Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 22 செப்டம்பர் 2024 முதல் 28 செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் வேலையை எளிதில் செய்து முடிப்பார்கள். நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லம் சம்பள உயர்வு கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும், தலைவலி அடிக்கடி வந்து தொந்தரவு செய்யலாம்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இந்த வாரத்தில் உங்களின் திட்டங்கள் நல்ல பலனைத் தரும். உங்களின் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். ஆனால் பணிபுரிபவர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து, சூழ்நிலையை புரிந்து எந்த பிரச்சனையையும் பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை, பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். செயல்திறன் மேம்படும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்கள் காதலில் விழ வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை யோகா, தியானம் போன்றவற்றில் நேரத்தை செலவிட்டால், உடல் மற்றும் மனம் நன்றாக இருக்கும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடலாம். வியாபாரிகளுக்கு லாபமோ, நஷ்டமோ ஏற்படாது. உறவுகளைப் பொறுத்தவரை சற்று மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
எண் 5
5, 14, 23 அகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நற்பெயரை வாங்குவீர்கள். வியாபாரிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அதிக லாபத்தைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் திறமையால் வேலையில் பிரகாசிக்கலாம். வணிகம் செய்பவராக இருந்தால், நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலையில் ஆர்வத்தை இழக்க நேரிடும். வியாபாரிகளுக்கு இந்த வாரத்தில் அதிக லாம் கிடைக்காது. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்ப சூழல் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரத்தில் செரிமான பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படக்கூடும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் போகலாம். வணிகர்கள் இந்த வாரத்தில் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். புரிதல் இல்லாததால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால் மற்றும் மூட்டுக்களில் வலியை சந்திக்க நேரிடும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவில் பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வலுவான நோயெதிர்ப்பு சக்தியின் காரணமாக நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











