Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த 5 பொருட்கள உங்க முகத்துல யூஸ் பண்ணா போதுமாம்... தேவதை மாதிரி நீங்க எப்பவும் அழகா ஜொலிப்பீங்களாம்!
பண்டைய காலம் முதல் ஆயுர்வேதம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் உங்கள் சருமத்தை பிரகாசிக்க வைக்க உதவும் பல வழிகள் உள்ளன. எப்போதும் நீங்கள் பளபளப்பாக ஜொலிக்க இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
ஆயுர்வேதம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி சரும ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அவை முழுக்க இயற்கையான பொருட்களை சார்ந்ததாக இருக்கின்றன. நீங்கள் ஆயுர்வேதத்தின் தீவிர ரசிகராக இருந்தால், வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆயுர்வேத சரும ஹேக்குகளை முயற்சி செய்யலாம்.

இக்கட்டுரையில் உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாக்கவும் ஒளிர செய்ய உதவும் ஆயுர்வேத சரும ஹேக்குகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பால்
உங்கள் சரும பராமரிப்புக்கு பால் ஒரு சிறந்த பொருள். சருமத்துளைகள் அழுக்கு மற்றும் எண்ணெயால் அடைக்கப்படாமல் இருக்க, உங்கள் முகத்தை பாலில் கழுவுங்கள். பாலில் உங்கள் முகத்தை தினமும் கழுவி வந்தால், உங்கள் முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் மென்மையாக இருக்கும்.
மூன்று பொருட்கள்
எலுமிச்சை சாறு, கோதுமை மாவு, மஞ்சள் தூள் ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். எலுமிச்சை சாறுக்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தலாம். இந்த பேஸ்டை முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி நிறத்தை நீக்குகிறது.
மஞ்சள் உங்கள் முகத்தை பிரகாசமாக்குகிறது. இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து ஒன்றாக பயன்படுத்தும்போது, அது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது.
முல்தானி மிட்டி
மூன்று ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், ஒரு தேக்கரண்டி முல்தானி மிட்டியை சேர்த்து கலக்க வேண்டும். அந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். பேக் முழுவதுமாக காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இது உங்களுக்கு எண்ணெய் இல்லாத, மென்மையான மற்றும் தெளிவான சருமத்தை வழங்க உதவும்.
சந்தனப் பொடி
அரை தேக்கரண்டி சந்தனப் பொடியில் சில துளிகள் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்தை எதிர்த்துப் போராடும் போது சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளை குறைக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் சருமத்தை பளபளப்பாக ஜொலிக்க வைக்கிறது.
தேன்
வறண்ட சருமம் மட்டுமின்றி எண்ணெய் சருமத்திற்கும் ஈரப்பதம் தேவைப்படுகிறது. தேன் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். தேனை உங்கள் முகம் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.தேன் உங்கள் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
இது இயற்கையான ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தது. இது உங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.



Click it and Unblock the Notifications
