Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
தக்காளியை பயன்படுத்தி எப்படி எல்லா சரும பிரச்சனைகளையும் போக்குவது? வாங்க தெரிஞ்சுக்கலாம்...
Tomatoes For Skin In Tamil: நாம் அடிக்கடி வெளியே செல்லும் போது வெயில்,தூசி, அழுக்கு மற்றும் சூரிய ஒளிக் கதிர்கள் இவற்றில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இதனாலயே நம் சருமத்தில் சீக்கிரமே சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் சரும நிறமாற்றம் போன்றவை தலைதூக்க ஆரம்பித்து விடுகிறது. எனவே உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்தையும் போக்குவதில் தக்காளி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
தக்காளியில் சரும அழகை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகிறது. இதில் வைட்டமின் சி நிறைய அளவில் காணப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் உள்ள தக்காளியை பயன்படுத்தியே உங்கள் எல்லா சரும பிரச்சனைகளையும் ஓட விட முடியும். சரி வாங்க இதை எப்படி செய்யலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தக்காளியின் சரும பயன்கள்:
* தக்காளி சரும துளைகளை இறுக்கமாக்குகிறது. இது சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கக்கூடியது.
* தக்காளியை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகப்பருக்களை குறைக்க முடியும். மேலும் பருக்களால் ஏற்படும் தழும்புகளை மறைக்கவும் உதவுகிறது.
* தக்காளியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இறந்த சரும செல்களை நீக்குகிறது.
* முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது. அதே நேரத்தில் உங்கள் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கவும் உதவுகிறது. முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயை போக்குகிறது.
1. உடனடி பொலிவைப் பெற தக்காளி ஃபேஸ் மாஸ்க்
ஒரு பப்பாளியை எடுத்து அதன் தோலை நீக்கி இரண்டு பகுதிகளாக நறுக்கி கொள்ளுங்கள். பிறகு பப்பாளி பழத்தை துண்டு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பப்பாளி துண்டுடன் அரை தேக்கரண்டி தேன் மற்றும் தக்காளியை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை 10-15 நிமிடங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் முகத்திற்கு உடனடி பொலிவைத் தரும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வாருங்கள்.
2. சருமத்தை வெண்மையாக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, சிறிதளவு தக்காளி சாறு மற்றும் தேவைக்கேற்ப பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவுங்கள். இந்த மூன்று பொருட்களும் சிறந்த க்ளீன்சராக செயல்பட்டு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை வெண்மையாக வைக்க உதவுகிறது.
3. வறண்ட சருமம் உடையவர்களுக்கான தக்காளி ஃபேஸ் மாஸ்க்
வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறுதளவு தக்காளி சாறு, அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை சருமத்தில் அப்ளை செய்து வரும் போது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து வறண்ட சருமத்தை போக்குகிறது. சருமம் வயதாகுவதை தடுக்கிறது.
4. சரும நிறமாற்றத்தை போக்க தக்காளி ஃபேஸ் மாஸ்க்
வெயிலில் போயிட்டு வந்ததும் சருமம் வெயிலினால் கருத்து போய் இருக்கும். நிறைய பேர் இந்த சரும நிறமாற்றத்தை சந்திப்பது உண்டு. எனவே சருமத்தில் உள்ள கருமையை போக்க தக்காளி பெரிய அளவில் உதவுகிறது. பாதிக்கப்பட்ட சரும பகுதிகளில் வெறும் தக்காளி துண்டை தேய்த்து வந்தாலே போதும் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.
5. முகப்பருக்களை போக்கும் தக்காளி ஃபேஸ் மாஸ்க்
தக்காளியுடன் புதினா இலைகளை சேர்த்து பயன்படுத்தும் போது விரைவாக முகப்பரு தழும்புகளை போக்க முடியும். இதற்கு புதினா இலைகள் மற்றும் தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை எளிதாக நீக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்.
6. கரும்புள்ளிகளை போக்கும் தக்காளி ஃபேஸ் மாஸ்க்
சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே 2 தேக்கரண்டி சர்க்கரை, பாதி பழுத்த தக்காளி பழம் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தையும் நீக்கி பொலிவை தர உதவுகிறது. வாரத்திற்கு 2-3 முறை இதைச் செய்து வரலாம்.
7. சருமம் மென்மையாக இருக்க தக்காளி ஃபேஸ் மாஸ்க்
கற்றாழை இலையில் உள்ள கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கற்றாழை ஜெல்லுடன் தக்காளி சாற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை 10-15 நிமிடங்கள் வட்ட வடிவில் முகத்தில் தடவி வாருங்கள். இது உங்கள் முகத்திற்கு புத்துணர்ச்சியையும் அதே நேரத்தில் மென்மையையும் வழங்குகிறது. உங்கள் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்க இந்த ஃபேஸ் பேக் உதவுகிறது.



Click it and Unblock the Notifications














