Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த வயது வரை கஷ்டப்படுவீங்க-ன்னு சொல்றோம்...
Zodiac Signs & Challenges: ஜோதிடமானது நமது வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒருவர் பிறக்கும் போது கிரகங்கள் இருக்கும் நிலைகளைக் கொண்டு அந்நபரின் ராசி கணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு அதிபதியைக் கொண்டுள்ளன. இந்த ஒவ்வொரு அதிபதிகளைப் பொறுத்து தான், அந்நபரின் குணங்கள், பலம், பலவீனம், வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது மற்றும் வேறு பல விஷயங்களும் கணிக்கப்படுகின்றன.

நிச்சயம் நிறைய பேரின் மனதில் ஒரு கேள்வி இருக்கும். அது எப்ப தான் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, சந்தோஷம் பெருகும் என்பது தான். கீழே ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த வயது வரை வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசியை சேர்ந்தவர்கள் தங்களின் 45 வயது வரை வாழ்வில் கஷ்டங்களை சந்திப்பார்கள். ஆனால் 45 வயதிற்கு மேல் அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். பணப் பிரச்சனைகள் தீரும். செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசிக்காரர்கள் 48 வயது வரை வாழ்க்கையில் பலவிதமான சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். ஆனால் 48 வயதிற்கு மேல் பிரச்சனை இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களின் 43 வயது வரை வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திப்பார்கள். 43 வயதிற்கு மேல் தொழிலில் முன்னேற்றம், செல்வத்தில் மிகுதி போன்றவற்றை காண்பார்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியை சேர்ந்தவர்கள் தங்களின் 35 வயது வரை வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திப்பார்கள். 35 வயதிற்கு மேல் இவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் 38 வயது வரை அனைத்துவிதமான கஷ்டங்களையும் சந்திப்பார்கள். ஆனால் 38 வயதிற்கு மேல் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, புது வீடு, கார் என செட்டில் ஆகிவிடுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் 42 வயது வரை தங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்திப்பார்கள். அதற்கு பின் அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருக்கும். மேலும் 42 வயதிற்கு மேல் வாழ்க்கையில் பணப்பிரச்சனையே வராது.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் 51 வயது வரை போராட்டம் நிறைந்த கஷ்டமான வாழ்க்கையையே வாழ்வார்கள். 51 வயதிற்கு மேல் தான் இவர்கள் வாழ்க்கையில் சந்தோஷ காற்று வீசும் மற்றும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசிக்காரர்கள் 37 வயது வரை வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஆனால் அதற்கு பின் அவர்கள் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசிக்காரர்கள் 32 வயது வரை வாழ்க்கையில் சிரமங்களை சந்திப்பார்கள். ஆனால் 32 வயதிற்கு பின் இவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் உயரத்தை அடைவார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசியைச் சேர்ந்தவர்கள் 40 வயது வரை கஷ்டத்தை மட்டுமே சந்திப்பார்கள். ஆனால் 40 வயதிற்கு மேல் இவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அந்த அளவில் குறுகிய காலத்தில் எட்ட முடியாத உயரத்தை அடைவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் தான். இந்த கும்ப ராசிக்காரர்கள் தங்களின் 55 வயது வரை கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பார்கள். 55 வயதிற்கு பின் தான் இவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களின் 40 வயது வரை கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஆனால் அதற்கு பின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் நல்ல உயர்வையும் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications