Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாவும் இருக்கப்போகுது... உங்க ராசிக்கு எப்படி?
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் 2024 அக்டோபர் 05 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பார்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நீங்கள் எவ்விதமான மாற்றத்தையும் விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் முடிவெடுக்கும் திறன் உயர் அதிகாரிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் பெரிய ஆர்டரைப் பெறலாம். வேலை சம்பந்தமான பிரச்சனை இருந்தால் உங்களது பிரச்சனை தீர்க்கப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். வெளிநாட்டில் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். தாராளமாக செலவு செய்வீர்கள். பழைய கடனை அடைப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் முற்றிலும் நன்றாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் எல்லா சிரமங்களையும் சமாளிப்பீர்கள். பணியிடத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். எளிதில் முடிக்கும் காரியங்கள் கூட தடைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலைமையை மேம்படுத்த கடினமாக உழைக்க வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரத்தில் வயிறு தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை பிஸியாக இருக்கும். உங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வியாபாரிகள் முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள். கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்தபடி முடிவுகள் கிடைக்காமல் ஏமாற்றமடையலாம். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த வாரம் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
