Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா?
பெண்களே! தொடை பெருசா இருக்கா? அப்ப அத மறைக்க, இதோ சில டிப்ஸ்...
பெண்களுக்கு ஃபேஷனாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஒல்லியாக இருந்தால், எந்த ஒரு கவலையுமின்றி விருப்பமான ஆடைகளை அணியலாம். நிறைய நடிகைகள் மற்றும் மாடல்கள், உடலை கட்டுக்கோப்பாக, உடல் வடிவத்தை அழகாக பராமரித்து, இன்றும் இளமையுடன் காணப்படுகின்றனர். அவர்களின் இரகசியம் என்னவாக இருக்குமென்றால், சரியான டயட் மற்றும் தினந்தோறும் உடற்பயிற்சி தான்.
ஆனால் சில பெண்கள் வடிவத்தை இழந்து காணப்படுவார்கள். அது தொப்பையாகவோஅல்லது பெரிய தொடையாகவோ இருக்கலாம். இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள் எந்த ஒரு விருப்பமான (ஃபேஷனான) ஆடைகளையும் அணிய முடியாது. உதாரணமாக, தொடை பெரியதாக இருக்கும் போது, டைட் பேண்ட் அணிந்தால், மிகவும் கேவலமாக இருக்கும்.
எனவே அத்தகைய பெண்களுக்காக, ஒரு சில ஃபேஷன் ட்ரிக்ஸ்களை கொடுத்துள்ளோம். அதனைப் பின்பற்றினால், தொடை பெரியதாக தெரியாமல் இருப்பதோடு, ஃபேஷனாகவும் இருக்கும். சரி, அந்த ட்ரிக்ஸ்களைப் பார்ப்போமா!!!

ஜம்ப்சூட் (Jumpsuit)
சோனாக்ஷி சின்ஹா மிகவும் குண்டாக இருந்தாலும், அவருக்கு எப்படி ஆடைகளை தேர்ந்தெடுத்து போட்டால், ஒல்லியாக தெரிவோம் என்பது நன்கு தெரியும். எனவே தான் அவர், சற்று ஃபேஷனான ஜம்ப்சூட்டை அதிகம் அணிகிறார். ஏனெனில் இந்த உடையை அணிந்தால், ஒல்லியாகவும், உயரமாகவும் தெரியும்.

குர்தா
குண்டாக இருக்கும் பெண்களுக்கு ஒரு சிறந்த ஆடை என்றால் அது குர்தா தான். இதனால் அதை அணிந்தால், சற்று ஃபேஷனாகவும், அடக்கமான தோற்றத்துடனும் காணலாம்.

சேலை
பெரிதாக இருக்கும் தொடையை மறைக்க உள்ள சிறந்த வழிகளுள் ஒன்று தான் சேலை. சேலை அணிந்தால், செக்ஸியாக காணப்படுவது மட்டுமின்றி, பெரியதாக இருக்கும் தொடைகளும் மறைக்கப்படும்.

தோதி பேண்ட்டுகள்
நன்கு ஃபேஷனாக காணப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் தோதி பேண்ட் அணிந்து, சட்டைகளை அணிந்தால் நன்றாக இருக்கும்.

பாலாஸ்ஸோ பேண்ட்
இந்த மாதிரியான பேண்ட்டுகள் மிகவும் லூசாக இருப்பதால், இதனை அணிந்தால் ஃபேஷனாக மட்டுமின்றி, பெரிய தொடைகளும் வெளிப்படாமல் இருக்கும். மேலும் தற்போது இந்த உடையை பல பெண்கள் விரும்பி வாங்கி அணிகின்றனர்.

மேக்ஸி கவுன்
நல்ல அடர்ந்த நிறம்ததில் இருக்கும் மேக்ஸி கவுன்களை அணிந்தால், தொடைகள் மறைக்கப்படுவதோடு, சற்று செக்ஸியான தோற்றத்தையும் கொடுக்கும்.

நீளமான பாவாடைகள்
நீளமான பாவாடைகள் பார்ப்பதற்கு மேக்ஸி கவுன் போன்று இருந்தாலும், இது ஒரு ஹிப்பி லுக்கைக் கொடுக்கும். அதிலும் இதற்கு சட்டைகளையோ அல்லது ஸ்லீவ்லஸ் மேலாடைகளையோ அணிந்தால் சூப்பராக இருக்கும்.

பிரிண்டட் மேக்ஸி ஆடைகள்
சிம்பிளாகவும், பளிச்சென்றும் காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், பிரிண்டட் மேக்ஸி ஆடைகள் சரியானதாக இருக்கும். இத்தகைய ஆடைகள் தொடைகளை மறைப்பதோடு, ஸ்டைலான லுக்கையும் கொடுக்கும்.

கவுன்கள்
நடிகைகள் அனைவரும் ஒல்லியாக இருப்பதால் தான் கவுன்கள் அணிகிறார்கள் என்ற எண்ணம் இருந்தால், அது தவறானது. ஏனெனில் நடிகைகளில் வித்யா பாலன் மற்றும் ஹூமா குரெஸி போன்றோர் மிகவும் குண்டாக இருப்பவர்கள். எனவே தான் அவர்கள் கவுன், சேலை போன்றவற்றை வெளியே விழாக்களுக்கு வரும் போது அணிந்து வருகின்றனர். இத்தகைய உடைகளை அணிந்தால், அது பார்ப்பவர்களுக்கு ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்.

பேரலல் பேண்ட் மற்றும் குர்தா
இந்த பேரலல் பேண்ட்டுகள் 2000 ஆம் ஆண்டில் ட்ரெண்ட்டாக இருந்தது. எனவே இத்தகைய பேண்டுகளை அணிந்து, குர்தாவை அணிந்தால், அது ஒல்லியான மற்றும் உயரமான தோற்றத்தைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications