உதடு வெடிப்பு அடிக்கடி ஏற்படுதா? கவலையவிடுங்க...

By Maha

பொதுவாக குளிர் அல்லது பனி காலத்தில் தான் உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புகள் உண்டாகும். ஏனெனில் அப்போது அளவுக்கு அதிகமான குளிர் இருப்பதால், மிகவும் மென்மையான உதடு எளிதில் வறட்சியடைந்துவிடும். ஆனால் குளிரினால் மட்டும் உதடுகளில் பிரச்சனைகள் ஏற்படாது. அதிகப்படியான வெயில் அடித்தாலும், உதடுகளில் வறட்சி ஏற்பட்டு, வெடிப்புகள் உண்டாகும். இத்தகைய பிரச்சனைக்கு நிறைய பேர் ஆளாகியிருப்பார்கள்.

இத்தகைய வறட்சி மற்றும வெடிப்புக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் காரணம் உடலில் நீர் வறட்சி இருப்பது. மற்றொன்று, கோடையில் அதிகம் வியர்க்கும் என்பதால், பலர் பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தமாட்டோம். இவ்வாறு இதுவரை உதட்டிற்கு கொடுத்த பராமரிப்புக்களை கொடுக்காததும் வறட்சி மற்றும் வெடிப்புக்களை உண்டாக்கும்.

சரி, இப்போது அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் உதடு வெடிப்புக்களை போக்க சில இயற்கை வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து பார்த்து பின்பற்றுவோமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர்

தண்ணீர்

கோடையில் உதட்டில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு, தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் அதிக நேரம் வெளியே வெயிலில் வேலை செய்வதாக இருந்தால், சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உதட்டின் வறட்சியை தவிர்க்கலாம்.

உதட்டில் எச்சில் வைக்க வேண்டாம்

உதட்டில் எச்சில் வைக்க வேண்டாம்

உதடுகள் வறட்சி அடைந்ததும், அனைவரும் செய்வது உதட்டில் எச்சில் வைப்பது தான். ஆனால் அவ்வாறு அடிக்கடி எச்சில் வைத்தால், பின் அது உதட்டின் வறட்சியை இன்னும் அதிகமாக்கி, உதடுகளில் இரத்தம் வடிதலை உண்டாக்கும். ஆகவே உதடு வறட்சியை தவிர்க்க முதலில் எச்சில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

தினமும் இரவில் படுக்கும் போது உதட்டிற்கு ஆலிவ் ஆயிலை தடவிக் கொண்டு படுத்தால், உதடுகளில் இருக்கும் காயங்கள் நீங்கி, வறட்சியும் போய்விடும்.

குளிர்ச்சியான பழச்சாறு

குளிர்ச்சியான பழச்சாறு

உடலில் உள்ள வெப்பமும், உதடு வறட்சிக்கு ஒரு காரணம். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு, அவ்வப்போது பழச்சாறு குடித்து வர, வெப்பம் தணிவதோடு, உதடு வறட்சியும் நீங்கும்.

சன் ஸ்கிரீன்

சன் ஸ்கிரீன்

சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கமும் உதடுகளில் வறட்சி மற்றும் வெடிப்புக்களை உண்டாக்கும். ஏனெனில் மற்ற பகுதிகளை விட, உதடுகள் மிகவும் மெல்லியது. ஆகவே சரியான பாதுகாப்பு உதட்டிற்கு அவசியம். அதற்கு வெளியே செல்லும் முன் உதட்டிற்கான சன் ஸ்கிரீனை தடவிச் செல்ல வேண்டும்.

நீண்ட நேரம் ஏசி வேண்டாம்

நீண்ட நேரம் ஏசி வேண்டாம்

வெயில் அதிகம் அடிப்பதால், ஏசியில் உட்கார ஆசைப்படுவோம். ஆனால் அவ்வாறு நாள் முழுவதும் ஏசியில் உட்கார்ந்தால், அதிலிருந்து வெளிவரும் குளிர்ந்த காற்று, உதட்டிற்கு வறட்சியை உண்டாக்கும். எனவே ஏசியில் நீண்ட நேரம் உட்கார்வதை தவிர்த்து, இயற்கை காற்றை பெறுவது நல்லது.

குளியல்

குளியல்

தினமும் ஒருமுறைக்கு இரண்டு முறை குளிப்பது, உடல் வெப்பத்தை தணிப்பதோடு, சரும வறட்சியையும் தடுக்கும்.

பயணம்

பயணம்

வெளியே செல்லும் போது வெப்பம், அதிகப்படியான காற்று மற்றும் மாசுக்களினாலும், உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்படும். ஆகவே வெளியே பயணம் மேற்கொள்ளும் போது, முகத்தை துணியால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

சில நேரங்களில் உதடு வெடிப்புகளினால், இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அப்போது அந்த இரத்த வடிதலை தவிர்த்து, வறட்சியைப் போக்கி, அழகான உதட்டைப் பெற ஐஸ் கட்டிகளைக் கொண்டு, உதட்டிற்கு மசாஜ் செய்ய வேண்டும்.

மேக்-கப்

மேக்-கப்

அதிகப்படியான லிப்ஸ்டிக் அல்லது லிப் கிளாஸ் பயன்படுத்துவதாலும், அதில் உள்ள கெமிக்கல்கள் உதட்டை வறட்சி அடையச் செய்யும். ஆகவே கெமிக்கல் கலந்ததை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை பொருட்களான தேன் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, April 23, 2013, 11:53 [IST]
Desktop Bottom Promotion