Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
இந்த 5 ராசிக்காரங்க உயிரே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மனிதர்களாக பிறந்த அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் தவறு செய்வார்கள், ஆனால் அதை திருத்திக் கொள்பவர்களே மற்றவர்களுக்கு பிடித்தவர்களாகவும், மற்றவர்களால் மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் தாங்கள் என்ன தவறு செய்தாலும் ஒருபோதும் மன்னிப்பு கேட்காத பிடிவாதக்காரர்களை நாம் நிச்சயம் வாழ்க்கையில் சந்தித்து இருப்போம்.
உலகில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் நீங்கள் அவர்களுக்குக் காட்டினாலும், அவர்கள் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள் மற்றும் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் பிடிவாதத்திற்கும், தற்பெருமைக்கும் பெயர் பெற்றவர்கள். எவ்வளவு பெரிய ஆதாரங்களை எதிர்கொண்டாலும், தங்கள் மீதுதான் தவறு என்று ஒப்புக்கொள்வதை அவர்கள் வெறுக்கிறார்கள். மன்னிப்பு கேட்பது அவர்களை பலவீனமாக உணர வைக்கிறது, எனவே அவர்கள் தங்கள் தவறுகளை நியாயப்படுத்த அல்லது பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இதனால் ஆரோக்கியமான உறவைப் பேணுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் வலுவான விருப்பத்திற்கும், பின்வாங்க மறுக்கும் பிடிவாதத்திற்கும் பெயர் போனவர்கள். அவர்கள் எதற்கெடுத்தாலும் வாதிடக்கூடியவர்கள் மற்றும் தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், மன்னிப்பு கேட்பது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்கள் உறவுகளை விட தங்கள் கருத்து சரியென்று நிரூபிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள், இது உறவுகளை சிதைக்க வழிவகுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பெருமிதமும், அகங்காரமும் கொண்டவர்கள், இதனால் அவர்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் கடினம். அவர்கள் தங்கள் இமேஜை இழக்க அல்லது பலவீனத்தை வெளிப்படுத்துவதை வெறுக்கிறார்கள், எனவே அவர்கள் பெரும்பாலும் தங்கள் தவறுகளை மறுக்கிறார்கள் மற்றும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள். இது மற்றவர்களுடன் ஆழமான, அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதை கடினமாக மாற்றுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரம் மற்றும் வலுவான நம்பிக்கைக்கு புகழ்பெற்றவர்கள். அவர்கள் மன்னிப்பு கேட்பதை தங்கள் ஆழ்மனதிலிருந்து வெறுக்கிறார்கள், இது அவர்களின் பலவீனத்தை அனைவருக்கும் வெளிப்படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது அவர்கள் அதனை அவமானமாகக் கருதுகிறார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தற்பெருமை மற்றும் பரிபூரணத்தன்மை கொண்டவர்கள், அவர்கள் தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்வது மிகவும் கடினம். மன்னிப்பு கேட்பது மற்றும் தவறுகளை திருத்திக் கொள்வதை விட அவர்கள் தங்கள் நற்பெயரைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கலாம். இது உறவுகளில் விரிசல் மற்றும் நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
