Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
வார இறுதியிலாவது சருமத்தை பாதுகாக்க விரும்புறீங்களா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
தற்போதைய காலகட்டத்தில் அழகை இயற்கை முறையில் பராமரிப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. அதிலும் அலுவலகம் செல்பவர்களுக்கு அழகைப் பராமரிக்க நேரம் கிடைப்பதே இல்லை. அப்படி சருமத்தை சரியாக பராமரிக்க முடியாததால், பலரது சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறது.
மேலும் அலுவலகம் செல்பவர்களுக்கு நேரம் கிடைப்பது வார இறுதியில் தான். அப்படி வார இறுதி வரும் போது, அவர்கள் சருமத்தை அந்நாட்களில் பராமரித்து வந்தால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள், இறந்த செல்கள் போன்றவற்றை நீக்கி, சருமத்தை பொலிவோடும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
கழுத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு உதவும் பொருட்கள்!
குறிப்பாக வாரம் ஒரு முறை சருமத்தை இயற்கை பொருட்கள் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் அருமையான வழி. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவற்றை நீக்கிவிடுவதோடு, எந்த பக்கவிளைவும் இல்லாமல் சருமமும் பொலிவோடு இருக்கும்.
சரி, இப்போது இந்த வார இறுதியில் எந்த ஸ்கரப்பை வீட்டிலேயே செய்யலாம் என்று ஒருசில ஸ்கரப் ரெசிபிக்களை கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து, அதனை இந்த வாரம் முயற்சித்து, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

காபி ஸ்கரப்
1/2 கப் காபி தூள், 1/2 கப் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி ஸ்கரப் செய்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடுவதோடு, அதில் உள்ள எண்ணெய்கள் நல்ல மாய்ஸ்சுரைசராகவும் இருக்கும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்கரப்
5 கப் சர்க்கரை, 2 கப் ஆலிவ் ஆயில், 2 எலுமிச்சை மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக ஒரு பௌலில் போட்டு நன்கு கிளறி விட்டு, பின் அதனை கைகள், கால்களில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமையானது நீங்கி, சருமம் அழகாக ஜொலிக்கும்.

மாதுளை ஸ்கரப்
2 கப் சர்க்கரை, 1/4 கப் தேங்காய் எண்ணெய், சிறு துளிகள் புதினா எண்ணெய் மற்றும் சிறிது மாதுளை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வென்னிலா மற்றும் சர்க்கரை ஸ்கரப்
இந்த ஸ்கரப்பிற்கு 2 12 கப் சர்க்கரை, 3/4 கப் சர்க்கரை பொடி, 4-5 டேபிள் ஸ்பூன் வென்னிலா எசன்ஸ் மற்றும் 1/4 கப் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அதனை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

சிட்ரஸ் ஸ்கரப்
சருமத்தின் கருமையைப் போக்கும் ஸ்கரப்களில் ஒன்று தான் இந்த சிட்ரஸ் ஸ்கரப். இந்த ஸ்கரப் செய்ய 1 கப் உப்பு, 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் தேங்காய் எண்ணெய், சிறிது எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து, உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பாதாம் மற்றும் ஆரஞ்சு ஸ்கரப்
1 கையளவு பாதாம், 1 ஆரஞ்சு பழத்தின் தோல் மற்றும் 1 கப் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அதனை உடல் முழுவதும் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் உடலில் உள்ள கருமை நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சாக்லெட் ஸ்கரப்
சாக்லெட் ஸ்கரப் என்று கேட்கும் போதே இனிமையாக உள்ளது தானே! ஆம் சாக்லெட் கொண்டு ஸ்கரப் செய்தால், எப்படி நாவிற்கு சுவையைத் தருகிறதோ, அதேப் போல் இது சருமத்திற்கு அழகைத் தரும். அதற்கு 1/2 கப் சர்க்கரை, 1/2 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1/2 கப் கொக்கோ சேர்த்து கலந்து, பின் அதில் 1/2 கப் கனோலா ஆயில் சேர்த்து கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும்.

வென்னிலா மற்றும் தேங்காய் ஸ்கரப்
இந்த முறைக்கு 1/2 கப் தேங்காய் எண்ணெய், 1/2 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1/2 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமமானது நன்கு மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

இனிப்பு மற்றும் காரம் கலந்த ஸ்கரப்
இந்த ஸ்கரப்பை பலர் செய்யலாமா என்று யோசிப்பார்கள். ஏனெனில் இதில் காரம் இருப்பதால், எங்கு இது சருமத்திற்கு அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்திவிடுமோ என்று தான். ஆனால் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குவதில் சிறந்தது. அதற்கு 1 கப் நாட்டுச்சர்க்கரை, 1 கப் சர்க்கரை, 3/4 கப் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் பட்டை, 2 டீஸ்பூன் இஞ்சி மற்றும் 2 டீஸ்பூன் ஜாதிக்காய் ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு நன்கு அடித்து, பின் அதனை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் நீரில் நன்கு அலசி விட வேண்டும்.

வைட்டமின் ஈ ஸ்கரப்
இந்த ஸ்கரப்பிற்கு 1 கப் சர்க்கரை, 1/3 கப் உப்பு, 1/2 கப் விர்ஜின் ஆலிவ் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ ஆயில் மற்றும் சிறு துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அதனைக் கொண்டு உடல் முழுவதும் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.

கல் உப்பு ஸ்கரப்
கல் உப்பு ஸ்கரப் மிகவும் ஈஸியான, அதே சமயம் நல்ல பலன் தரக்கூடிய ஸ்கரப்பும் கூட. அதற்கு 1 கப் கல் உப்பு மற்றும் 1/2 கப் தேங்காய், ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை 1 நாள் முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் அதனைக் கொண்டு உடலை மென்மையாக ஸ்கரப் செய்தால், அது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதுடன், சருமத்தில் போதிய ஈரப்பதத்தையும் தங்க வைக்கும்.



Click it and Unblock the Notifications











