Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பொன்னியின் செல்வனின் பூங்குழலியின் ஈர்க்கும் அழகிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
Aishwarya Lekshmi Beauty Tips In Tamil: பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அழகை கண்டு வியக்காதவர்களே இல்லை எனலாம். படகோட்டும் பெண்ணாக திரைப்படத்தில் வரும் அவர், கடலில் குதித்து நீந்தும் காட்சியில் எல்லாருடைய மனதிலும் நீந்திக்கொண்டிருக்கும் அழகு தேவதையாக தோற்றமளிப்பார்.
இயற்கையாகவே பளபளப்பான சருமத்தை பெற்றிருக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி, தன் அசாதாரண நடிப்பாலும், அழகாலும் ஏராளாமான ரசிகர்கள் படையை கொண்டுள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் இவர், பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறி இருக்கிறார்.

தன் இயல்பான புன்னகையால் அனைவரையும் ஈர்க்கும் இவர், தனக்கு கொடுக்கப்படும் பாத்திரத்தில் கட்சிதமாக நடித்து, தன்னை பொருத்திக்கொள்வார். இக்கட்டுரையில் பளபளக்கும் மேனியை கொண்டிருக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மியின் தோல் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்குப் பின்னால் உள்ள இரகசியங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
தோல் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம்
ஐஸ்வர்யா லக்ஷ்மி தன் சரும பராமரிப்பு ரகசியங்கள் பற்றி இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். அதில் "நான் மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு வாரமும் சூடான எண்ணெய் மசாஜ் செய்கிறேன். நான் என் தோல் மருத்துவரின் பரிந்துரைகளை சரியாகப் பின்பற்றுகிறேன். அதுமட்டுமின்றி, சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறேன். படுக்கைக்குச் செல்லும் போது, முகத்தைக் கழுவி, நைட் க்ரீம் தடவுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
ஃபேஸ் வாஷ் & சன்ஸ்கிரீன்
ஐஸ்வர்யா லக்ஷ்மியை பொறுத்தவரை, அவரது காலை தோல் பராமரிப்பு வழக்கமாக ஃபேஸ்வாஷ் மற்றும் சன்ஸ்கிரீன் மூலம் நாளைத் தொடங்குகிறார். தோல் பராமரிப்பு முறையின் முதல் படியாக, நீங்கள் முகத்தை சுத்தப்படுத்தி ஃபேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும். அழுக்கு, இறந்த சரும செல்கள் மற்றும் பிற தேவையற்ற மேற்பரப்பு மாசுகளை அகற்ற முக சுத்தப்படுத்தி உதவுகிறது.
சன்ஸ்கிரீன்களை தவறாமல் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எந்த வயதிலும் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சிறந்த மற்றும் எளிதான வழிகளில் ஒன்று சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது. சன்ஸ்கிரீனைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, சூரிய ஒளி, தோல் புற்றுநோய், மற்றும் முன்கூட்டிய வயதாவதைத் தடுக்கிறது.
சூடான எண்ணெய் மசாஜ்
ஹாட் ஆயில் மசாஜ் என்பது பலரின் விருப்பமான தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடல் மற்றும் தலைமுடிக்கு சூடான எண்ணெய் மசாஜ் செய்வது உங்களுக்கு பல அதிசய நன்மைகளை வழங்கும். இதையே ஐஸ்வர்யா லக்ஷ்மியும் பயன்படுத்துகிறார்.
உலர்ந்த மற்றும் சேதமடைந்த கூந்தலைப் புதுப்பிக்கும் போது, முடிக்கான சூடான எண்ணெய் சிகிச்சையே தீர்வாகத் தோன்றலாம். இந்த சிகிச்சைகள் சேதமடைந்த முடியை சரிசெய்து, உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக பாதுகாக்கின்றன. அவை உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்கி ஊட்டமளித்து உடைவதைத் தடுக்கின்றன.
மசாஜ் மன அழுத்த நிவாரணம் மற்றும் ஆரோக்கியமான சருமத்துடன், உடலுக்குள் ஆரோக்கியத்தையும் சமநிலையையும் மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. உடல் முழுவதும் வெதுவெதுப்பான எண்ணெயைத் தடவி அதன் ஒவ்வொரு பகுதியையும் மசாஜ் செய்வது சிறந்தது. இந்த மசாஜ் தளர்வு, இரத்த ஓட்டம் மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்வாஷ் & நைட் கிரீம்
ஐஸ்வர்யா தனது நாளைத் தொடங்குவதைப் போலவே, அதே முறைகளை பின்பற்றி தனது நாளையும் முடிக்கிறாள். இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தைக் கழுவி, நைட் க்ரீமைப் பயன்படுத்துகிறாள். ஒரே இரவில் நைட் கிரீம் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமத்தில் ஏதேனும் சிவத்தல் அல்லது எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
சுருக்கங்கள் மோசமானவை அல்ல
வயதாகும்போது நம் சருமத்தில் கண்டிப்பாக சுருக்கங்கள் வந்துவிடும். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஐஸ்வர்யா. மிகவும் நம்பத்தகாத செயற்கை அழகு சாதனப் பொருட்களை நோக்கி அதிகளவில் சாய்ந்து கொண்டிருக்கும் உலகில், ஐஸ்வர்யா லெக்ஷ்மி போன்ற நடிகைகள் இயற்கை சரும பராமரிப்புக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
தோல் மருத்துவரை அணுகவும்
"எனக்கு பருக்கள் அவ்வளவு எளிதில் வராது. சில சமயங்களில் மட்டுமே என் நெற்றியில் சிறிய பருக்கள் தோன்றும். நாம் சாப்பிடும் உணவைக் கட்டுப்படுத்தினால், அதிலிருந்து விடுபடலாம்" என்று இன்ஸ்டாகிராம் லைவ்வில் ஐஸ்வர்யா ஒருமுறை கூறியிருந்தார்.
முகப்பரு என்பது பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை. அதை உணவு கட்டுப்பாட்டின் மூலம் மாற்ற முயற்சிக்கலாம். இருப்பினும், பெரிய தழும்புகள் போன்று சருமத்தில் தோன்றினால், உடனே மருத்துவரை பார்த்து உண்மையான பிரச்சனையைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிறார்.



Click it and Unblock the Notifications


