Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2025 ஜூன் 30 ஆம் தேதி முதல் 2025 ஜூலை 05 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். நிதி ரீதியாக, வாரத்தின் நடுப்பகுதியில் நிலைமை சிறப்பாக இருக்கும். திடீரென்று எங்கிருந்தோ பணம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிக்கப்படும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நீதிமன்ற விவகாரங்கள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இந்த வாரம் மங்களகரமானதாக இருக்கும். வியாபாரிகள் விரும்பிய லாபத்தை பெறுவார்கள். கூடுதல் வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் இனிமையாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். வியாபாரத்தில் விரும்பிய லாபத்தைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். செல்வம் பெருகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திடீரென்று எங்கிருந்தோ எதிர்பாராத பணம் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். காதல் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். உறவு வலுவடையும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் எந்த வேலையையும் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறு கவனக்குறைவும் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் ஒருங்கிணைப்பை பேண வேண்டும். எந்த வேலையையும் ஒத்திவைப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத விஷங்களில் உங்களின் பெரும்பாலான நேரம் செலவிடப்படும். இந்த வாரத்தின் நடுப்பகுதியில் சில பெரிய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும். நிதி நெருக்கடிகளால் அவதிப்படக்கூடும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழிலில் பல தடைகளை சந்திப்பீர்கள். வாரத்தின் முதல் பாதி பரபரப்பாக இருக்கும். சிறு வேலையை முடிக்கவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாரத்தின் நடுவில் எதிரிகளால் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த வாரத்தில் எந்த வேலையையும் கவனமாக செய்யுங்கள். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தவறுதலாக கூட ஆபத்தான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மோசமாக இருக்கும். குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கலாம். உங்களால் நிறைவேற்ற முடியாத எந்த வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள். காதல் விவகாரங்களில் கவனமாக இருங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பைப் பேணுங்கள். உங்கள் நடத்தையை நல்ல முறையில் வைத்திருங்கள். வணிகர்கள் வாரத்தின் முதல் பாதியில் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். பெரிய வணிக முடிவுகளை எடுப்பதற்கு முன் அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். இந்த வாரம் உடன் பிறந்தவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்கும்போது பெற்றோரின் ஆலோசனையைப் புறக்கணிக்காதீர்கள். எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலும் உங்கள் வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications