Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
இந்த 4 ராசி பெண்கள் மகாராணி போல வாழும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ராஜவாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் அந்த ஆசை அனைவருக்கும் நிறைவேறுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். உண்மையில் ஒருவர் ராஜவாழ்க்கை வாழ வேண்டுமென்றால் அவர்களிடம் கடின உழைப்பு, முயற்சி ஆகியவற்றுடன் அதிர்ஷ்டத்தின் உதவியும் அவசியம் வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிகளில் பிறந்த பெண்கள் ராணி போல வாழும் அதிர்ஷ்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். சில ராசிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட எளிதில் வெற்றி பெற்று புகழின் உச்சத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்பப்படுகிறது. உலகமே அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருப்பது போல் அவர்கள் தங்கள் ஆசைகளை எளிதாக அடைகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் ராணியாக வாழ்வதற்கு பிறந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்களின் சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். உலகத்தையே தங்கள் காலடியின் கீழ் கொண்டு வருவதற்காக அவர்கள் காத்திருக்க மாட்டார்கள், அதை அவர்கள் மிகவும் எளிதாகச் செய்யக் கூடியவர்கள். ரிஷப ராசி பெண்கள் தங்கள் மன உறுதியையும், ஆறுதலையும் மதிக்கிறார்கள், பெரும்பாலும் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக மாறி தங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறுகிறார்கள். அவர்கள் தொழில் வாழ்க்கையில் மட்டுமல்ல காதல் வாழ்க்கையிலும் ராணி போல வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்கள் சகிப்புத்தன்மையின் மிகப்பெரிய ராணிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள், ஆனால் மிகவும் உறுதியானவர்களாக இருக்கலாம். அவர்கள் தங்கள் இலக்குகளை இடைவிடாமல் பின்தொடர்கிறார்கள், ஒருபோதும் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். மகர ராசி பெண்கள் பெரும்பாலும் தங்கள் விடாமுயற்சியாலும், ஒழுக்கத்தாலும் அனைவரையும் கவர்வார்கள், அதே நேரத்தில் ஆண்களின் இதயத்தையும் எளிதில் கவரும் திறனைக் கொண்டுள்ளனர்.
மேஷம்
மேஷ ராசி பெண்கள் தைரியம், தீர்க்கமான தன்மை மற்றும் ஆற்றலுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் புதிய சவால்களையும், அற்புதமான சாகசங்களையும் அச்சமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். இது பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் அவர்கள் எந்த பிரச்சனையையும் எளிதாகக் கையாள்வது மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தங்களின் நேர்மறை ஆற்றலைப் பரப்புகிறார்கள். அதனால்தான் மேஷ ராசிப் பெண்கள் பெரும்பாலும் உண்மையான ராணிகளாக வாழ்கிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் பல நேர்மறையான குணங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவர முடியும், அதே நேரத்தில் தங்கள் அழகால் மக்களை வசீகரிக்க முடியும். மிதுன ராசி பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே வெற்றிகரமாக சமநிலையைக் கடைபிடித்து, நல்லிணக்கத்தைக் கண்டறியத் தெரிந்த அவர்கள் வாழ்க்கையின் உண்மையான ராணிகள் என்ற பட்டத்தைப் பெறுகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












