Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
இந்த 4 ராசிக்காரங்க படிக்கலனாலும் எப்படியும் கோடீஸ்வரர் ஆகிருவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வாழ்க்கையில் முன்னேற படிப்பு மிக மிக அவசியமானதாகும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் படிப்பு வருவதில்லை. சிலர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள், மதிப்பெண்கள் பெற போராடுகிறார்கள். அதற்காக அவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல.
வாழ்க்கையில் வெற்றிபெற பல வழிகள் இருக்கிறது, மேலும் வெற்றி என்பது நபருக்கு நபர் மாறுபடும். சிலர் தங்கள் தனிப்பட்ட திறமைகளால் வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடைகிறார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் கல்வியில் சிறப்பாக இல்லாவிட்டாலும், தங்களின் தனிப்பட்ட பலம் மற்றும் திறமைகளால் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் படிப்பில் சிறந்து விளங்கவில்லை என்றாலும் வாழ்வில் வெற்றியாளர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல், லட்சியம் மற்றும் உந்துதல் நிறைந்தவர்கள், அவர்கள் தலைமைத்துவம் கொண்டவர்களாக இருந்தாலும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்பவர்களாக இருப்பார்கள். பாரம்பரிய கல்வி முறை, அவற்றின் கட்டமைக்கப்பட்ட பாடங்கள் மற்றும் நீண்ட விரிவுரைகள் அவர்களுக்கு வெறுப்பாக உணரலாம், இது அவர்களுக்கு கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட திறமையால் கல்வியை ஈடுசெய்கிறார்கள். ஒரு இலக்கை அவர்கள் நிர்ணயித்து விட்டால், அவர்களை எதுவும் தடுக்க முடியாது. பல மேஷ ராசிக்காரர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று சிந்திக்கவும், சவால்களை சந்திக்கவும் செய்கிறார்கள். அவர்கள் தொழில் கொடிகட்டி பறப்பதன் மூலம் வாழ்வில் வெற்றியை அடைகிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வெற்றிக்கான பாதையை தங்கள் சொந்த வழியில் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இது அவர்களுக்கு படிப்பு மீது வெறுப்பை உண்டாக்கும். மனப்பாடம் அல்லது கோட்பாடு சார்ந்த பாடங்களை விட நேரடி கற்றல் மற்றும் நடைமுறை அனுபவங்களை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கற்பிக்கப்படும் விஷயங்களில் உடனடி பலனை வழங்கவில்லை என்றால், அவர்கள் அதில் ஈடுபாடு செலுத்த சிரமப்படுவார்கள்.
அத்தேசமயம் ரிஷப ராசிக்காரர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தைக் கண்டறிந்ததும் நம்பமுடியாத அளவிற்கு உறுதியுடன் இருப்பார்கள். அவர்களின் வலுவான பணி நெறிமுறை மற்றும் விடாமுயற்சி நீண்ட கால வெற்றியை உருவாக்க உதவுகிறது. அவர்கள் தங்கள் பாதையைக் கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கலாம், ஆனால் அவர்கள் ஒருமுறை அதை கண்டறிந்து விட்டால், அவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசம், ஆர்வம் மற்றும் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கட்டுப்பாடான மற்றும் பாரம்பரிய பள்ளி சூழல் அவர்களுக்கு எப்போதும் ஒத்துப்போகாது. அவர்கள் கற்றலை விரும்புகிறார்கள், ஆனால் அது அவர்களின் சொந்த விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். வகுப்பறையில் அமர்ந்து, கடுமையான அட்டவணைகளைப் பின்பற்றி, மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கலாம்.
இதனால் தனுசு ராசிக்காரர்கள் பெரும்பாலும் பாரம்பரிய கல்வியில் கவனம் செலுத்த மிகவும் சிரமப்படுகிறார்கள். இருப்பினும், அவர்களின் இயல்பான ஆர்வமும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மீதான விருப்பமும் அவர்களை வேறு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. பல தனுசு ராசிக்காரர்கள் பயணம், படைப்பாற்றல் அல்லது சில்லறை வணிகம் உள்ளடக்கிய தொழில்களில் சிறந்து விளங்குகிறார்கள். பாடப்புத்தகங்களை விட அனுபவத்தின் மூலம் அவர்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்கிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்போதும் கனவுலகில் வாழ்பவர்கள், அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த எண்ணங்களிலும், யோசனைகளிலும் மூழ்கிவிடுவார்கள். இது அவர்களை நம்பமுடியாத அளவிற்கு கற்பனை செய்ய வைக்கும் அதேசமயம், கடினமான கல்வி அமைப்புகளில் கவனம் செலுத்துவதை கடினமாக்குகிறது. வகுப்பில் கவனம் செலுத்துவதிலோ அல்லது பாடங்கள் அவர்களுக்கு சுவாரஸ்யமாக இல்லையென்றாலோ, அவர்கள் படிக்க மிகவும் சிரமப்படலாம்.
வழக்கமான பள்ளி அமைப்புகளில் சிறந்து விளங்குவதற்குப் பதிலாக, மீன ராசிக்காரர்கள் கலை, இசை, எழுத்து அல்லது பிற படைப்பு வழிகள் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வாழ்வில் உயரத்தை அடைகிறார்கள். மீன ராசிக்காரர்களுக்கு, வெற்றி என்பது விதிகளைப் பின்பற்றுவது பற்றியது அல்ல, அது அவர்களின் கனவுகளை வெற்றியாக மாற்ற அனுமதிக்கும் பாதையைக் கண்டுபிடிப்பது பற்றியது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
