Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த 4 ராசிக்காரங்கள யாருக்குமே பிடிக்காதாம்... அதுக்கு காரணம் அவர்களின் இந்த குணம்தான்...!
உலகில் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரும் ஆசைப்படும் விஷயமாகும். ஆனால் உண்மையில் யாராலும் அப்படி இருக்க முடியாது. சிலர் தங்களின் நற்குணங்களால் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள். ஆனால் சிலர் விதிவிலக்காக யாருக்குமே பிடிக்காதவர்களாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை எரிச்சலூட்டுபவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் சுயநலம், கிண்டல் மற்றும் பிடிவாதமாக இருப்பது போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர், இது அவர்களை சுற்றியுள்ளவர்களை வெறுக்கத் தூண்டுகிறது. இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களை வெறுக்க வைக்கும் பழக்கங்கள் இயல்பாகவே உள்ளன. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அனைவரையும் எரிச்சலூட்டுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் எதிர்பாராத விதமாக நடந்து கொள்வது, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எரிச்சலூட்டும் விதமாக இருக்கலாம். அவர்களின் இரட்டை ஆளுமையால் அவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும், இது மற்றவர்களை குழப்பமடையச் செய்யலாம் மற்றும் எரிச்சலுடனும் உணர வைக்கும். மிதுன ராசிக்காரர்களின் அவசரமான தேர்வுகள் மற்றும் கோபத்தால் அவர்கள் சிறிய பிரச்சினையை பெரிதாக மாற்றுவார்கள், இதன் விளைவாக வாக்குவாதங்கள் மற்றும் தவறான தொடர்புகள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் அளவில்லாத ஆற்றலால் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களின் வலுவான தன்னம்பிகைக் காரணமாக அவர்கள் மற்றவர்களுக்கு திமிர்பிடித்தவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் தோன்றலாம். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தையும், பாராட்டுகளையும் எதிர்பார்ப்பார்கள. அதனால் அவர்கள் எப்போதும் தங்களின் சாதனைகளைப் பற்றி தற்பெருமை பேசுவார்கள். இது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். அவர்களின் ஆணவம் அவர்களின் மிகப்பெரிய எதிரியாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துபவர்களாவும், அக்கறையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் அதிகப்படியான உணர்திறன் காரணமாக அனைத்து விஷயங்களையும் பர்சனலாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் பிடிக்காதவர்கள் மீது நீண்ட காலமாக வெறுப்பைக் கொண்டுள்ளனர். அதிகப்படியான பற்றுதலுக்கான கடக ராசிக்காரர்களின் போக்கு அவர்களை பொஸசிவனவர்களாக மாற்றும். அவர்களின் உணர்ச்சி கொந்தளிப்பால் உருவாகும் நச்சு சூழல் காரணமாக அனைவரும் அவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமானவர்களாகவும், தீவிரமானவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் மற்றவர்களை தங்கள் இயல்புக்கு ஏற்ப ஆட்டிவைக்கும் திறமை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள், இது மற்றவர்கள் அவர்களை நம்புவதை கடினமாக்குகிறது. அவர்களின் புத்திக்கூர்மை அவர்களை கையாள்வதில் திறமையானவர்களாக மாற்றக்கூடும். விருச்சிக ராசிக்காரர்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள், இது அனைவரையும் எரிச்சலடைய வைக்கும். அவர்களின் பதற்றமான ஆளுமை அணைவருக்கும் அசௌகரியத்தை உருவாக்கி, மோதல்கள் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
