Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 4 ராசிகளுக்கு மோசமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 நவம்பர் 17 ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 23 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடலாம். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். வீடு எப்போதும் கலகலவென்று இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த வாரம் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். நண்பர்களின் உதவியாக புதிய வேலைக்கு மாறுவதோடு, அதில் நல்ல வெற்றியையும் பெறுவீர்கள். இந்த வாரத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் நடத்தையில் ஏற்படும் பெரிய மாற்றத்தால் எதிரிகளையும் மயக்குவீர்கள். அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உங்களின் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். இந்த வாரத்தில் சிறப்புமிக்க ஒருவரை சந்திக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பெரிய நிதி உதவியால் இந்த வாரம் நிதி நிலை நன்றாக இருக்கும். பெற்றோர், வாழ்க்கைத் துணை மற்றும் குந்தைகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் மனம் ஒருவித குழப்பத்துடன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் உங்களின் நடத்தை மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளில் சிக்கி தவிக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் ஒருவித குழப்பத்துடனேயே இருப்பீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் உங்களை புறக்கணிக்கலாம். இதனால் பணியிடத்தில் சில முக்கியமான திட்டங்களில் நீங்கள் பங்குபெற முடியாமல் போகலாம். சில விஷயங்களால் அதிகம் கவலைப்படுவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகளால் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று ஒரு பெரிய விவாதத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருக்கலாம். இந்த வாரத்தில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். எந்த சர்ச்சைகளில் இருந்தும் விலகி இருக்க அறிவுத்தப்படுகிறது. குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் நன்கு புரிந்து செய்யுங்கள். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் உங்களின் கவனக்குறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். பணியிடத்தில் உங்கள் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடலாம். தேவையற்ற சச்சரவுகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். சொத்து விஷயத்தால் வீட்டில் உடன் பிறந்தவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
