Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் உலகின் சிறந்த மனைவிகளாக இருப்பார்களாம்... உங்க மனைவி நட்சத்திரம் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசியைப் போலவே ஒவ்வொரு நட்சத்திரமும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. இதில் சில நட்சத்திரங்கள் சக்திவாய்ந்த நட்சத்திரங்களாகவும், சில நட்சத்திரங்கள் துரதிர்ஷ்டமான நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றன.
27 நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் ராட்சச என்று அழைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும், சிறந்த மனைவியாகவும் இருப்பார்கள்.

அந்த நட்சத்திரங்கள் அவிட்டம், விசாகம், திருவோணம், சதயம், சித்திரை, மகம், ஆயில்யம் மற்றும் கார்த்திகை ஆகியவையாகும். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நட்சத்திர பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?
இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று நன்றாகத் தெரியும். எனவே இவர்களை திருமணம் செய்பவர்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் அனைத்து சூழ்நிலையிலும் தங்கள் கணவருக்கு துணைநிற்பார்கள்.
அவர்கள் பெரும்பாலும் தங்கள் கணவரின் குடும்பத்தினரிடமிருந்து போதுமான அங்கீகாரத்தைப் பெறுவதில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்கள் தங்கள் திறமையாலும், குணத்தாலும் சமூகத்தில் முன்னணிக்கு உயர்ந்து, அவர்களை நிராகரித்தவர்களால் அங்கீகரிக்கப்படுவார்கள். இவர்களின் கணவர் இவர்களுடன் இணைந்து செயல்பட்டால், பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
இந்த நட்சத்திர பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். உலகில் எங்கு சென்றாலும் தங்கள் வீட்டைப் பற்றியே நினைத்து, குடும்பத்திற்காகவே வாழ்பவர்கள். வாழ்வின் இறுதிக் காலத்தை பார்க்கும் போது, அவர்கள் தங்கள் குடும்பத்திற்காகவே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் தீவிர கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு தேடிச்சென்று உதவும் கொண்டவர்களாக இருப்பார்கள். கணவரின் சிறு அலட்சியத்தைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
குழந்தைகளை நேசிப்பார்கள்
இவர்கள் கணவரை மிகவும் நேசிப்பார்கள், அதற்காக இவர்கள் தங்கள் கணவர் தங்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்களின் எண்ணம் எப்போதும் குழந்தைகள் சார்ந்ததாகவே இருக்கும். இந்த நட்சத்திரப் பெண்கள் தாங்கள் தரும் அன்பு திரும்பக் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இவர்களிடம் இருக்கும்குறை என்னவென்றால் இவர்கள் மிகவும் பொஸசிவாக இருப்பார்கள். இதனால் அவர்கள் உறவுகளில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படும்.
வாழ்க்கை சவால்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தாலும், அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. இது வேலை, நிதி அல்லது ஆரோக்கிய பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் அவற்றை எளிதில் கடந்து வருவார்கள். ஒருபோதும் தங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இக்கட்டான சமயங்களில் கணவருக்கு துணை நிற்பார்கள். இவர்கள் ராட்சச நட்சத்திரங்களை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களிடம் ராட்சச குணங்கள் இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












