Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
இந்த 4 ராசிக்காரங்க வயசானாலும் சிங்கம் மாதிரி கெத்தா ஆரோக்கியமா இருப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இன்றைய அவசரமான உலகில் ஆரோக்கியம் என்பது மிகவும் அரிதான செல்வமாகிவிட்டது. மாறிவரும் வாழக்கை முறையும், உணவுமுறையும் மக்களின் சராசரி ஆயுள் காலத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வயது அதிகரிக்கும் போது ஆரோக்கியத்தை கடைபிடிப்பது என்பது மிகவம் கடினமானதாக மாறலாம், ஆனால் சிலருக்கு எளிதில் வரக்கூடியதாக இருக்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் ஒழுக்கம், ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தின் மீதான காதல் போன்ற இயற்கையான பண்புகளைக் கொண்டுள்ளனர். இந்த குணங்கள் எவ்வளவு வயதானாலும் ஆரோக்கியத்தை பராமரிக்கும் விருப்பத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மூலமாகவோ அல்லது நேர்மறையான மனநிலை மூலமாகவோ இவர்கள் எப்போதும் தங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருப்பார்கள். இவர்களின் ஆரோக்கியம் அதிர்ஷ்டத்தால் கிடைப்பதல்ல, அவர்களின் முயற்சியால் கிடைப்பது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வயதானாலும் ஆரோக்கியத்தை பராமரிப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷம் அவர்களின் அதிக ஆற்றலுக்கும், போட்டி மனப்பான்மைக்கும் பெயர் பெற்றது. புதிய விஷயங்களை ஆராய்வதற்கும், தொடர்ந்து முன்னேறுவதற்கும் அவர்களின் உள்ளார்ந்த உந்துதல் பெரும்பாலும் வயதாகும்போதும் வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபட வழிவகுக்கிறது.
ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது வெறுமனே நடப்பது என எதுவாக இருந்தாலும், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தில் உடல் செயல்பாடுகளை இணைத்துக்கொள்வதை உறுதிசெய்து, அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்கிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் புத்திக்கூர்மை மற்றும் ஒழுக்கமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் கவனமும், ஒழுக்கமும் உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்த அவர்களின் அணுகுமுறையிலும் நீடிக்கின்றன. கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் வயது வித்தியாசமின்றி, சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி முறையை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள்.
அனைத்து விஷயங்களிலும் இருக்கும் அவர்களின் கவனம், காலப்போக்கில் அவர்களின் உடலின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் பழக்கவழக்கங்களை சரிசெய்யவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதில் கன்னி ராசிக்காரர்களின் விடாமுயற்சி, வயதாகும்போது இயற்கையாகவே ஆரோக்கியத்தை பராமரிக்க வழிவகுக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தில் மிகவும் மனஉறுதி கொண்டவர்கள், அவர்கள் ஒழுக்கம், பொறுமை மற்றும் அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த பண்புகள் அவர்களின் உடற்தகுதியிலும் வெளிப்படுகின்றன. மகர ராசிக்காரர்கள் தங்கள் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தை தங்கள் வாழ்க்கையின் நீண்டகால முதலீடாகக் கருதுகின்றனர், மேலும் அதைப் பராமரிக்க நிலையான முயற்சியில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.
வழக்கமான உடற்பயிற்சிகள், யோகா அல்லது சீரான உணவுமுறை என எதுவாக இருந்தாலும், மகர ராசிக்காரர்கள் வயதாகும்போது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்கிறார்கள். மகர ராசிக்காரர்களின் நடைமுறை இயல்பு, பல ஆண்டுகளாக அவர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் உடற்தகுதியை மாற்றியமைக்க உதவுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் தீவிரம் மற்றும் அதீத ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர்கள், மேலும் இது உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்த அவர்களின் அணுகுமுறையிலும் தொடர்கிறது. அவர்கள் பெரும்பாலும் தங்கள் வரம்புகளைத் தாண்டும் சவாலான உடல் செயல்பாடுகளில் ஈர்க்கப்படுகிறார்கள், மேலும் இந்த உந்துதல் அவர்கள் வயதால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
தீவிரமான உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் அல்லது கடுமையான டயட் என எதுவாக இருந்தாலும், விருச்சிக ராசிக்காரர்கள் உச்சபட்ச உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தங்கள் வயதிற்கு மீறி முயற்சிக்கிறார்கள். இந்த விடாமுயற்சியும், உறுதியும் அவர்கள் வயதாகும்போது இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












