். இதனால் தான் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. மேலும் ஈயமானது சிறிது உடலினுள் சென்றாலும், பெரிய பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

பெட்ரோகெமிக்கல்

பெட்ரோகெமிக்கல்

லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெட்ரோகெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் இவை நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி, இனப்பெருக்கம், வளர்ச்சி, புலனாய்வு திறன் போன்றவற்றை அழிக்கும்.

ஃபார்மால்டிஹைடு மற்றும் கனிம எண்ணெய்

ஃபார்மால்டிஹைடு மற்றும் கனிம எண்ணெய்

ஃபார்மால்டிஹைடு என்பது ஒரு புற்றுநோயைத் தூண்டும் பதப்படுத்தும் பொருள். இதனால் மூச்சுத்திணறல், இருமல், கண்கள் மற்றும் சரும எரிச்சல் போன்ற இதர பக்க விளைவுகளும் ஏற்படும். மேலும் இதில் உள்ள மற்றொரு பொருளான கனிம எண்ணெய் சருமத்துளைகளை அடைத்து, இதனால் உதடுகளின் இயற்கை அழகைப் பாதிக்கும்.

பாராபென்ஸ் மற்றும் பிஸ்முத் ஆக்ஸி குளோரைடு

பாராபென்ஸ் மற்றும் பிஸ்முத் ஆக்ஸி குளோரைடு

இந்த இரண்டு பெருட்களும் லிப்ஸ்டிக் செய்யப் பயன்படுகிறது. இவையும் ஒருவகையான பதப்படுத்தும் பொருள் தான். இதனாலும் நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

எனவே எவ்வளவு தான் லிப்ஸ்டிக் தரமானதாக இருந்தாலும், அவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வேண்டுமானால் இயற்கை வழியில் உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

BEWARE: Harmful Effects Of Lipsticks

The following are a few harmful effects of lipsticks that can occur if you use low quality products constantly.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter