Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு!

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் தவிடானது அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் 'இ' சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன.
சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன. தவிட்டில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சரும பாதுகாப்பிற்காக அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது சரும சுருக்கத்தை நீக்குவதோடு முகப்பொலிவினை அதிகரிக்கிறது.
சீனி
அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் சீனி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு சிறந்த ஸ்கிரப்பராக பயன்படுகிறது. இது முகத்திற்கு அழகூட்டவும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் சீனி பயன்படுகிறது.
அதேபோல் சமையலில் பயன்படுத்தப்படும் சாதாரண அயோடின் உப்பு சத்து மிகுந்தது. உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். உப்பு கொண்டு பற்களை துலக்கினால் பற்கள் பலப்படும். உப்பில் உள்ள சத்து கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும். இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீரால் கால்களை கழுவினால் புத்துணர்ச்சி அளிக்கும்.
களிமண் மருத்துவம்
முல்தானி மெட்டி எனப்படும் மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது.
எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும்.இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.



Click it and Unblock the Notifications