Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
அக்குள் கருமையாக உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க...
தற்போது நிறைய பேருக்கு ஃபேஷன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் பலர் ஃபேஷனான ஆடைகளை அணிய விரும்புகின்றனர். அத்தகைய ஆடைகள் அனைத்தும் ஸ்லீவ்லெஸ் ஆக இருக்கும். ஆனால் அக்குள் கருமையாக இருப்பதால், பலரால் இந்த மாதிரியான ஆடைகளை அணிய முடியாமல் போய்விடுகிறது. இதனால் பலர் அக்குளை வெள்ளையாக்கும் பல அழகு சிகிச்சைகளை, அதிக பணம் செலவழித்து மேற்கொள்கின்றனர்.
ஆனால் இந்த மாதிரியான சிகிச்சையை பணம் இருப்பவர்கள் மேற்கொள்ள முடியும். அதுவே பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அத்தகையவர்களுக்காக ஒரு எளிமையான இயற்கை வைத்தியம் உள்ளது. ஆம், இவ்வுலகில் இயற்கை வைத்தியத்திற்கு இருக்கும் சக்தி வேறு எந்த ஒரு பொருளுக்கும் கிடையாது. மேலும் இயற்கை முறையில் எந்த செயலை மேற்கொண்டாலும், பக்கவிளைவின்றி நன்மையைப் பெறலாம்.
சரி, இப்போது அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, அக்குளை வெள்ளையாக்கி, விருப்பமான ஆடைகளை அணிந்து மகிழுங்கள்.

எலுமிச்சை ஸ்கரப்
அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் தூள் மற்றும் தயிர்
மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு
தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.

சந்தனப் பவுடர் மற்றும் பால்
சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

குங்குமப்பூ
குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூள்
மேற்கூறிய அனைத்து கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கு ஸ்கரப்
இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications
