Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
கொடி போல இடை வேண்டுமா? இதைப் படிங்க!

சிக் உடல் பெற
கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த தசைகளைச் சுற்றி குறைந்த அளவு கொழுப்பே இருப்பதால் மேக்ரோ ஏரியாக்கள் எனப்படும் தொடை மற்றும் பின்புறம் மீதே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். சிறிய தசைகள் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த காலத்தில் சிக் கென்ற உடம்பைப் பெற முடியும்.
வயிற்றுப் பயிற்சி
தட்டையான வயிற்றைப் பெற இந்தப் பயிற்சியைப் பெறவும். தரையில் மல்லாந்து படுக்கவும். பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும். கைகளை விட்டம் நோக்கி உயர்த்தும் போது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கவும். இடுப்புப் பகுதியிலிருந்து கால்களை உயர்த்தவும். கொண்டைக்கால் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். முதுகை தட்டையாக தரையில் படும்படி வைத்து கைகளை தலையை நோக்கி கொண்டு வரவும். இதே சமயத்தில் உங்கள் வலது காலை நீட்டவும். ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது காலை நீட்டவும்.
அழகான தோள்கள்
நல்ல வடிவமான தோள்கள் உங்கள் இடுப்பை சிறியதாகக் காட்ட உதவும். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். இந்த நிலையில் தலை மற்றும் மார்பை உயர்த்தவும்.
தோள் பட்டையை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு நிமிரவும். இந்த நிலையில் ஒன்று முதல் ஆறுவரை எண்ணவும். இந்த பயிற்சியை 12 தடவைகள் செய்யவும்.
முதுகுப் பயிற்சி
வலிமையான முதுகு உங்கள் தோற்றத்தை செம்மையாக்கும். உங்களை ஸ்லிம்மாக காட்ட உதவும். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பாதங்களைத் தரையில் பதித்துக் கொள்ளுங்கள். அப்படியே முன்புறமாக முதுகை (நிமிர்த்திய நிலையில்) வளைத்து முழங்கால்களின் மீது மார்பு படும் நிலைக்கு வரவும். உங்கள் கைகள் ஒவ்வொன்றிலும் 2 அல்லது 3 கிலோ எடையை பிடித்துக் கொண்டு கீழ்புறமாக தொங்க விடவும். கைகளை மெல்ல தோளுக்கு இணையாக (பக்க வாட்டில்) உயர்த்தவும். பிறகு மெல்ல கீழிறக்கவும். 10 தடவை இப்படிச் செய்யவும். இடைவெளி விட்டுவிட்டு இந்தப் பயிற்சியை 3 முறை செய்யவும்.
இடுப்பு குறைய
படுக்கையை விரித்து அதில் வலது புறம் திரும்பி படுக்கவும். வலது கையை தலைக்கு மேல் நீட்டவும், இடது கையை வயிற்றின் முன் பகுதியில் ஊன்றிபடி வைக்கவும். வலதுகாலின் மீது இடதுகால் இருக்குமாறு வைக்கவும்.
இதே நிலையில் மெதுவாக இடதுகாலை 45 டிகிரி அளவிற்கு உயர்த்தவும். இருபது எண்ணும் வரை மேலே உயர்த்தியவாறு இருக்கவும். பின்னர் மெதுவாக பொஸிசனுக்கு வரவும். இதேபோல் இடது பக்கம் திரும்பி படுத்து வலது காலை உயர்த்தவும். இதனால் தொடை, இடுப்பு பகுதிகள் ஒரு வடிவத்திற்கு வரும்.
ஜன்னலைப் பிடித்துக் கொண்டு இடுப்பைத் திருப்ப வேண்டும். கால்களுக்குக் கீழே பவுடரைப் போட்டு வட்டமாகத் திருப்பினால் இடுப்பும் சரியான முறையில் அமையும். இது நல்ல பயிற்சியாகும். தினசரி செய்து வந்தால் கொடியிடையைப் பெறலாம்.
புளிப்பு வேண்டாம்
அன்னாசிப் பழம் கொழுப்பை கரைக்கும். அன்னாசிப் பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து வேகவைத்து வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும்.
புளிப்பான பொருட்களான புளித்த தயிர், புளிக்குழம்பு போன்றவைகளை சாப்பிடக் கூடாது, அதேபோல் ஊறுகாயும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளை தவிர்த்து விடவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



Click it and Unblock the Notifications
