Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

கண்ட கண்ட கூலிங்கிளாஸ்களை வாங்கி அணிவதை விட தரமான கண்ணாடிகளை வாங்கி அணிவதே கண்ணிற்கு பாதுகாப்பானது என்றும் மருத்துவர்களும், அழகியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
உஷ்ணத்தில் பாதுகாப்பு
வெளியில் பயணம் செய்யும்போது 'சன் கிளாஸ்' அணிவதனால் உஷ்ணத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும். இதனால் கண்கள் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக கறுப்புக் கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள் 50 சதவீதம் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கின்றது.
சன் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது. எனவே கண்களை முற்றிலும் கவர் செய்யக்கூடிய சன் கிளாஸ் அணிவதே ஏற்றது. கண்களில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள் அதற்கேற்ற கண்ணாடிகளை அணிய வேண்டும்.
சரியான சன் கிளாஸ்
சன் கிளாஸ் லென்ஸ் நிறத்தை தேர்தெடுக்கும் போது கவனம் தேவை. அதோபோல் சன் கிளாசிற்கு நாம் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை பார்க்கவேண்டும். லென்ஸ் மீது கீறல் விழாமல் இருப்பதற்கு என கோட்டிங் பூசப்பட்டிருக்கிறதா? என கவனிக்க வேண்டும். அதேபோல் தண்ணீர் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோட்டிங் எதுவும் உள்ளதாக என கவனிக்க வேண்டும். புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கக் கூடிய கண்ணாடிதானா என்பதை கண்டறிந்து வாங்குவது நல்லது.
முகத்திற்கு ஏற்ற ப்ரேம்
முக்கியமாக சன் கிளாஸ் ப்ரேம் முக அமைப்பிற்கு ஏற்றதாக இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை போட்டுப்பார்த்து வாங்கவேண்டும். அதேபோல் லென்ஸ் வடிவம் ஓவல், சதுரம் முக்கோணம், வட்டம் என பலவடிவங்களில் உள்ளது அதில் எந்த வடிவம் நம்முகத்திற்கு ஏற்புடையதாக இருக்குமோ அதனை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
கோடை காலம் தொடங்கிவிட்டாலே கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு நேரத்தில் வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து விட்டுப் படுக்கவும். இது கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும்.



Click it and Unblock the Notifications
