Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
இந்த 3 ராசிக்காரங்க எளிதாக அதிகாரத்தை கைப்பற்றும் பலசாலிகளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அனைவருக்கும் அதிகாரமிக்க இடத்தில் இருக்க வேண்டுமென்பது விருப்பமாக இருக்கும். அதிகாரம் பல வழிகளில் வருகிறது, பதவியால் கிடைக்கும் அதிகாரம், நிதி ஆதிக்கம், அல்லது தாங்கள் இருக்குமிடத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் திறன் போன்றவையாகும். இந்த திறன்கள் அனைவரிடமும் இருக்காது, வெகுசிலரிடம் மட்டுமே இருக்கும்.
அவர்களின் நம்பிக்கை, தந்திரமான சிந்தனை மற்றும் வீழ்த்த முடியாத லட்சியம் அவர்களை சராசரி மனிதரிடமிருந்து வேறுபடுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிக்காரர்கள் இந்த திறன்கள் அனைத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் வாய்ப்புகளுக்காக காத்திருக்க மாட்டார்கள், தங்களுக்கான வாய்ப்புகளை தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகாரத்தை எளிதில் கைப்பற்றுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த ராசியில் பிறந்தவர்தான். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் விரைவான புத்திசாலித்தனம், தகவமைப்புத் திறன் மற்றும் பேச்சாற்றலுக்கு பெயர் பெற்றவர்கள், இவை ஒருவரை செல்வாக்கு மிக்க நபர்களாக எளிதில் மாற்றும் பண்புகளாகும். அவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் நம்ப முடியாத அளவிற்கு திறமையானவர்கள்.
மிதுன ராசிக்காரர்களை சக்திவாய்ந்தவர்களாக மாற்றுவது அவர்களின் சுறுசுறுப்பும், ஆற்றலும்தான். அவர்கள் உரையாடலில் சிரமமின்றி தங்களை முன்னிலைப்படுத்துவார்கள். அவர்களின் சுறுசுறுப்பான ஆன்மா பெரிய கூட்டத்தை ஈர்க்கிறது மற்றும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அவர்களின் அடுத்த நகர்வை எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. அதுவே அவர்களின் சிறந்த வெற்றிக்கு காரணமாக இருக்கும்.
துலாம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ராசியில் பிறந்தவர்தான். அவர் அதிகாரம் செலுத்துவது மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிறந்தவராக இருக்கிறார். துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் சமநிலை மற்றும் நியாயத்துடன் தொடர்புடையவர்கள், ஆனால் அந்த சமநிலை உணர்வு தனிப்பட்ட லட்சியத்தை நோக்கிச் செல்லும்போது, அவர்களை திட்டமிடுவதில் சிறந்தவர்களாக மாற்றலாம். அவர்களின் உண்மையான ஆற்றல் அவர்களுடைய ராஜதந்திரத்தில் உள்ளது.
தங்கள் தேவைகளை மென்மையாகவும், உறுதியாகவும் எப்படி சொல்வது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எந்தவொரு சூழலையும் தங்களுக்கு சாதகமானதாக மாற்றும் கலை அவர்களிடம் உள்ளது. அவர்களின் ராஜதந்திரம் அவர்களின் ஒரு பலம் என்றால் அவர்களுக்குள் இருக்கும் கருணை மற்றொரு நல்ல குணமாகும். இந்த இரண்டும் அவர்களை எளிதில் அதிகாரத்தை கைப்பற்ற உதவுகிறது.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் ஒரு ஆதிக்க குணத்தை வெளிப்படுத்துகிறார்கள், இவை பெரும்பாலும் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பண்புகளாகும். அவர்களின் ஆற்றலும், ஆர்வமும் அவர்களை எளிதில் கவனத்தின் மையமாக மாற்றுகிறது.
அவர்களின் அதிகார முத்திரை ஆடம்பரமானது ஆனால் உண்மையானது, அவர்கள் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்து வருகிறது. அவர்களின் அரச கம்பீரமும், வசீகரமும் அவர்களை எப்போதும் அதிகாரத்தில் ஒளிரச் செய்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
