Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
சருமப் பாதுகாப்பிற்கு காபி தரும் கியாரண்டி...!
காபியைப் பற்றி எவ்வளவோ கட்டுக் கதைகள் வந்தாலும், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காபி தான் சிறந்த ஒரு பானம். எத்தனை டென்ஷன் இருந்தாலும் ஒரு கப் காபியில் ரிலாக்ஸ் ஆகி விடுவார்கள்.
நம்ம ஊர்களில் காபி கடைகளுக்கும் பஞ்சமே கிடையாது. அதுவும் நம் தமிழகத்தில் கிராமமானாலும் சரி, பெரு நகரமானாலும் சரி, தெருவுக்கு மூன்று காபி கடைகளாவது இருக்கும். வேலை டென்ஷன்களுக்கு இடையில் அங்கு போய் ஹாயாக ஒரு காபி சாப்பிட்டு வந்தால் தெம்பாகவும், சுறுசுறுப்பாகவும் வேலைகளைச் செய்து முடிக்கலாம்.
காபி நம் உடலுக்கு மிகவும் நல்லது என்றும், சில உடல் உபாதைகளிலிருந்து அது விடுதலை அளிக்கும் என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, நம் சருமத்திற்கும் காபியால் நிறைய பலன் உண்டு என்றும் தெரிய வந்துள்ளது. அத்தகைய காபி கலந்த சோப்புக்கள் அல்லது க்ரீம்களைப் பயன்படுத்துவதும் சருமத்திற்கு மிகமிக நல்லது.
நம் சருமத்திற்கு காபி எப்படியெல்லாம் நல்லது என்பதற்கான சில காரணங்களைப் பார்ப்போமா?

காற்று மாசுபாட்டிலிருந்து...
இப்போதெல்லாம் காற்று மாசுபாட்டால் நம் சருமம் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றன. காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இத்தகைய பிரச்சனைகளிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கின்றன.

மிருதுவாக, பளிச் பளிச்...
நம் சருமத்தில் உள்ள சிக்னல் திசுக்களை ரிப்பேர் செய்வதன் மூலம், காபி நம் சருமத்தை மிருதுவாகவும், இளகுவாகவும், பளிச்சென்றும் வைத்திருக்க உதவுகிறது.

இரத்த ஓட்டத்திற்கு...
நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே, நம் தோலும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படிப்பட்ட சுறுசுறுப்பான இரத்த ஓட்டத்திற்கு கியாரண்டி அளிக்கிறது காபி.

சூரியக் கதிர்களிலிருந்து...
யூ.வி. கார்சினோஜென்களிலிருந்து சருமத்தைக் காப்பதில் காபியின் பங்கு முக்கியமானதாகும். நாம் வெயிலில் நடந்து செல்லும் போது, சூரியனிலிருந்து கிளம்பும் புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது நம் உடலில் உள்ள டி.என்.ஏ-வைப் பாதித்து, தோல் புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளது. இத்தகைய பாதிப்புக்களை காபி தவிர்க்கிறது.



Click it and Unblock the Notifications
