உங்க பிறந்த மாதம் என்னனு சொல்லுங்க... எந்த வயசுல உங்களுக்கு கல்யாணம் நடக்கும்னு நாங்க சொல்றோம்...!

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத மற்றும் அவசியமான ஒரு உறவாகும். சிலர் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள், சிலர் செட்டிலாகிவிட்டு திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள், சிலரோ இந்த உறவை முற்றிலும் புறக்கணிக்க நினைப்பார்கள்.

இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது, ஆனால் நம் திருமண வாழ்க்கையை நிர்ணயிப்பதில் ஜோதிடம் முக்கியப்பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. ஜோதிடத்தில் முக்கியப்பங்கு ஒருவரின் பிறந்த ராசி, நாள் போலவே ஒருவர் பிறந்த மாதமும் வகிக்கிறது. அதன்படி ஒருவரின் பிறந்த மாதம் அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதை கணிக்க முடியும். இந்த பதிவில் ஒருவரின் பிறந்த மாதத்தின் படி அவர்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

What Is The Perfect Age To Get Married According To Your Birth Month

ஜனவரி

நீங்கள் பிறந்த மாதம் ஜனவரியாக இருந்தால், நீங்கள் வலுவான விருப்பமும் லட்சியமும் கொண்ட நபராக இருக்கலாம். உங்களின் சிறந்த திருமண வயது சுமார் 28 முதல் 32 வரை ஆகும். இந்த வயது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உணர்ச்சிரீதியான முதிர்ச்சி போன்றவற்றுக்கு சரியானதாக இருக்கிறது.

பிப்ரவரி

காதலின் மாதமான பிப்ரவரி, இயற்கையாகவே அந்த மாதத்தில் பிறந்தவர்களை ரொமான்டிக்கானவர்களாக மாற்றுகிறது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை மதிக்கிறார்கள் மற்றும் அவர்களின் ஆழ்ந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் துணையைத் தேடுகிறார்கள். பிப்ரவரியில் பிறந்தவர்கள் திருமணம் செய்ய ஏற்ற வயது அவர்களின் 20 களின் ஆரம்பமாகும். இது உணர்ச்சிரீதியான முதிர்ச்சியுடன் இளமைக் குதூகலத்துடன் திருமணத்திற்குள் நுழைய வழிவகுக்கிறது.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த நபர்கள் பெரும்பாலும் படைப்பாற்றல்மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை ஒரு தனித்துவமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு மாற்றிக்கொள்ளும் ஒரு உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்ற வயது 20களின் பிற்பகுதி, அதாவது 25 முதல் 30 வரை. திருமணத்தின் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு இந்த வயதில் அவர்கள் தயாராக இருப்பார்கள்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களின் நம்பிக்கை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் திருமணத்திற்கு ஏற்ற வயது 25 மற்றும் 30 க்கு இடையில் இருக்கும் என்று ஜோதிடம் கணித்துள்ளது. இந்த வயதில், உங்கள் காதல் போக்குகள் உங்கள் துணையுடன் இணைந்து, அக்கறையும் உணர்ச்சியும் கொண்ட உறவை உருவாக்குகின்றன.

மே

மே மாதம் பிறந்தவர்கள் வலுவான விருப்பத்தையும் சவால்களை சமாளிக்கும் உறுதியையும் கொண்டுள்ளனர். மே மாதத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சிறந்த வயது 20களின் பிற்பகுதியில் இருந்து 30களின் முற்பகுதியில் இருக்கும். இந்த காலகட்டம் அவர்கள் இணக்கமான மற்றும் நீடித்த திருமண உறவைக் கட்டியெழுப்ப உதவுகிறது.

ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஆர்வமுள்ள மற்றும் தொடர்பு கொள்ளும் தன்மைக்கு பெயர்பெற்றவர்கள். அவர்கள் அறிவார்ந்த தூண்டுதல் மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஜூன் மாதத்தில் பிறந்த நபர்களுக்கு சிறந்த திருமண வயது 20களின் நடுப்பகுதியில் உள்ளது, அதாவது 24 முதல் 27 வரை. இந்த வயது அவர்கள் தங்கள் துணையுடன் ஆழமான உணர்ச்சிரீதியான தொடர்பை உருவாக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

ஜூலை

ஜூலை மாதத்தில் பிறந்தவர்க்ளுக்கு சிறந்த திருமண வயது உங்கள் 27 மற்றும் 31 க்கு இடையில் உள்ளது. ஜூலை மாதம் காதல் உறவுக்கு சிறந்த மாதமாக இருக்கும், மேலும் இந்த வயது உங்கள் திருமண உறவுக்கு சிறந்ததாக இருக்கிறது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட்டில் பிறந்தவர்கள் திறமையான தலைவர்களாக இருப்பார்கள். ஆகஸ்ட்டில் பிறந்த நபர்களுக்கு சிறந்த திருமண வயது 20களின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை இருக்கும், அதாவது 25 முதல் 29 வரை. இந்த காலகட்டம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அடையாளங்களை உருவாக்க அனுமதிக்கிறத.

செப்டம்பர்

செப்டம்பரில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மை வாய்ந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையை முறையான கண்ணோட்டத்துடனும், சிக்கலைத் தீர்க்கும் ஆர்வத்துடனும் அணுகுகிறார்கள். செப்டம்பரில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சிறந்த வயது 20களின் பிற்பகுதியில் உள்ளது.

அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களின் சிறந்த திருமண வயது 30 முதல் 35 வரை இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த வயதில் திருமணம் செய்து கொள்வது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

நவம்பர்

நவம்பரில் பிறந்தவர்கள் அதிக மனஉறுதி கொண்டவர்கள், அவர்கள் வாழ்க்கையின் மர்மங்களின் ஆழத்தை ஆராய்வதற்கு அவர்கள் பயப்படுவதில்லை. நவம்பரில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சிறந்த வயது 20களின் பிற்பகுதியில் உள்ளது, அதாவது 25 முதல் 29 வரையாகும். இந்த வயதில் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

டிசம்பர்

டிசம்பரில் பிறந்த நபர்கள் சாகச உணர்வையும், வாழ்க்கையில் தீவிர ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரு உற்சாகமான அணுகுமுறையுடன் சவால்களை அணுகுகிறார்கள் மற்றும் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் துணையைத் தேடுகிறார்கள். டிசம்பரில் பிறந்த நபர்களுக்கு சிறந்த திருமண வயது 20களின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, November 20, 2024, 21:02 [IST]
Desktop Bottom Promotion