Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
வார ராசிபலன் (29 December 2024 To 04 January 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க நிறைய சவால்களை சந்திப்பாங்க..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 டிசம்பர் 29 ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுபெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடனான ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். இதன் மூலம் வேலை வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். இந்நிலையில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிபுரிபவர்கள் புதிய திட்டங்களில் வேலை செய்யலாம். புதிய நட்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்க்கையில் பல சவால்களை சந்திப்பீர்கள். ஆனால் பொறுமையையும், கடின உழைப்பையும் மேற்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை மேம்படும். ஆனால் முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். மனம் அமைதியுடன் இருக்க தியானத்தில் ஈடுபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தலைமைத்துவ திறன்கள் பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது உறவுகளை பலப்படுத்தும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் பெருமளவில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பணியிடத்தில் புதிய சவால்களை சந்திக்க சந்திக்க நேரிடும். இருப்பினும் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை இந்த வாரத்தில் வலுவாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உடல் நிலை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு புதிய திட்டங்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இது குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவை வலுவாக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கலாம். நிதி விஷயங்களில் சற்று புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் திட்டங்கள் நல்ல பாராட்டைப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் , அமைதியும் அதிகரிக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். முதலீடு செய்வதற்கான வலுவான வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications