Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
ஆண்களே கேஷுவலா டிரஸ் பண்ணுங்க.. 'செமை'யா இருப்பீங்க!
இன்றைய காலத்தில் ஆடை அலங்காரத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றார் போல பேஷனை மாற்றி கொள்கின்றனர். ஆனால் பேஷனை பின்பற்றுவதால் ஸ்டைலுடன் ஒருவர் காட்சி அளிக்கிறார் என்று கூறி விட முடியாது. பேஷன் வரும் போகும், ஆனால் ஸ்டைல் என்பதற்கு அழிவே கிடையாது. இது மிகப்பெரிய உண்மையாகும்.
தற்போதைய பேஷனை பின்பற்றினாலும் கூட, ஸ்டைலுடன் இருக்க வேண்டுமானால் கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கான சில அடிப்படை டிப்ஸ்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவைகளை படித்து. உங்கள் ஆடை அலமாரியை எப்படி நிரப்ப வேண்டும், ஷாப்பிங் அறிவுரையை எப்படி பெறுவது போன்றவைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இதோ உங்களுக்கான சில முக்கியமான ஸ்டைல் டிப்ஸ்...

ஃபிட்டாக இருத்தல் அவசியம்
ஃபிட் என்று கூறுவது, உடல் கட்டமைப்பு மட்டுமல்லாது, உடைகளையும் பற்றி தான். பல ஆண்கள் தங்களுக்கு தகுந்த அளவில் ஆடை அணியாமல் மிகவும் லூசாக அணிவார்கள். உங்கள் ஆடை அலமாரியில் இருக்கும் அனைத்து ஆடைகளும், உங்கள் உடலுக்கு ஏற்ற அளவில் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக அவைகள் உடலுடன் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சரியில்லாத அளவு என்பது ஒரு நோய் போன்றது. ஆகவே உடனே அதனை சரிசெய்யுங்கள்.

எளிமையாக இருங்கள்
உடை அலமாரியில் உங்களுக்கு தேவையான அனைத்தும் இருந்த போதிலும், அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. ஒரே நேரத்தில் மூன்றுக்கு மேற்பட்ட நகைகளையோ, மூன்று நிறங்களுக்கு மேல் அடங்கிய ஆடை மற்றும் அணிகலன்களையோ அணியாதீர்கள். இப்போதெல்லாம் ஒரு ராக் ஸ்டாரின் தோற்றம் கூட, பேஷன் இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை நீங்கள் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டால், இதை பற்றியெல்லாம் கவலை படத்தேவையில்லை. ஆனால் மற்றவர்களை ஈர்க்க வேண்டுமானால், எளிமையான ஸ்டைலை பின்பற்றுங்கள். கோடு போட்ட கருப்பு சட்டை, பட்டன் போடாத வெண்ணிற ப்ளேசர் மற்றும் கருமையான நிறத்தில் ஒரு ஜீன்ஸ், எடுப்பான ஒரு பெல்ட் மற்றும் அதற்கேற்ப ஷூ என இவற்றை மட்டும் அணிந்து பாருங்கள். உங்கள் தோற்றம் அனைவரையும் வசீகரிக்கும். அதனுடன் சேர்த்து ஈர்க்கும் வகையில் ஒரு வாட்ச் கூட அணியலாம். அதற்கு மேல் எதுவும் வேண்டாம்.

துணைக்கருவிகளின் மீது கவனம் தேவை
நீங்கள் ஒரு ஸ்வெட்டர் போடுகிறீர்கள் என்றால் சரியான அளவு மிகவும் முக்கியம். சில ஸ்வெட்டர் பெரிதாக இருக்கும், சில வகை சிறியதாக இருக்கும். இதில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதி - ஸ்வெட்டருக்கு ஈடுகொடுக்க வேண்டுவது உங்கள் பேண்ட். நீங்கள் பெரிய அளவில் கரடு முரடான ஸ்வெட்டர் அணியும் போது, உங்கள் பேண்ட்டும் கரடு முரடாக இருக்க வேண்டும். அதற்காக சில்க் அல்லது கம்பளி துணியில் பேண்ட் போடக்கூடாது. வேண்டுமானால் கார்கோ அல்லது ஜீன்ஸ் வகை பேண்ட்களை அணியலாம்.

காஷுவல் ஆடைகள்
காஷுவல் ஆடைகளின் மீது பார்வையை மாற்றிடுங்கள். அது ஒன்றும் அலுத்து போகிற வகை கிடையாது. கட்டம் போட்ட காலர் உள்ள சட்டைகளை, சைனோஸ் வகை பேண்ட்டுடன் அணிந்தால், அப்புறம் பாருங்கள் உங்கள் தோற்றத்தை!

அனைத்திலும் ஒரு படி மேலே இருங்கள்
நீங்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கலாம். ஆனால் அவை தவறாக போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான ஆடை அணியாமல் இருப்பதை விட, கொஞ்சம் அளவுக்கு அதிகமாக ஆடை அணிவது எவ்வளவோ மேல். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இது தான் - எங்கே செல்கிறீர்கள், யாருடன் செல்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். அதற்காக நீங்கள் செல்லும் இடத்தின் விழா நாயகனை விட, நீங்கள் நன்றாக அலங்காரம் செய்து விடாதீர்கள்.

தனியாக ஷாப்பிங் செல்லாதீர்கள்
நீங்கள் கடையில் உள்ள விற்பனையாளர்களை கண்மூடித் தனமாக நம்பினாலும் கூட, எப்படியாவது உங்களிடம் பொருட்களை விற்று விட வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள். அதற்கு அவர்களுக்கு கமிஷனும் கிடைக்கும். அதனால் உங்களுக்கு உண்மையான கருத்தை வெளிப்படுத்தும் உங்கள் நண்பர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்.

சின்ன சின்ன விஷயங்களின் முக்கியத்துவம்
சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் கடைசியாக அணியும் சிறு பொருட்கள் தான் முதலில் அனைவரையும் ஈர்க்கும். அதனால் சின்ன சின்ன விஷயங்களை கூட கோட்டை விடாமல் கவனம் செலுத்துங்கள். உதாரணத்திற்கு ஸ்கார்ஃப், கைக்குட்டை அல்லது டையை நீங்கள் அணிவிக்கும் ஸ்டைல் அனைவரையும் ஈர்க்கலாம்.

ஷூ
நல்ல தரமுள்ள ஷூக்களை வாங்குங்கள். உங்களிடம் முதலில் பெண்கள் கவனிப்பது, உங்கள் ஷூக்களை தான். முக்கியமாக அது எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது என்பதை கவனிப்பார்கள். ஷூக்களை ஒழுங்காக பராமரிக்காமல் போனால், உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. அதனால் அதனை நன்றாக பராமரியுங்கள். உங்களுக்கு அருமையான ரசனை உள்ளது என்பதை நிரூபிக்க, நல்ல தரமுள்ள ஷூக்களை வாங்கி, அவைகளை நல்ல நிலையில் வைத்திடுங்கள்.

ஃபேஷனை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை
ஒரு ஆடை இப்போது பேஷன் என்பதால், அது உங்கள் ஆடை அலமாரியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு உண்மையிலேயே எது பிடிக்கிறதோ அதை மட்டும் வாங்குங்கள். முதலில் உங்கள் ரசனைக்கேற்ப உங்கள் அலமாரியை நிரப்புங்கள். அதன் பின் ஃபேஷனுக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் ஆடைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கொஞ்சம் பணத்தையும் சேமிக்கலாம்.

படங்கள் போட்ட டி-சர்ட்
பெரிய படங்கள் அல்லது லோகோ போட்ட டி-சர்ட்டுகளை அணியும் போது, நீங்கள் ஒரு நடமாடும் விளம்பர பலகையை போல் காட்சி அளிப்பீர்கள். அதனால் அவ்வகை டி-சர்ட்டுகளை விட்டு, கிளாசிக் வகை V-கழுத்து கொண்ட டி-சர்ட் அல்லது கலை நயமுள்ள டி-சர்ட்டுகளை அணியுங்கள். அப்படி போடும் போது பார்ப்பதற்கு இளமையுடன், பிராண்ட் பைத்தியமாக இல்லாமல் காட்சி அளிப்பீர்கள்.



Click it and Unblock the Notifications











