Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
விளக்கெண்ணெய் பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க சில வழிகள்!!!
சருமத்தின் அழகைக் கெடுப்பதில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் ஒன்று. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், வயிறு, கணுக்கால் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் ஏற்படும். அதிலும் பெண்களுக்குத் தான் ஸ்ட்ரெட்ச் மார்க் அழகைக் கெடுக்கும் வகையில் வரும்.
இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு முன்னேற்றமும் தெரிந்திருக்காது. ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் இயற்கை வழிகளை நாடினால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் நல்ல தீர்வை விரைவில் காணலாம்.
இங்கு ஸ்ட்ரெட்ச் மார்க்கைப் போக்க விளக்கெண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதனை தினமும் செய்து வந்தால் விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்கலாம்.

விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாற்றில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைவதைக் காணலாம்.

சூடான விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயில் பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் உள்ளன. எனவே சிறிது விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மீது தடவி 30 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
சரிசம அளவில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை எடுத்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, பின் அவ்விடமானது சூடேறும் வரை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் எண்ணெயானது ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளை வெளியேற்றி, சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்து, சருமத்தை மென்மையாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், சில வாரங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைந்திருப்பதைக் காணலாம்.

விளக்கெண்ணெய் மற்றும் கிராம்பு
கிராம்பை அரைத்து, அதனை விளக்கெண்ணெயில் சேர்த்து, சிறிது சூடேற்றி, பின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறையும்.

கற்றாழை மற்றும் விளக்கெண்ணெய்
கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அதனை நன்கு நீர் போன்று அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் விளக்கெண்ணெய் சேர்த்து சூடேற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் சற்று சூடாக இருக்கும் போதே தடவ வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலியிக் அமிலம், பாதிக்கப்பட்ட கொலாஜனை சரிசெய்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யும்.



Click it and Unblock the Notifications
