Latest Updates
-
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க
சருமத்தின் பொலிவை அதிகரிக்க வீட்டில் செய்யக்கூடிய சில எளிமையான ஸ்கரப்கள்!!!
பாடி ஸ்கரப்கள் நம் உடம்பில் காணப்படும் அழுக்கு, இறந்த செல்கள் மற்றும் அதிகபட்ச எண்ணெயை நீக்கவும் அதே நேரம் உடம்பைப் பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் நீரிழப்பு இல்லாமல் பாதுகாக்கவும் மிகவும் சிறந்த ஒன்று. வளர்ந்து வரும் பொருளாதார சிக்கல்களில் அழகு சாதனப் பொருட்கள் விதிவிலக்கல்ல. இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி விற்கின்றன.
இதுபோன்ற பொருட்களை வீட்டிலேயே செய்ய முடிந்தால் அது பாதுகாப்பான மற்றும் சிறப்பான பலன்களைத் தருவதாக இருக்குமே? சரி. இப்பொழுது வீட்டிலேயே செய்யத்தக்க உங்கள் சருமத்தைப் பொலிவுடனும், அப்பழுக்கற்றும் மற்றும் மிருதாகவும் செய்யும் சில ஸ்கரப்களை பற்றிப் பார்ப்போமா?

காபி பாடி ஸ்கரப்
காபி ஒரு காலைப் புத்துணர்வு பானமாக இருப்பதோடு பல பலனகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இதில் அதிகமாக உள்ள கேஃபைன், சருமத்தின் மீது சிறந்த தூய்மையாக்கியாக செயல்படுகிறது. அது பிடிவாதமான இறந்த செல்களை அகற்றி சரும ஈரப்பதத்தை ஆழமாக பராமரிக்கிறது.
தேவையான பொருட்கள்:
½ கப் காபி
½ கப் சர்க்கரை
1 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 டீ ஸ்பூன் உப்பு (சால்ட்)
செய்முறை:
காபியில், சர்க்கரை மற்றும் உப்பைச் சேர்த்து பின்னர் மேற்கூறிய பிற பொருட்களையும் சேர்த்து கலக்கினால் உங்கள் சருமத்தை புத்தொளியூட்டும் ஸ்கரப் தயார்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்கரப்
நீங்கள் சருமத்தை பாதுகாக்க எவ்வளவு முயன்றாலும், வெயிலாலும் புற ஊதாக் கதிர்களாலும் உங்கள் சருமம் பாதிப்படைந்து பொலிவிழப்பதை தவிர்க்க முடியாது. சன் ஸ்க்ரீன் உங்கள் சருமத்திற்குப் பாதுகாப்பு அளித்தாலும் அது ஏற்கனவே உள்ள கருமையை நீக்காது. எலுமிச்சை நன்கு சுத்தம் செய்யும் குணங்களைக் கொண்டுள்ளது. அதோடு சர்க்கரையும் சேர்ந்து நல்ல சுத்தத்தைத் தரும். கருமையில்லாத, வடுக்களற்ற, தெளிவான மற்றும் பளபளக்கும் முகத்தைப் பெற விரும்புபவர்களுக்கு இந்த சர்க்கரை எலுமிச்சை ஸ்கரப் ஒரு நல்ல தீர்வு.
தேவையான பொருட்கள்:
5 கப் சர்க்கரை
2 கப் ஆலிவ் எண்ணெய்
2 எலுமிச்சை பழங்கள்
3 டேபிள் ஸ்பூன் தேன்
செய்முறை:
சர்க்கரையை ஆலிவ் எண்ணெயுடன் நன்கு கலக்குங்கள். அதில் எலுமிச்சையை நன்கு பிழிந்து அதனுடன் தேனைக் கலக்க வேண்டும். அதன் பிறகு அனைத்தையும் நன்கு கலக்கி வைத்துக்கொண்டு குளித்து விட்டுத் தேவையான இடங்களில் தடவுங்கள். மெதுவாகவும் லேசாகவும் சருமத்தை பாதிப்படையாமல் தேய்த்து விடுங்கள். தேன் கலந்த இந்த ஸ்கரப் சருமத்தின் ஈரப்பதத்தைக் காப்பதோடு, இதை செய்து முடித்த பிறகு காய்ந்தோ அல்லது தோல் உலர்ந்து உதிர்ந்தோ போவதைத் தடுக்கும்.

பெப்பர்மின்ட் மற்றும் மாதுளை ஸ்கரப்
இதில் பெப்பர்மின்ட் மற்றும் மாதுளை உள்ளதால், நாம் ஒரு நல்ல புத்துணர்வை எதிர்ப்பார்க்கலாம். நன்கு தூய்மைப்படுத்துவதோடு, இந்த ஸ்கரப் நல்ல நறுமணத்தையும் கொண்டு உங்களுடைய மனத்தைக் கிளர்ச்சியடையச் செய்து உங்களை முன்பைவிட பெருமிதத்தோடு உணரச்செய்யும்.
தேவையான பொருட்கள்:
2 கப் சர்க்கரை
¼ கப் தேங்காய் எண்ணெய்
சில துளிகள் பெப்பர்மின்ட் எண்ணெய்
மாதுளைச் சாறு அல்லது ராஸ்ப்பெர்ரி சாறு
செய்முறை:
சர்க்கரையில் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் நறுமணத்திற்காகவும் புத்துணர்வுக்காகவும் பெப்பர்மின்ட் எண்ணெயை சேருங்கள். நிறத்திற்கு மாதுளை அல்லது ராஸ்ப்பெர்ரி சாறைச் சேருங்கள். செயற்கை நிறங்களை உபயோகிப்பது உகந்ததல்ல. ஏனெனில் இயற்கை பொருட்களை உபயோகித்தல் மட்டுமே உங்கள் சருமத்தை மெருகூட்ட உகந்த வழி.

வெனில்லா மற்றும் தேங்காய் பாடி ஸ்கரப்
வெனில்லா சுவையுடனும் தேங்காயின் நற்குணங்களும் கொண்ட இது மற்றுமொரு சிறந்த ஸ்கரப் ஆகும். பனிகாலங்களுக்கு இது மிகவும் உகந்த ஒன்று ஏனென்றால், சருமத்தை ஈரப்பதத்துடனும், மெருகுடனும் அதே சமயம் தூய்மையுடனும் வைக்கும்.
தேவையான பொருட்கள்:
½ கப் தேங்காய் எண்ணெய்
½ கப் பழுப்புச் சர்க்கரை (ப்ரௌன் சுகர்)
½ டீ ஸ்பூன் வெனில்லா
செய்முறை:
இவை அனைத்தையும் கலந்து குளிக்கும்போது நன்குச் சுற்றுவட்டத்தில் தேய்க்க வேண்டும். அதன் பிறகு உச்சி முதல் பாதம் வரை நல்ல மிருதுவான மற்றும் கவரும் பொலிவான சருமத்தைக் கொண்டிருப்பீர்கள்.

சிட்ரஸ் ஸ்கரப்
இதுவும் கருமையை அகற்றி வெண்மையாக்க உதவும் ஒரு ஸ்கரப். மேலும், இதில் உள்ள தேங்காய் எண்ணெய், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, தூய்மைப்படுத்தி கருமையைப் போக்கும்.
தேவையான பொருட்கள்:
1 கப் கடல் உப்பு
½ கப் சுத்திகரிக்கப்படாத சர்க்கரை
½ கப் தேங்காய் எண்ணெய்
சில துளிகள் திராட்சை எண்ணெய்
சில துளிகள் ஸ்வீட் லெமன் எண்ணெய்
சில துளிகள் எலுமிச்சை எண்ணெய்
செய்முறை:
சர்க்கரை மற்றும் உப்பை புரட்டுங்கள். அனைத்து எண்ணெய்களையும் தேங்காய் எண்ணெயுடன் கலக்குங்கள். இந்தக் கரைசலை சர்க்கரை மற்றும் உப்புக் கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும். அதை சருமத்தில் பூசி சுற்றுவட்டத்தில் ஒரு 5 முதல் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பின்னர் கழுவி விடுங்கள்.

பாதாம் ஆரஞ்சு ஸ்கரப்
பாதாம் பருப்புகள் மிகவும் நல்ல பயன்களை குறிப்பாக குளிர்காலங்களுக்கு ஏற்ற வகையில் உள்ள தன்மைகளை கொண்டவை. இயற்கை பாதாம் எண்ணெய் குளிர்காலத்தில் உடலுக்கு ஈரப்பதத்தை தர இன்றியமையாத ஒன்று. ஆரஞ்சு புத்துணர்வு தந்து தூய்மைபடுத்த உதவக்கூடியது.
தேவையான பொருட்கள்:
ஒரு கை நிறைய பாதாம் பருப்புகள்
1 ஆரஞ்சு தோல்
1 கப் ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
இவையனைத்தையும் நன்கு கலந்து கரைகிறவரை மிக்ஸி அல்லது ப்ளெண்டரில் அடித்துக் கொள்ளுங்கள். இந்த கூழ்மத்தை உடல் முழுவதும் பூசுங்கள். பத்து நிமிடங்கள் மசாஜ் செய்த பின் அலசிவிடுங்கள்.

சாக்லெட் ஸ்கரப்
இது சற்று சுவையான விஷயம் தான். நாவிற்கு மட்டுமல்ல உங்கள் சருமத்திற்குக் கூடத்தான். நன்கு ஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதமளிக்கும் தன்மைகள் சாக்லெட்டில் உள்ளன. இவை இந்த ஸ்கரப்பை சருமத்தை தூய்மையாக்க உதவும் ஒரு பானமாகச் செய்கின்றன.
தேவையான பொருட்கள்:
½ க்ப் சர்க்கரை
½ கப் பழுப்புச் சர்க்கரை
½ கப் கானோலா எண்ணெய்
½ கப் கொக்கோ
செய்முறை:
கானோலா எண்ணெயைத் தவிர அனைத்தையும் நன்கு கலந்து கடைசியில் கானோலா எண்ணெயையும் கலந்து அதை உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் தடவி நன்கு பரவலாக சுற்றுவட்டத்தில் மசாஜ் செய்யவும். பின்னர் அலசி விடவும்

இனிப்பு மற்றும் கார ஸ்கரப்
பதப்படுத்தாத வாசனைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய மசாலாக்கள் இந்திய உணவின் ரகசியமாகும். இவை உங்கள் ஸ்கரப்பில் சேர்ந்தால் என்னவாகும்? உணவை சுவையாக்க இவை எப்படி உபயோகப்படுகின்றனவோ அவ்வாறே நம் சருமத்தைப் பராமரிக்கவும் தூய்மையாக்கவும் இவை உதவுகின்றன.
தேவையான பொருட்கள்:
1 கப் பழுப்புச் சர்க்கரை
1 கப் சர்க்கரை
¾ கப் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்
2 டீ ஸ்பூன் லவங்கப்பட்டை (பொடி)
2 டீ ஸ்பூன் இஞ்சி
2 டீ ஸ்பூன் சாதிக்காய்
செய்முறை:
அனைத்தையும் கலந்து கொள்ளுங்கள். நன்கு மிக்சி அல்லது ப்ளெண்டரில் அதை அடித்துக்கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவையை உடல் முழுவதும் பூசி உங்கள் சருமம் இனிப்பு மற்றும் கார சுவையைப் பெறச் செய்யுங்கள். பின்னர் நன்கு அலசிவிடுங்கள்.

வைட்டமின் ஈ மற்றும் கரும்புச் சர்க்கரை ஸ்கரப்
இதனுடைய பலன்களைத் தனியாக கூற வேண்டியதில்லை. ஏனென்றால் இதில் வைட்டமின் ஈ உள்ளது. மேலும் இது குளிர்காலத்தில் சரும வறட்சியைப் போக்கி வெண்மை படலங்களை தவிர்க்க மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதில் உள்ள தேங்காய் எண்ணெய் சரும ஈரப்பதத்தை காக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
1 கப் கரும்புச் சர்க்கரை
1/3 கப் உப்பு
½ கப் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்
2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் அல்லது பௌடர்
வாசனைக்கு சில துளிகள் தாழம்பூ எண்ணெய்
செய்முறை:
வைட்டமின் ஈ மற்றும் தாழம்பூ எண்ணெயைத் தவிர பிற அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளுங்கள். கடைசியில் இந்த இரண்டு எண்ணெயையும் அதனுடன் கலந்து கலவையை உடல் முழுவதும் மெதுவாகத் தேய்த்து இறந்த செல்களை அகற்றுங்கள்.

கடல் உப்பு ஸ்கரப்
உண்மையாகவே வீட்டில் செய்யக்கூடிய ஸ்கரப்களில் இது அருமையான ஒன்று. இதில் உள்ள தூய்மைப்படுத்தும் குணம் மட்டுமல்ல நச்சுத்தன்மையை நீக்கும் குணமும் உள்ளது.
தேவையான பொருட்கள்:
1 கப் கடல் கல் உப்பு
½ கப் ஆலிவ், தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய்
செய்முறை:
எண்ணெயை உப்பின் மீது ஊற்றி கலக்குங்கள். அந்த கலவை 24 மணி நேரம் நன்கு ஊறட்டும். அடுத்த நாள், அதை உடம்பில் நன்கு பூசி தேய்த்து லேசாக மசாஜ் செய்யுங்கள். அழுத்தித் தேய்த்தால் அரிப்பு ஏற்படும் என்பதால் அவ்வாறு செய்யாதீர்கள்.



Click it and Unblock the Notifications