For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !

By Mayura Akilan
|

How to Get Red or Pink Lips Naturally
தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம்.

வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம்.

உதடுகளில் வெடிப்பு

அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

உதடுகள் மென்மையாக

வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் தரவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தரலாம். வாரம் மூன்றுநாட்களுக்கு இவ்வாறு செய்து வர உதடுகள் ரோஜா பூ நிறத்திற்கு மாறுவதோடு மென்மையாகும்.

வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில் உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும்.

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.

மென்மையான உதடுகள்

வீட்டில் உள்ள பொருட்களே உதடுகளை அழகாக்க பயன்படுகின்றன. வெண்ணெய் அல்லது நெய்யை தினசரி உதடுகளில் தடவி வர உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு பாதம் பவுடர், சிறிதளவு பாலடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும்.

பாதம் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்க்கவும். தினசரி இதனை தேய்க்க உதடுகள் மென்மையாகும்.

English summary

How to Get Red or Pink Lips Naturally | ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !

There are several simple home remedies to make lips look pinker. You should make sure to remove dirt particles, oil and dead skin cells that accumulate on the lips throughout the day. You may gently wash your lips with some cold water every night before going to bed for this purpose.
Story first published: Monday, April 9, 2012, 17:43 [IST]
Desktop Bottom Promotion