Latest Updates
-
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன?
நல்ல திடமான மற்றும் ஆரோக்கியமான நகங்களை வளர்க்க சில சூப்பர் டிப்ஸ்...
அழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதில் வருவது முகத்தை பராமரிப்பது என்பது தான். இது தான் பலரது மனதில் தோன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள் கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் கவனம் செலுத்துகின்றனர். அப்படியும் கூட அவர்களில் சிலர் நகங்களை பற்றி கவலை கொள்வதில்லை. அப்படியே அக்கறை உள்ளவர்களும் கூட, அதை அழகாக வைக்க முற்படுவார்களே தவிர ஆரோக்கியமாக வைக்க முற்படுவதில்லை.
சில காலங்களாகவே உங்களில் எத்தனை பேருக்கு கையில் நகங்கள் அடிக்கடி உடைகிறது? எங்கே கைய தூக்குங்க பாப்போம்! கண்டிப்பாக பலர் இந்த பிரச்சனைக்கு ஆளாகி இருப்பீர்கள். இன்னும் சிலருக்கு நகங்கள் வலுவிழந்து மெதுவாக பிளவடையும். அதனால் ஸ்வெட்டெர் போன்ற ஆடைகளை அணியும் போது, நக கன்றுகளில் சிக்குவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
நகங்கள் இப்படி வழுவிழந்து போச்சே என்று நமக்கு எரிச்சல் மற்றும் வருத்தம் ஏற்படும். அதனால் நகங்களை வலுவடையச் செய்து, ஆரோக்கியமாக வளரச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் சில வல்லுனர்களை கலந்து ஆலோசித்துள்ளோம். அதில் கீழ்கண்ட நகங்களை பராமரிப்பதற்கான 16 டிப்ஸ்களை வல்லுனர்கள் கொடுத்தார்கள். அதைப் படித்து நகங்களை எப்படி திடமாக வைப்பதென்றும், சலூனுக்கு நக பராமரிப்புக்கு செல்லும் முன் என்ன செய்ய வேண்டும் என்பதையும், நகங்களால் கடினமான ஜிப் போன்றவைகளை திறக்கலாமா என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

நகம் கடிக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள்
நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் ஸ்ட்ரெஸ் முறிவு ஏற்படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். சில பெண்கள் இதை பயத்தினால் செய்வதுண்டு. இது நகத்தின் மேல் கோடுகள் போல் தோற்றத்தை உருவாக்கி விடும்.

துடைக்கும் போது ரப்பர் கையுறை அணிந்து கொள்ளுங்கள்
வீட்டில் உள்ள பொருட்களை துடைக்கும் போது, பெண்கள் கையில் ரப்பர் கையுறை அணிந்து கொள்வது நல்லது. அதனால் நகத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதனை உடைக்க செய்யும் ஆபத்தான ரசாயனத்தில் இருந்து அதனை பாதுகாக்கலாம்.

தண்ணீரில் இருக்கும் போது கவனம் தேவை
நகத்தை தொடர்ந்து தண்ணீரில் வைத்திருந்தால், அது தண்ணீரில் ஊறி போய், வலுவிழந்து, சுலபமாக கையோடு பிய்த்துக் கொண்டு வந்துவிடும். ஏனெனில் நகங்களில் சிறு துளைகள் இருப்பதால், அது தண்ணீரை உள்வாங்கும். அதனால் குளித்து முடித்த பின்னரோ அல்லது கைகளைக் கழுவிய பின்னரோ நகங்களை சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

நகங்களை வாரம் ஒரு முறை பராமரித்தால் நீண்ட கால ஆரோக்கியம் கிட்டும்
நகங்கள் மற்றும் அதன் புறத்தோல் போன்றவற்றிற்கு மெனிக்யூர் முறையை சீரான முறையில் செய்து கொள்வது அவசியம். அதே போல் தினமும் சருமத்தின் மீது மாய்ஸ்சுரைசர் தடவினால், நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

குளிர்காலத்தில் கைகளுக்கு வெதுவெதுப்பான கையுறை அணிந்து கொள்ளுங்கள்
குளிர்காலத்தில் நகங்கள் வறட்சி அடைந்து சீர்கேட்டிற்கு உள்ளாகும். அதனால் வெளியில் செல்லும் போது, கைகளுக்கு கையுறை அணிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆபத்தான ரசாயனங்களில் இருந்து ஒதுங்கியே இருங்கள்
நச்சுத்தன்மையுள்ள நெயில் பாலிஷ்களில் ஃபார்மால்டிஹைடு, ஃபார்மால்டிஹைடு ரெசின் மற்றும் டொலுவீன் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. அதனால் அந்த நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இவ்வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால், நகங்கள் வலுவிழந்து, ஆரோக்கியமிழந்து போய்விடும்.

சன் ஸ்க்ரீன் தடவுங்கள்
எப்போதுமே பாதுகாப்பாக இருக்க முடியுமா என்றால், முடியாது என்று தான் பதில் வரும். அதனால் கைகளை புறஊதாக் கதிர்கள் அல்லது LED வெளிச்சத்தின் முன்பு கொண்டு செல்லும் முன், கைகளுக்கு சன் ஸ்க்ரீன் தடவிக் கொள்ளுங்கள். இது கைகளை மட்டுமல்லாது நகங்களையும் பாதுகாக்கும்.

வைட்டமின்கள் உட்கொள்வதை மறந்து விடாதீர்கள்
வைட்டமின்களைப் பொறுத்த வரை, அவை நகங்களுக்கு பையோடின் என்ற பொருளை அளிக்கிறது. அதே போல் நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் போன்ற பொருட்களில் பையோடின் இருந்தால், அதையும் கூட நகங்களில் நேரடியாக தடவலாம்.

மசாஜ் கொடுங்கள்
நகம் புறத்தோல்களுக்கு கீழ் தான் வளரும். அதனால் புறத்தோலை மசாஜ் செய்தால், அந்த இடத்திற்கு இரத்தத்தை கொண்டு வந்து நகங்கள் ஆரோக்கியமாக வளர உதவி புரியும். இதற்கென சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, வெறுமனே மசாஜ் செய்தால் போதிய பலனை அது அளிக்கும்.

மாய்ஸ்சுரைசிங் க்ரீம் பயன்படுத்துங்கள்
எப்போதுமே கைகளை கழுவிய பின் அதற்கு நீர்ச்சத்து அளிக்க வேண்டும். முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தாமல் இருப்பீர்களா? இல்லையல்லவா? அதே போல் தான் கைகளையும் பாதுகாத்திட வேண்டும்.

நகத்தை சுத்தம் செய்யும் கருவியை கையோடு வைத்திடுங்கள்
நகத்தை சுத்தம் செய்யும் கருவியை எப்போதுமே கையோடு வைத்திடுங்கள். அதனை வைத்து சொரசொரவென இருக்கும் நகங்களின் விளிம்பை வளுவளுப்பாக்கலாம். அதனால் பாதிப்பு ஏற்படாமலும் காக்கலாம்.

புரதம் அடங்கியுள்ள உணவை உட்கொள்ளுங்கள்
சமநிலையான உணவோடு, அளவுக்கு அதிகமான தண்ணீரையும் பருகி வந்தால், ஆரோக்கியமான நகங்களை வளர்க்கலாம். அதனால் புரதச்சத்து நிறைந்துள்ள மீன் போன்ற உணவுகளை உட்கொண்டால், நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாது
நகத்தை வைத்து டப்பாவை திறப்பது, லெட்டரை பிரிப்பது என அதை ஒரு கருவியை போல் பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்யும் போது, நகங்கள் வளைந்து உடைவதற்கு வாய்ப்பு அதிகம். நகத்தின் வெண்ணிற பகுதியை ஸ்ட்ரெஸ் பகுதி என்று சொல்லலாம். நாளடைவில் அது வலுவிழந்து உடைந்துவிடும். நம்மில் பலருக்கு நம் கையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை. அதனால் நகங்களின் மீது கூடுதல் அக்கறை செலுத்தி, அதனை பாதுகாத்திடவும்.

நெயில் பாலிஷ் போடுவதன் முக்கியத்துவம்
நெயில் பாலிஷ் போடுவதால் நகத்தை அது பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் நகத்தின் மேல் ஒரு கோட்டிங் போட மறந்து விடாதீர்கள்.

நகத்தை திடமாக்கும் பொருட்கள்
நகத்தை திடமாக்கும் பொருட்களில் கெராட்டின் புரோட்டீன் அடங்கியுள்ளது. நம் நகமும் இயற்கையிலேயே அதை தான் கொண்டுள்ளது. நகத்தை திடமாக்கும் இவ்வகை பொருட்கள் நகங்களின் மூலக்கூறுகளை ஒன்றாக்கி நகத்தை திடமாக்கும். ஆனால் இவ்வகை பொருட்கள் பயன்படுத்துவதை திடீரென நிறுத்தினால், நகங்கள் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடும்.
நகத்தை திடமாக்கும் பொருட்களை தடவிய பின், அது நன்றாக வேலை செய்ய நகத்தின் மீது ஒரு கோட்டிங் நெயில் பாலிஷையும் தடவிக் கொள்ளலாம்.

பழைய நெயில் பாலிஷை நகத்தில் இருந்து துடைத்து எடுக்கவும்
சிறிது நாட்களுக்கு பின் நெயில் பாலிஷ் அசிங்கமாக உரிந்து வரத் தொடங்கிவிடும். அதனால் ஒரு வாரம் சென்ற பின், நெயில் பாலிஷை நகத்தில் இருந்து துடைத்து எடுப்பது நல்லது.



Click it and Unblock the Notifications











