Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசி ஆண்களுக்கு காதல் திருமணம் நடக்க அதிக வாய்ப்பிருக்காம்...உங்க ராசி இந்த அதிர்ஷ்ட ராசிகளில் இருக்கா?
திருமணம் என்றாலே இப்போது மக்கள் அஞ்சத் தொடங்கிவிட்டனர். திருமணம் ஒருவருக்கு அளிக்கும் கூடுதல் பொறுப்புகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நினைத்து மக்கள் திருமண உறவில் நுழைய தயங்குகின்றனர். ஆனால் உண்மையில் திருமண உறவு என்பது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாகும்.
திருமண உறவை விரும்பும் பலரும் பெரும்பாலும் தங்களின் திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் காதல் திருமணம் நடக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் அவர்கள் காதலிக்கும் நபர்களை முழுமையாக நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் ஒவ்வொரு உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதைத் தக்க வைத்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார்கள். மேஷ ராசிக்காரர்களில் பெரும்பாலானோர் தங்களின் சிறந்த நண்பர் அல்லது தங்களுடன் பணிபுரியும் நன்கு பழகிய ஒருவரை காதலித்து அவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் பிடிக்காது. இவர்களின் காதல் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் உறுதியானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். இவர்கள் இயல்பிலேயே மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்து விட்டால், அவர்களின் முடிவை யாராலும் மாற்ற முடியாது.
தங்களின் பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக் கொள்ளும் உறுதி இவர்களிடம் உண்டு. அதற்கு அவர்களின் ராசி முக்கிய காரணமாக இருக்கும். அவர்கள் எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். மேலும், தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வேடிக்கையான குணம் மற்றும் சிறந்த பேச்சாற்றலால், அவர்கள் பலரை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலை மற்றும் நண்பர்கள் விஷயத்தில் பிடிவாதமாக இருக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் தங்கள் திருமண விஷயத்தில் தங்களின் முடிவே இறுதியென்று நினைப்பார்கள்.
அவர்கள் தங்கள் கோபத்தைத் தாங்கத் தயாராக உள்ளவர்களை மட்டுமே திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் நன்கு அறிந்த ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். காதல் திருமணத்திற்கான வாய்ப்புகள் மிதுன ராசியினருக்கு மிகவும் அதிகம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விரும்பியபடி வாழ்கிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வார்கள். இவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலிருந்து விலகி, தங்களுக்கு விருப்பமான துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணைக்கு துணையாக இருக்கிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழ்கிறார்கள். அவர்களைப் போலவே எண்ணம் கொண்ட மற்றும் புரிந்துகொள்ளும் ஒருவரை விரும்புகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

