Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் அவர்களின் கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக மாறுவார்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசி போலவே அவர்களின் பிறந்த நட்சத்திரமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ராசிகளைப் போலவே ஒவ்வொரு நட்சத்திரமும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதன்படி சில நட்சத்திரங்கள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் அவர்களின் கணவருக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வருவார்கள்.
இந்த நட்சத்திர பெண்கள் அவர்கள் கணவரின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள். அவர்கள் நுழையும் வீட்டிற்கு அவர்கள் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள். அத்தகைய அதிர்ஷ்டமான நட்சத்திர பெண்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிருத்திகை
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பொதுவாக அன்பான இயல்புடையவர்கள். இந்த அமைதியான நட்சத்திரங்கள் பொதுவாக திருமணத்திற்குப் பிறகு அவர்கள் நுழையும் வீட்டின் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள். அவர்களின் வருகையால் அவர்கள் கணவர் வீட்டில் இருந்த துன்பங்கள் நீங்கும். அவர்கள் நல்ல மனைவியாக குடும்பத்தை வழிநடத்துவார்கள்.
அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு கணவருக்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் ஒழுக்கமும், புத்திக்கூர்மையும் குடும்பத்தின் நிதிநிலையை உயர்த்தும்.
மிருகசீரிஷம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மனதளவில் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். தங்கள் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள். அவர்கள் எப்போதும் புத்திக்கூர்மையுடன் இருக்கிறார்கள். இந்த நட்ச்சத்திரத்தில் பிறந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் குடியேறும் வீட்டை அன்பாலும், மகிழ்ச்சியாலும் நிரப்புவார்கள். இந்த நட்சத்திர பெண்களால் அவர்கள் கணவரின் பொருளாதார நிலை உயரும்.
ஆயில்யம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தாங்கள் நுழையும் வீட்டிற்கு அனைத்து செல்வங்களையும் வழங்குவார்கள். இந்த நட்சத்திர பெண்களின் புத்திக்கூர்மையாலும், ஒத்துழைப்பாலும் கணவரின் குடும்பத்தினர் நிறைய நிதி ஆதாயங்களை அடைவார்கள். கணவரின் குடும்பத்திற்கு பணம் மற்றும் தங்கத்தை ஈர்ப்பதற்கு நட்சத்திரங்கள் காரணமாக இருப்பார்கள். அவர்களின் நல்ல குணங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வர உதவுகிறது.
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருக்கு புதிய வீடு வாங்குவது முதல் வெளிநாட்டு பயணம் வரை பல அதிர்ஷ்டங்களை தங்கள் கணவருக்கு கொடுக்கக் கூடியவர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உணர்ச்சிகரமான நட்சத்திரங்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் தங்கள் உடனிருப்பவர்களின் வளர்ச்சியை அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திர பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் விரும்பிய அனைத்தையும் பெறலாம்.
உத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தாங்கள் நினைத்ததைச் செய்பவர்களாக இருப்பார்கள். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அவர்கள் நுழையும் வீட்டில் செழிப்பைக் கொண்டு வருவார்கள். இந்த நட்சத்திரங்கள் இதுவரை செய்யாத பல விஷயங்களைச் செய்யும் திறன் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் கணவரின் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிரப்புவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

