Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே! உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
Beard Growth Tips In Tamil: ஆண்களுக்கு அழகே அவர்களின் தாடி தான். அதுவும் கேஜிஎஃப் திரைப்படம் வந்த பின்னர் ஆண்கள் பலர் நடிகர் யாஷ் போன்று தாடியை வளர்க்க விரும்புகிறார்கள்.
ஆனால் நிறைய ஆண்கள் தங்களுக்கு சரியாக தாடி வளர்வதில்லை என்று வருத்தம் கொள்கின்றனர். மேலும் தாடியை வளர்க்க பல ஆண்கள் விலை அதிகமான காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் தாடியை வளர்க்க இப்படி நிறைய பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஏனெனில் தாடியின் வளர்ச்சியை தூண்ட உதவும் பல்வேறு இயற்கை பொருட்கள் நம் வீட்டிலேயே உள்ளன.
அந்த பொருட்களைக் கொண்டு தாடி வளரும் இடத்தில் மசாஜ் செய்து வந்தால், நல்ல மென்மையான மற்றும் காடு போன்று அடர்தியான தாடியைப் பெறலாம். இப்போது தாடியின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. தேங்காய் எண்ணெய் மசாஜ்
தலையில் முடியின் வளர்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெய் தாடியின் வளர்ச்சியையும் மேம்படுத்த உதவி புரியும் என்பது தெரியுமா? அதுவும் அந்த தேங்காய் எண்ணெயுடன் ரோஸ்மேரி எண்ணெயை சில துளிகள் சேர்த்து, தாடி வளரக்கூடிய பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒருவேளை ரோஸ்மேரி எண்ணெய் இல்லாவிட்டால், வெறும் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
இன்னும் சிறப்பான பலனைப் பெற, இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பஞ்சுருண்டையில் நனைத்து தாடி வளரும் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.
2. பட்டை மற்றும் எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை தாடியில் பொடுகு வருவதைக் குறைக்கும். அதேப் போல் பட்டை மயிர்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இவ்விரு பொருட்களையும் ஒன்றாக கலந்து பயன்படுத்தும் போது, அது தாடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
அதற்கு பட்டை தூளை எடுத்து, சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து, தாடி வளரும் இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
3. யூகலிப்டஸ் ஆயில் மற்றும் நல்லெண்ணெய்
தேங்காய் எண்ணெயைப் போன்றே யூகலிப்டஸ் எண்ணெயும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆனால் இது மிகவும் சக்தி வாய்ந்த எண்ணெய் என்பதால், அதை தனியே பயன்படுத்தும் போது எரிச்சலை உண்டாக்கும். ஆகவே இந்த எண்ணெயுடன் நல்லெண்ணெயை சேர்த்து கலந்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதற்கு 1/2 கப் நல்லெண்ணெயுடன், குறைந்தது 20 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, தாடி வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறு வைத்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காய் முடியின் வளர்ச்சித் தூண்டும் அற்புதமான பொருள் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட நெல்லிக்காய் எண்ணெயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், ப்ரீ ராடிக்கல்களால் முடியின் வளர்ச்சியில் உள்ள தடையை நீக்கி, முடியை நன்கு வளரத் தூண்டும்.
அதற்கு நெல்லிக்காய் எண்ணெயை தாடி வளரும் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், விரைவில் தாடி வளரும்.
5. காபித் தூள் மற்றும் ஆலிவ் ஆயில்
தாடியானது நன்கு வளர்ச்சி அடைய வேண்டுமானால், தாடி வளரும் பகுதியில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற வேண்டும். அதற்கு ஸ்க்ரப்பை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
அதுவும் காபித் தூளுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதை தாடி வளரும் பகுதியில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, தாடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
