Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
இந்த 3 ராசிக்காரங்களுக்கு அவங்களுக்கு பிடிச்ச கணவன்/மனைவி கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்காம்... உங்க ராசி என்ன?
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்புமுனையாகும். அதுவரை இருந்த உங்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு முற்றிலும் வேறொரு பரிமாணத்திற்கு வாழ்க்கையை மாற்றக்கூடும். இந்த சூழ்நிலையில் சரியான வாழ்க்கைத்துணையை அடைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அவசியமானதாகும்.
அனைவருமே சரியான வாழ்க்கைத் துணையை அடைய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாக மாற்றும், அவர்களைப் புரிந்துகொள்ளும், ஆழமான தொடர்பை பகிர்ந்துகொள்ளும் ஒருவரைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை கிடைக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில அதிர்ஷ்ட ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வாழ்க்கைத்துணையை அடையும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. வாழ்க்கையில் தங்களின் சரியான துணையை அடையும் அதிர்ஷ்டமுள்ள ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் திருமணம் என்று வரும்போது மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அவர்களின் இயல்பான வசீகரம், சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கான விருப்பம் அவர்களை சிறந்த வாழ்க்கைத்துணையாக மாற்றுகின்றன, மேலும் அவர்கள் தங்களைப் போலவே அர்ப்பணிப்பு மற்றும் அன்புள்ளம் கொண்ட வாழ்க்கைத்துணையை ஈர்க்க முனைகிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் இயல்பிலேயே ரொமான்டிக்கானவர்கள் மற்றும் அமைதியான உறவுகளை வளர்ப்பதற்கான அவர்களின் திறன், அவர்களைப் போலவே அக்கறையுள்ள ஒருவரைக் கண்டுபிடிப்பதை உறுதிசெய்கிறது. அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், இது திருமண வாழ்க்கைக்கு மிகவும் ஏற்றதாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் உறவுகளில் விசுவாசம், ஸ்திரத்தன்மை மற்றும் ஆர்வத்தை மதிக்கிறார்கள். அவர்கள் காதலில் ஒருபோதும் அவசரப்பட மாட்டார்கள், ஆனால் அவர்கள் காதலில் இறங்கும் போது அதில் தீவிரமாக இறங்குகிறார்கள்.
அவர்களின் பொறுமை மற்றும் உறுதியான இயல்பு பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு ஆதரவாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் வாழ்க்கைத்துணையை ஈர்க்க வழிவகுக்கிறது. ரிஷப ராசிக்காரர்களின் பொறுமையான மற்றும் நிலையான அணுகுமுறை என்பது பொதுவாக அவர்களின் உண்மையான, நீடித்த அன்பைப் பாராட்டும் வாழ்க்கைத்துணையை அடைய உதவுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் காதல் என்று வரும்போது அதிக அக்கறை மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்கள். அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிப் புரிதல் மற்றும் அக்கறையுள்ள இயல்பு பெரும்பாலும் அவர்களைப் போலவே அன்பான மற்றும் அக்கறையுள்ள வாழ்க்கைத்துணையை ஈர்க்கிறது.
கடக ராசிக்காரர்கள் வலுவான உணர்ச்சிப் பிணைப்புகளை உருவாக்குவதற்கு அறியப்படுகிறார்கள், மேலும் நிலையான, அன்பான சூழலை வழங்குவதற்கான அவர்களின் திறன், வீடு மற்றும் குடும்பத்தை மதிக்கும் ஒருவருக்கு சரியான பொருத்தமாக அமைகிறது. இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் நீடித்த, அன்பான உறவைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாழ்க்கைத்துணையை அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

