Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இந்த 3 மாதங்களில் பிறந்த பெண்கள் ரொம்ப ஆபத்தான மனைவிகளாக இருப்பார்களாம்... இவங்க கணவர்கள் ரொம்ப பாவம்...!
'அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே' என்பதுதான் அனைத்து ஆண்களின் ஆசையும், கனவும். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு இதற்கு முற்றிலும் எதிர்மறையான வாழ்க்கைத்துணை அமைவதுதான் விதியின் விளையாட்டு. பொதுவாகவே மனைவி பற்றிய ஆண்களுக்கு நிலவும் குழப்பம் என்னவெனில் காதலிக்கும் போது இருக்கும் கனிவும், அன்பும் திருமணத்திற்கு பின் எங்கு காணாமல் போகிறது என்பதுதான்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில மாதங்களில் பிறந்த பெண்கள் கையாளுவதற்கு மிகவும் கடினமான மனைவிகளாக இருப்பார்கள். அவர்களின் வலுவான ஆளுமை, சுதந்திரத்திற்கான ஆசை மற்றும் சில சமயங்களில் மனக்கிளர்ச்சியான அணுகுமுறை ஆகியவற்றால் அவர்களின் கணவரை படாதபாடு படுத்திவிடுவார்கள். அவர்கள் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையானவர்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்கள் தலைவர்களாக இருக்க விரும்புகிறார்கள், எப்போதும் தங்களின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள், குறிப்பாக தங்கள் துணை தங்கள் சுதந்திரம் அல்லது சுதந்திரத்தை மட்டுப்படுத்த முயற்சிப்பதாக உணர்ந்தால் அவர்கள் எரிமலையாக வெடிப்பார்கள்.
அவர்களின் வெளிப்படையானத் தன்மை ரடியான தன்மை மோதல்களை ஏற்படுத்தும். ஒருவேளை அவர்களின் கணவரும் அதே ஆளுமை கொண்டவராக இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை அவ்வள்வுதான். அவர்களுக்கு பெரும்பாலும் ஒரு உறவில் நிலையாக இருக்க காரணங்களும், சுவாரஸ்யமும் தேவைப்படும்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியாதவர்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள முடியும் மற்றும் அவர்களின் விருப்பங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் ஆர்வத்திற்கான வலுவான ஆசை இருக்கும்.
அவர்கள் எப்போதும் புதுமையை விரும்புகிறார்கள், அவர்களின் உறவில் போதுமான சுவாரஸ்யமும், மகிழ்ச்சியும் இல்லாவிட்டால் சில சமயங்களில் நீண்ட உறவில் சலிப்படையக்கூடும். அவர்களின் கணவர் அவர்களுடைய அறிவுசார் மாற்றங்களையோ அல்லது மற்றவர்களுடன் பழகுவதற்கான விருப்பத்தையோ அவர்களால் ஏற்க முடியாவிட்டால், அவர்கள் தங்கள் கணவர்களை படாதபாடு படுத்துவார்கள் அல்லது உறவிலிருந்து வெளியேறுவார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் தீவிரம், வலுவான ஆர்வம் மற்றும் ஆழ்ந்த உணர்ச்சி இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் கணவரிடமிருந்து அதிக அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் கணவர் அவற்றை நிறைவேற்றாவிட்டால் அவர்களை நிலை கடினம்தான்.
அவர்களின் கணவர்கள் அவர்களுடைய தீவிர உணர்வுகளையும், சில சமயங்களில் அவர்களின் அதிகாரத்தையும் சமாளிக்கத் தயாராக இல்லாவிட்டால் அது உறவில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர் மற்றும் எளிதில்பொறாமைக்கு ஆளாக நேரிடும், எனவே அவர்களின் கணவர்கள் அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்ய முடியாது. அவர்களின் எதிர்வினைகள் எப்போதும் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












